உள்ளடக்கத்துக்குச் செல்

பல்முனைத் தொடு இடைமுகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பல்முனைத் தொடு இடைமுகம்

பல்முனைத் தொடு இடைமுகம் (Multi-touch Interface) என்பது ஒரே நேரத்தில் பல புள்ளிகளில் தொடுவதை புரிந்து செயற்படத்தக்க கணினி இடைமுக தொழில்நுட்பம் ஆகும். இதனால் பயனர்கள் பல விரல்களைப் பயன்படுத்தி சாதனங்களுடன் தொடர்பு கொள்ள முடியும். இதன் மூலம் இரண்டு விரல்களால் திரையை பெரிதாக்குதல் (pinch to zoom), சுருக்குதல் அல்லது சுழற்றுதல் போன்ற பல்வேறு செயல்பாடுகளைச் செய்ய முடியும். இந்த தொழில்நுட்பம் 1970களில் உருவாக்கப்பட்டு 2007இல் ஆப்பிள் ஐபோன் வெளியான பிறகு உலகளவில் பிரபலமடைந்தது. இது பொதுவாக மின்சாரக் கொள்ளளவு உணர்திறன் (capacitive sensing) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செயல்படுத்தப்படுகிறது.

இயங்கும் விதம்

[தொகு]

பல்முனைத் தொடு இடைமுக தொழில்நுட்பம் பல வழிகளில் செயல்படுகிறது. அவற்றில் மிக பொதுவானது மின்சாரக் கொள்ளளவு உணர்திறன் ஆகும். இதில் தொடுதிரையின் மேற்பரப்பில் மின்சாரக் கொள்ளளவு வலையமைப்பு உள்ளது. ஒரு விரல் அல்லது கடத்தும் பொருள் திரையைத் தொடும்போது அந்த இடத்தில் உள்ள மின்சாரக் கொள்ளளவில் ஒரு மாற்றம் ஏற்படுகிறது. இந்த மாற்றத்தை உணர்ந்து தொடுதிரை அந்த தொடுதலின் இருப்பிடத்தை அடையாளம் காண்கிறது. மல்டி-டச் தொழில்நுட்பத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தொடுதல்கள் ஏற்படும்போது இந்த அமைப்பு ஒவ்வொரு தொடுதலின் இருப்பிடத்தையும் தனித்தனியாகக் கண்டறிகிறது. பின்னர் இந்த தகவலைப் பயன்படுத்தி கணினி பல்வேறு சைகைகளை (gestures) அடையாளம் கண்டு அதற்குரிய செயல்பாடுகளைச் செய்கிறது.

தற்போது இருக்கும் தொடுதிரை தொழில்நுட்பத்தில் ஒரு முனையில் மட்டுமே தொட்டு உள்ளீடு வழங்குவது சாத்தியம். பல்முனை தொடு இடைமுகம் அடுத்தகட்ட நுட்பம் எனலாம்.

பல வகைகளில் உள்ளீடு புரிந்துகொள்ளப்படுகிறது. வெப்பம், விரலின் அழுத்தம், நிகழ்பட உள்ளீடு, infrared ஒளி, optic catpture, மின் தூண்டல், ultrasonic receivers, transducer microphones, laser rangefinders, and shadow capture ஆகியவை சில வழிகள் ஆகும்.[1].

மேற்கோள்கள்

[தொகு]
  1. Pennock, Jacob, Tabrizi, M.H.N, 2008, A Survey of Input Sensing and Processing Techniques for Multi-Touch Systems, CDES'08
"https://ta.wikipedia.org/w/index.php?title=பல்முனைத்_தொடு_இடைமுகம்&oldid=4333555" இலிருந்து மீள்விக்கப்பட்டது