பலோமா ராவ்
Appearance
பலோமா ராவ் | |
---|---|
பிறப்பு | 4 பெப்ரவரி 1986 சென்னை, இந்தியா |
வேறு பெயர் | SS பலோமா, VJ பலோமா |
தொழில் | நடிகை, இசை தொகுப்பாளர் |
இணையத்தளம் | http://www.ssmusic.tv/vjs_gallery.php?vjId=20070500004 |
பலோமா ராவ் சென்னையில் வாழும் ஓர் இந்திய இசை காணொளித் தொகுப்பாளர் (VJ) மற்றும் நடிகை.[1]
வாழ்க்கை
[தொகு]சென்னையிலுள்ள இலயோலாக் கல்லூரியில் காட்சித் தொடர்பியலில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்ற பலோமா, நாடகக் கலைஞராக தமது வாழ்க்கையைத் தொடங்கினார். 2004ஆம் ஆண்டு எஸ் எஸ் மியூசிக் என்ற தொலைக்காட்சியில் காணொளித் தொகுப்பாளராக பணியாற்றினார். அவர் தொகுத்தளித்த ஃபர்ஸ்ட் ஃப்ரேம், ஆட்டோகிராப், ஜஸ்ட் கனெக்ட் ஆகிய நிகழ்ச்சிகள் பரவலான வரவேற்பைப் பெற்றன. உன்னாலே உன்னாலேஎன்ற தமிழ்த் திரைப்படத்தில் நடித்து புகழ்பெற்றார்.
திரைப்படங்கள்
[தொகு]ஆண்டு | திரைப்படம் | வேடம் | சகநடிகர்கள் | மொழி | குறிப்புகள் |
2007 | தட் ஃபோர் லெட்டர் வேர்ட் | சாரா | சுதீஷ் காமத் | ஆங்கிலம் | |
2007 | உன்னாலே உன்னாலே | பிரியா | வினய், சதா, தனிஷா முகர்ஜி | தமிழ் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Manikandan, K. (4 May 2004). "New VJs on the block". தி இந்து இம் மூலத்தில் இருந்து 27 August 2004 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040827050058/http://www.hindu.com/lf/2004/05/04/stories/2004050409160200.htm. பார்த்த நாள்: 17 September 2011.