பலே கோடல்லு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பலே கோடல்லு (தெலுங்கு திரைப்படம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பலே கோடல்லு
இயக்கம்கே. பாலச்சந்தர்
தயாரிப்புஎஸ்.எஸ். வாசன்
கதைகே.பாலச்சந்தர்
இசைஎம்.எஸ்.விஸ்வநாதன்
நடிப்புஎஸ். வி. ரங்கா ராவ்
சௌகார் ஜானகி
காஞ்சனா
ஜெயந்தி
நாகபூஷணம்
ராமகிருஷ்ணா
சலம்
ராஜஸ்ரீ
சரஸ்வதி
வெளியீடு26 ஏப்ரல் 1968
ஓட்டம்174 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதெலுங்கு

பலே கோடல்லு (Bhale Kodallu) திரைப்படம் 1968-ஆம் ஆண்டு வெளியான ஓர் இந்தியத் தெலுங்குத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை கைலாசம் பாலசந்தர் எழுதி, இயக்கினார். இந்த படம் தமிழிலும் தெலுங்கிலும் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டாலும், தமிழில் வெளிவந்து ஓர் ஆண்டிற்கு பிறகுதான் தெலுங்கில் வெளிவந்தது. இத்திரைப்படத்தில் எஸ். வி. ரங்கா ராவ், சௌகார் ஜானகி, காஞ்சனா, ஜெயந்தி, நாகபூஷணம், ராமகிருஷ்ணா, சலம் , ராஜஸ்ரீ, சரஸ்வதி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

நடிகர்கள்[தொகு]

கதைச்சுருக்கம்[தொகு]

நரசிம்மன் (எஸ்.வி.ரங்கா ராவ்) ஓர் ஒய்வு பெற்ற ஆசிரியர். அவரின் மூன்று மகன்களுக்கும் திருமணமாகி ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் வசிக்கும் வீட்டிற்கு அருகில் சினிமா நடிகை ராஜஸ்ரீ குடி வருகிறார். அந்த மூன்று தம்பதியரும் ராஜஸ்ரீயை பார்த்து பேச முடிவு செய்கிறார்கள். அவ்வாறு பார்த்து பேசி, ராஜஸ்ரீயை அவர்களது வீட்டிற்கு வருமாறு அழைக்கிறார்கள். ராஜஸ்ரீயும் ஒப்புக்கொள்ள, ராஜஸ்ரீ வீடு போலவே தமது வீட்டையும் புதுப்பிக்கிறார்கள். இந்த மூன்று தம்பதிகள் செய்யும் அனைத்து கேலிக்கூத்துகளையும் தள்ளி நின்று ரசித்து விமர்சிக்கிறார் மாமனார் நரசிம்மன். ராஜஸ்ரீ அவர்கள் வீட்டிற்கு வரும்போது, செல்வந்தராய் காட்சியளிக்க மூத்த மருமகள் ஒரு வைர அட்டிகையை கடன் வாங்குகிறாள். ராஜஸ்ரீ அவர்கள் வீட்டிற்கு வந்து போனதும் இந்த 3 தம்பதியினருக்கு இடையே சிறு சிறு சண்டைகள் ஏற்படுகின்றன. அந்த கடன் வாங்கிய அட்டிகை தொலைந்து விடுகிறது. நடிகை ராஜஸ்ரீயிடம் இந்த 3 கணவன்மார்களும் நெருக்கமாக பழக முயற்சிப்பது அவர்களின் மூன்று மாணவியருக்கும் அறவே பிடிக்கவில்லை. அதனால் மேலும் பிரச்ச்னைகள் அதிகரிக்கின்றன. இந்த பிரச்சனைகளிலிருந்து எவ்வாறு அந்த 3 தம்பதியினரும் மீண்டார்கள் என்பதே தான் மீதி கதை ஆகும்.

தயாரிப்பு[தொகு]

கே. பாலச்சந்தரின் வீட்டிற்கு அருகில் நடிகை சௌகார் ஜானகி வந்த பொழுது அவரது குடும்பத்தினர் உணர்ச்சி வசப்பட்டு ஆரவாரம் செய்த நிகழ்வு பலே கோடல்லு கதைக்கு அடித்தளமாக அமைந்தது.[சான்று தேவை] இதே திரைப்படம் தமிழிலும், சில கதாபாத்திர மாற்றங்களுடன் பாமா விஜயம் என்ற பெயரில் வெளிவந்தது. இந்த படத்தின் இறுதி நீளம் 4767 மீட்டர்கள் ஆகும்.

இசை[தொகு]

இந்த திரைப்படத்தின் இசையமைப்பாளர் ம. சு. விசுவநாதன் ஆவார். சி. நாராயண ரெட்டி இப்படத்தின் பாடல்களை எழுதினார்.

வரிசை

எண்

பாடல் பாடகர்கள்
1 சல்லினி இல்லு பி. சுசீலா, எஸ். ஜானகி, எல். ஆர். ஈஸ்வரி
2 நேனே வச்சேனு பிதபுரம் நாகேஸ்வர ராவ், எல்.ஆர்.ஈஸ்வரி
3 ஆஸ்தி மூரேடு சத்யம் எம். எல்.ஆர். ஈஸ்வரி
4 வாடே வாடன்ட்டே பி. சுசீலா,
5 அக்கட சூஸினா பிதபுரம் நாகேஸ்வர ராவ், எல்.ஆர்.ஈஸ்வரி

வெளியீடு[தொகு]

பலே கோடல்லு திரைப்படம் 26 ஏப்ரல் 1968-ஆம் தேதி வெளியானது. பாமா விஜயம் திரைப்படம் வெளியாகி ஓர் ஆண்டிற்கு பிறகு தான் இப்படம் வெளியானது.

மேற்கோள்கள்[தொகு]

  1. https://en.wikipedia.org/wiki/Sanjit_Narwekar
  2. http://chitraseema.blogspot.com/2011/09/bhale-kodallu.html?_sm_au_=i7VJZKD4VRWb1KK5
  3. https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/k-balachander-the-man-the-movies/article22264125.ece
  4. https://indiancine.ma/MJD/info
  5. https://mio.to/album/Bhale+Kodallu+%281968%29 பரணிடப்பட்டது 2021-04-20 at the வந்தவழி இயந்திரம்

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பலே_கோடல்லு&oldid=3689931" இலிருந்து மீள்விக்கப்பட்டது