பல்குழல் உந்துகணை செலுத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒரேதரத்தில் பல உந்துகணைகளை ஏவக் கூடிய ஆயுதமே பல்குழல் உந்துகணை செலுத்தி ஆகும். இவை தொகையாக உந்துகணைகளை ஏவி, எதிரியை நிலைகுலைய வைத்து பாரிய சேதத்தை ஏற்படுத்த கூடியவை. பொதுவாக இவை ஒரு வாகனத்தில் பொருத்தப்பட்டிருக்கும். வேண்டிய களத்துக்கு விரைவாக எடுத்துசெல்ல கூடியவை. இவை 12 தெறோச்சி எறிகணைகளை ஒரே நேரத்தில் ஏவுவதற்கு சமனானது இதன் வலு ஆகும்.

ஈழப்போரில் பல்குழல் உந்துகணை செலுத்திகள்[தொகு]

ஈழப்போரில் 1987-இற்கு முன்னதாகவே உந்துகணைகள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டன. இந்த உந்துகணைகளை முதன் முதலில் ஈழத்தீவில் பயன்படுத்தியவர்கள் விடுதலைப் புலிகளே. இந்திய அமைதிப்படை என்னும் பெயரில் வந்த இந்திய படைகளால் 1987 இல் மேற்கொள்ளப்பட்ட பவான் நடவடிக்கையின் போது நாவற்குழியில் வைத்து புலிகளிடம் இருந்து உள்நாட்டு பல்குழல் உந்துகணை செலுத்திகளை கைப்பற்றியிருந்தனர். அதன் 90களில் இருந்து பல்குழல் உந்துகணை செலுத்திகளை விடுதலைப் புலிகள் தொடர்ந்து பயன்படுத்திவந்தனர்.

சிறீலங்கா அரச படைகள் 2000 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட ஓயாத அலைகள்- 3 இன் 4 ஆம் கட்டத்தின் போதுதான் முதற்தடவையாக பல்குழல் உந்துகணைகளை வெளிநாட்டில் இருந்து தருவித்து பயன்படுத்தினர்.

குறிப்புகள்[தொகு]