உள்ளடக்கத்துக்குச் செல்

பலூச்சி மக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பலூச்சி மக்கள்
بلۏچ
இரண்டு பலூச்சி இளம் பெண்கள், சாகிதான், சிஸ்தான் & பலூசிஸ்தான் மாகாணம், ஈரான்
மொத்த மக்கள்தொகை
ஏறத்தாழ 15 மில்லியன்
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
 பாக்கித்தான்8,117,795 (2023 பாகிஸ்தான் கணக்கெடுப்பு)[1]
 ஈரான்4.8 மில்லியன்[2][3]
 ஆப்கானித்தான்1.1 மில்லியன்[3]
 ஓமான்1,000,000[4]
 ஐக்கிய அரபு அமீரகம்383,000[5]
 இந்தியா64,000[5]
 கத்தார்53,000[5]
 பகுரைன்44,000[6]
 துருக்மெனிஸ்தான்36,000[7]
 குவைத்20,000[3]
 சவூதி அரேபியா12,000[3]
 சோமாலியா11,000[8]
 சுவீடன்5,000[3][9]
 ஐக்கிய இராச்சியம்3,000[10]
 கனடா1843[11]
 ஆத்திரேலியா357[12]
 அல்ஜீரியா11[13]
மொழி(கள்)
பலூச்சி மொழி, பிராகுயி மொழி

பிற மொழிகள்:

பாரசீக மொழி (ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான்), உருது (பாகிஸ்தானில்), பஷ்தூ மொழி (ஆப்கானிஸ்தானில்), ஆங்கிலம்
சமயங்கள்
Predominantly சன்னி இசுலாம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
ஈரானிய மக்கள்

பலூச்சி மக்கள் (Baloch), பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தில் பெரும்பான்மையாக வாழும் ஈரானிய நாடோடி இனக் குழுவினர் ஆவார்[14][15]. மேலும் இம்மக்கள் ஈரான் நாட்டின் சிஸ்தான் & பலூசிஸ்தான் மாகாணத்திலும் மற்றும் ஆப்கானித்தான் நாட்டின் எல்லைப்புறங்களில் வாழ்கின்றனர். 2023 பாகிஸ்தான் மக்கள் தொகைகணக்கெடுப்பின்படி 81 இலட்சம் பலூச்சி மக்களும்; ஈரான் நாட்டில் 4.8 மில்லியன் மற்றும் தெற்கு ஆப்கானித்தான் & ஓமன் நாடுகளில் தலா 1 மில்லியன் மக்களும் வாழ்கின்றனர். இவர்களது தாய் மொழி பலூச்சி மொழி ஆகும். இருப்பினும் இம்மக்களில் சிலர் உருது, பாரசீக மொழி[16], பஷ்தூ மொழி, ஆங்கிலம் பேசுகின்றனர்.

பாகிஸ்தான் நாட்டின் பலூச்சி மக்களில் 50% பலூசிஸ்தான் மாகாணத்திலும் [17]40% மக்கள் சிந்து மாகாணத்திலும், 3.6% பேர் பஞ்சாப் மாகாணத்திலும், மீதம் 2% மக்கள் ஈரான் மற்றும் தெற்கு ஆப்கானித்தானிலும் வாழ்கின்றனர்.[18]

மொழி

[தொகு]

பலூச்சி மக்கள் இந்தோ--ஈரானிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த பலூச்சி மொழியைப் பேசுகின்றனர். கூடுதலாக சிலர் பாரசீக மொழி, உருது மற்றும் பஷ்தூ மொழி மற்றும் ஆங்கில மொழிகளைப் பேசுகின்றனர்.

சமயம்

[தொகு]

பலூச்சி மக்கள் பெரும்பான்மையாக சன்னி இசுலாமை கடைப்பிடிக்கின்றனர்.

பொருளாதாரம்

[தொகு]

நீர் வளம் இல்லாத மண்ணில் வாழும் பலூச்சி மக்களின் எழுத்தறிவு மிகவும் குறைவு. எனவே பலூச்சி மக்கள் பெரும்பாலும் கால்நடைகளை மேய்ப்பவர்களாக உள்ளனர். ஓமன், கனடா மற்றும் ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகளில் புலம்பெயர்ந்த பலூச்சி மக்கள் சிறிது வச்தியாக வாழ்கின்றனர்.[19]

தற்கால வரலாறு

[தொகு]

பலூச்சி மக்கள் 1512 முதல் 1955 வரை கலாட் கானரசில் வாழ்ந்தனர். பின்னர் பாகிஸ்தான் நாடு உருவான பின்னர் பலூசிஸ்தான் மாகாணம் மற்றும் சிந்து மாகாணங்களில் பெரும்பான்மையாக வாழ்கின்றனர்.

புலம் பெயர்ந்த பலூச்சி மக்கள்

[தொகு]

அடக்கு முறை, வேலையின்மை காரணமாக பாகிஸ்தானிலிருந்து பலூச்சி மக்கள் ஓமன்[20]போன்ற வளைகுடா நாடுகள், அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஐக்கிய இராச்சியம் போன்ற 17 நாடுகளில் புலம் பெயர்ந்து வாழ்கின்றனர்..

