உள்ளடக்கத்துக்குச் செல்

பல்லணு அயனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
sulfate(சல்பேற்று) அன்னயன் ஒரு பல்லணு அயனாகும்

பங்கீட்டு வலுப்பிணைப்பால் பிணைக்கப்பட்ட இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அணுக்களைக் கொண்ட அயனி பல்லணு அயனி அல்லது மூலக்கூற்று அயனி என அழைக்கப்படும். இவ்வயனில் உள்ள அனைத்து அணுக்களும் ஒன்றாக இணைந்து ஏற்றமுள்ள ஒரு தனித் தொகுதி / ஒரு அயனாகத் தொழிற்படுகின்றன. பல்வேறு பல்லணு அயன்கள் எம் சூழலில் உள்ளன. சில நேரேற்றமுள்ள கற்றயன்களாகவும் (உ-ம்: அமோனியம் அயன்- NH4+), சில மறையேற்றமுள்ள அன்னயன்களாகவும் (உ-ம்: சல்பேற்று அயன் SO42- உள்ளன.

இரசாயனவியலில் ஓரணு அயனிகள் போலவே பல்லணு அயன்களும் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. இரசாயனவியலில் பயன்படுத்தப்படும் சல்பூரிக் அமிலம் (H2SO4), நைத்திரிக் அமிலம் (HNO3) என்பனவற்றில் பல்லணு அயன்கள் உள்ளன. இவ்வாறான அயனிச் சேர்வைகளை நீரில் கரைக்கும் போது அவற்றை ஆக்கும் அயன்களாகப் பிரிகின்றன. உதாரணமாக நைத்திரிக் அமிலத்தை நீருடன் சேர்த்தால் H+ மற்றும் NO3- அயன்களாகப் பிரிகின்றது.

பெயரீட்டு முறை[தொகு]

ஆக்சிஅன்னயன்களுக்கு விசேட பெயரீட்டு முறை உள்ளது. ஒரு மூலகத்துடனே ஆக்சிசன் ஒரே ஏற்றத்துடன் பல்வேறு பல்லணு அயன்களை உருவாக்குவதால் இப்பெயரீட்டு முறை உள்ளது. இரசாயனப் பெயரீட்டு முறை இங்கு ஆங்கிலத்திலேயே வழங்கப்பட்டுள்ளது. அடைப்புக்குள் தமிழில் உள்ளது. -ate என முடியும் அயனை மையமாகக் கொண்டு ஏனைய அன்னயன்களுக்கும் பெயர் வழங்கப்படுகின்றது. -ate என்பதால் குறிப்பிடப்படும் அயனை விட ஒக்சிசன் எண்ணிக்கை ஒன்று அதிகமெனில் -per_ate எனவும், ஒன்று குறைவெனில் -ite எனவும் பெயரிடப்படுகின்றது. -ite அயனை விட ஒரு ஆக்சிசன் குறைவாயின் -hypo_ite எனவும் வழங்கப்படும். அயனில் ஆக்சிசன் அணுவே இல்லையெனில் அந்த ஓரணு அயன் -ide என வழங்கப்படும்.

ஒக்சியேற்றும் நிலை −1 +1 +3 +5 +7
அன்னயனின் பெயர் குளோரைடு ஐப்போகுளோரைட்டு குளோரைட்டு குளோரேட்டு பரகுளோரேட்டு
மூலக்கூற்று வாய்பாடு Cl
ClO
ClO
2
ClO
3
ClO
4
கட்டமைப்பு குளோரைடு அயனி ஐப்போகுளோரைட்டு அயனி குளோரைட்டு அயனி குளோரேட்டு அயனி பரகுளோரேட்டு அயனி

ஐதரசன் உள்ள அன்னயன்களுக்கு பழைய பெயரீட்டு முறைப்படி bi- (இரு) என்பது சேர்க்கப்பட்டது. IUPACஇன் புதிய பெயரீட்டு முறைப்படி hydrogen- (ஐதரசன்-) என்பதே தற்போது சேர்க்கப்படுகின்றது. உதாரணம்: HSO4- இற்கான பெயரீடு:

  • பழைய முறை: bisulfate (இரு சல்பேற்று)
  • புதிய முறை: hydrogensulfate (ஐதரசன் சல்பேற்று)

மேற்கூறிய பெயரிடல் முறைகள் நைதரசன், கந்தகம், குளோரின், பொசுபரசு ஆகியவற்றின் அன்னயன்களுக்கும், ஆக்சி அன்னயன்களுக்கும் மிகவும் பொருத்தமானதாகும்.

எடுத்துக்காட்டுகள்[தொகு]

அன்னயன்கள்
அசிட்டேட்டு (ethanoate) CH
3
COO
or C
2
H
3
O
2
அசிட்டைலைடு C2−
2
பென்சோவேட்டு C
6
H
5
COO
or C
7
H
5
O
2
கார்பனேட்டு CO2−
3
குரோமேட்டு CrO2−
4
சிட்ரேட்டு C
6
H
5
O3−
7
சயனைடு CN
ஐப்போகுளோரைட்டு ClO
குளோரைட்டு ClO
2
குளோரேட்டு ClO
3
பரகுளோரேட்டு ClO
4
டைகுரோமேட்டு Cr
2
O2−
7
ஈரைதரசன் பொஸ்பேட்டு H
2
PO
4
ஐதரசன் கார்பனேட்டு (பைகார்பனேட்டு) HCO
3
ஐதரசன் சல்பேட்டு (பைசல்பேட்டு) HSO
4
ஐதரசன் பொஸ்பேட்டு HPO2−
4
ஐதரொக்சைடு OH
நைட்ரைட்டு NO
2
நைத்திரேட்டு NO
3
பெரொக்சைடு O2−
2
பரமங்கனேட்டு MnO
4
பொஸ்பேட்டு PO3−
4
சல்பைட்டு SO2−
3
சல்பேட்டு SO2−
4
கற்றயன்கள்
அமோனியம் NH+
4
பொசுபோனியம் PH+
4
ஐதரோனியம் H
3
O+
புளூரோனியம் H
2
F+
மெர்க்குரி(I) Hg2+
2
துரொப்பீலியம் C
7
H+
7
குவானிடீனியம் C(NH
2
)+
3
"https://ta.wikipedia.org/w/index.php?title=பல்லணு_அயனி&oldid=1755071" இலிருந்து மீள்விக்கப்பட்டது