பல்பொருட் சூளாமணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
                     பல்பொருட் சூளாமணி

அறிமுகம்

    இது ஒரு தமிழர் நிகண்டு. இதன் ஆசிரியர் ஈசுவர பாரதியார். இவர் தந்தை சிதம்பர பாரதியார். இவர் ஊர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மடசை என்பதாகும்.இக்குறிப்புகளை பாயிரச் செய்யுள் மூலம் அறிந்து கொள்ளலாம்.

மடசை

    மடசை என்னும் ஊர் திருவில்லிபுத்தூருக்கருகில் மடலார் வளாகம்என்று அறிந்து கொள்ளலாம்.

நூருல் பிரிவு

    ஈஸ்வர பாரதியார் தம் நூலை அமர கோசம் என்னும் நூலைப் பின்பற்றி மூன்று காண்டங்களாக பிரித்துள்ளார்.
        1.முதற் காண்டம் ஒரு சொல் பல் பொருட் பெயர்த்தொகுதி. இதிலுள்ள சொற்களின் எண்ணிக்கை 2800.
        2.இரண்டாவது காண்டம் ஒரு சொல் பல் பொருட் பெயர்த்தொகுதி.இதிலுள்ள சொற்களின் எண்ணிக்கை 1465.
        3.மூன்றாம் காண்டமான பல்பொருட் கூட்டத்தொகுதி பெயர் தொகுதி கிடைக்கவில்லை.

சிறப்பு

    இந்நூலிற் சொற்கள் அகர வரிசையில் அமைந்துள்ளது சிறப்பிற்குரியது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பல்பொருட்_சூளாமணி&oldid=2438301" இருந்து மீள்விக்கப்பட்டது