பலேடியம் டைசல்பைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பலேடியம் டைசல்பைடு
Palladium disulfide
பெயர்கள்
வேறு பெயர்கள்
பலேடியம்(II) டைசல்பைடு
இனங்காட்டிகள்
12137-75-6 Y
InChI
  • InChI=1S/Pd.S2/c;1-2/q+2;-2
    Key: ZMOVFMLVWHDWBO-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
SMILES
  • [S-][S-].[Pd+2]
பண்புகள்
PdS2
தோற்றம் சாம்பல் நிறத் திண்மம்[1] அல்லது கருப்பு நிற படிகத் தூள்[2] உலோகப் படிகங்கள்
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் PdSe2, PdTe2
ஏனைய நேர் மின்அயனிகள் PtS2, RuS2, IrS2
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

பலேடியம் டைசல்பைடு (Palladium disulfide) என்பது PdS2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பலேடியம் தனிமமும் கந்தகமும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.

தயாரிப்பு[தொகு]

பலேடியம்(II) சல்பைடை மிகையளவு கந்தகத்துடன் சேர்த்து சூடுபடுத்தினால் பலேடியம் டைசல்பைடு உருவாகிறது.[1]

PdS + S → PdS2

இருப்பினும், சில தொடக்கப் பொருட்கள் பல மாதங்கள் சூடுபடுத்திய பிறகும் இருக்கின்றன. எனவே பலேடியம்(II) குளோரைடுடன் மிகையளவு கந்தகத்தை ஒரு மூடிய குழாயில் இட்டு 450 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்தி வினை விளைபொருளை கார்பன் டை சல்பைடு கரைசலில் கழுவி பலேடியம் டைசல்பைடு தயாரிக்கப்படுகிறது. இம்மாற்று முறையில் பலேடியம்(II) சல்பைடு கலக்காத பலேடியம் டைசல்பைடு கிடைக்கிறது.[2]

கட்டமைப்பு[தொகு]

பலேடியம் டைசல்பைடில் கந்தகம்-கந்தகம் பிணைப்புகள் உள்ளன. எனவே டைசல்பைடில் முறையாக S22− மற்றும் Pd2+ அயனிகள் இருக்க வேண்டும்.[3] சதுரத் தள பலேடியம் மையங்கள் மற்றும் முக்கோண பட்டைக்கூம்புரு கந்தக மையங்களைக் கொண்ட அடுக்கு படிக அமைப்பை இது ஏற்றுக்கொள்கிறது.[2]

தொடர்புடைய சேர்மங்கள்[தொகு]

Pd4S, Pd2.8S, Pd2.2S மற்றும் PdS.[2] உள்ளிட்ட இதர பல சேர்மங்களும் Pd-S அமைப்புத் திட்டத்தில் அறியப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ). Butterworth–Heinemann. பக். 1152. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0080379419. 
  2. 2.0 2.1 2.2 2.3 Grønvold, Fredrik; Røst, Erling (1956). "On the Sulfides, Selenides, and Tellurides of Palladium.". Acta Chemica Scandinavica 10: 1620–1634. doi:10.3891/acta.chem.scand.10-1620. 
  3. Selb, Elisabeth; Götsch, Thomas; Janka, Oliver; Penner, Simon; Heymann, Gunter (2017). "Crystal Structures of the High‐Pressure Palladium Dichalcogenides Pd0.94(1)S2 and Pd0.88(1)Se2 Comprising Exceptional PdIV Oxidation States". Z. Anorg. Allg. Chem. 643 (21): 1415–1423. doi:10.1002/zaac.201700140. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பலேடியம்_டைசல்பைடு&oldid=3378795" இலிருந்து மீள்விக்கப்பட்டது