தனி நாடு கோரி போராட்டம்

[தொகு]
மக்ரங் பலூச், பலூச்சி மக்களின் மனித உரிமை செயற்பாட்டாளர்

1956ஆம் ஆண்டு முதல் பலூச்சி மக்கள் தனி நாடு கோரி போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதற்காக பலுசிஸ்தான் விடுதலைப்படை மற்றும் பலூசிஸ்தான் விடுதலை முன்னணி போன்ற போராளிகள் இயக்கங்கள் செயல்படுகிறது. பலூச்சி மக்களின் மனித உரிமைகளுக்காக மக்ரங் பலூச் எனும் இளம் பெண் மருத்துவர் செயல்படுகிறார்.

படக்காட்சிகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Table 11: Population by Mother Tongue, Sex, and Rural/Urban – 2023 Census" (PDF). Archived from the original (PDF) on 5 October 2024.
  2. "West Balochistan". Unrepresented Nations and Peoples Organization. Retrieved December 18, 2024.
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 Tyagi, Vidya Prakash (2009). Martial races of undivided India. Kalpaz Publications. p. 12. ISBN 9788178357751.
  4. Long, Roger D.; Singh, Gurharpal; Samad, Yunas; Talbot, Ian (2015-10-08). State and Nation-Building in Pakistan: Beyond Islam and Security (in ஆங்கிலம்). Routledge. ISBN 978-1-317-44820-4.
  5. 5.0 5.1 5.2 "Baloch population scattered around the world". 20 February 2025.
  6. "Baloch population scattered around the world". 16 February 2023. Retrieved December 18, 2024.
  7. Long, Roger D.; Singh, Gurharpal; Samad, Yunas; Talbot, Ian (2015-10-08). State and Nation-Building in Pakistan: Beyond Islam and Security (in ஆங்கிலம்). Routledge. p. 129. ISBN 978-1-317-44820-4.
  8. "Southern Baloch in Somalia". Joshua Project. Retrieved December 18, 2024.
  9. "Increased human rights violations since President Rouhani's administration" (PDF). Unrepresented Nations and Peoples Organization. 20 February 2025.
  10. Department for Communities and Local Government. "The Pakistani Muslim Community in England" (PDF). Department for Communities and Local Government. pp. 5–11 (6), 36–41. Archived from the original (PDF) on 19 September 2012. Retrieved December 19, 2024.
  11. "Census Profile, 2021 Census of Population". 2021 Canadian census. 9 February 2022. Retrieved December 19, 2024.
  12. "Australian Bureau of Statistics". Retrieved December 19, 2024.
  13. تحديث, شباب الجزائر اخر (2024-09-16). "جزائرية تفوز بسباق الجمل في السعودية". Eldjazair1 (in அரபிக்). Retrieved 2025-02-24.
  14. Laura, Etheredge (2011-01-15). Persian Gulf States: Kuwait, Qatar, Bahrain, Oman, and the United Arab Emirates (in ஆங்கிலம்). The Rosen Publishing Group, Inc. p. 66. ISBN 978-1-61530-327-4. The Baloch are traditionally nomads, but settled agricultural existence is becoming more common; every chief has a fixed residence. The villages are collections of mud or stone huts; on the hills, enclosures of rough stone walls are covered with matting to serve as temporary habitations. The Baloch raise camels, cattle, sheep, and goats and engage in carpet making and embroidery. They engage in agriculture using simple methods and are chiefly Muslim.
  15. Bashir, Shahzad; Crews, Robert D. (2012-05-28). Under the Drones (in ஆங்கிலம்). Harvard University Press. p. 140. ISBN 978-0-674-06476-8. In southwestern Afghanistan the Baloch have traditionally been nomads, and some of them continue to lead a nomadic way of life today. Over the course of the twentieth century most Baloch settled down in the southwest and started a sedentary way of life based on pastoralism and irrigated agriculture. Repeated droughts during the last two decades caused many Baloch to give up livestock farming and agriculture,
  16. Zehi, Pirmohamad. "A Cultural Anthropology of Baluchis". Iran Chamber Society.
  17. Blood, Peter, ed. "Baloch". Pakistan: A Country Study. Washington: GPO for the Library of Congress, 1995.
  18. Central Intelligence Agency (2013). "The World Factbook: Ethnic Groups". Archived from the original on 16 November 2018. Retrieved 3 November 2014.
  19. Windfuhr, Gernot (2013). The Iranian Languages. Taylor & Francis. p. 636. ISBN 9781135797041.
  20. "Oman's Diverse Society: Northern Oman" (PDF). JE Peterson.

உசாத்துணை

[தொகு]

மேலும் படிக்க

[தொகு]
  • Elfenbein, J. "Balochi Literature". P. G. Kreyenbroek and U. Marzolph, eds. Oral Literature of Iranian Languages. Kurdish, Pashto, Balochi, Ossetic, Persian & Tajik. A History of Persian Literature. ed. E. Yarshater. vol. 18. Companion vol. 2. London: I. B. Tauris, 2010. pp. 167–198.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பலூச்சி_மக்கள்&oldid=4260725" இலிருந்து மீள்விக்கப்பட்டது