பலூசிஸ்தான் உயர் நீதிமன்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பலூசிஸ்தான் உயர் நீதிமன்றம்
நிறுவப்பட்டது1955
அதிகார எல்லைபாகிஸ்தான்
அமைவிடம்பலூசிஸ்தான் (பாகிஸ்தான்)
அதிகாரமளிப்புபாகிஸ்தான் அரசியலமைப்புச் சட்டம்
தீர்ப்புகளுக்கானமேல் முறையீடுபாகிஸ்தான் உச்ச நீதிமன்றம்
வலைத்தளம்[1]
தலைமை நீதிபதி
தற்போதையதிரு. முகமது நூர் மெஸ்கண்சி

பலூசிஸ்தான் உயர் நீதிமன்றம் பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் (பாகிஸ்தான்) ல் உள்ள ஒரு உயர் நீதி மன்றமாகும். இது பாகிஸ்தான் அரசியலமைப்பு சட்டத்தின் படி இயங்கி வருகிறது.

வரலாறு[தொகு]

மேற்கு பாகிஸ்தானில் உள்ள இந்த நீதிமன்றம் 14 அக்டோபர் 1955 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. உச்ச நீதிமன்ற நீதிபதி திறந்து வைத்தார். பின்னர் இந்த நீதிமன்றம் 1 ஜூலை 1970ல் கலைக்கப்பட்டு பின் 30 நவம்பர் 1976 ல் இருந்து சிந்து மற்றும் பலுசிஸ்தான் என இரண்டு தனித்தனி உச்ச நீதிமன்றங்களாக செயல்படுகின்றன.

கட்டிடங்கள்[தொகு]

பலூசிஸ்தான் உயர் நீதிமன்றம் 1 டிசம்பர் 1976 கட்டப்பட்டு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி திரு. குதா பக்‌ஷ் மாரி, உயர் நீதிமன்ற நீதிபதிகள் திரு. M. A. ராஸித் மற்றும் திரு. ஜாகா உல்லா லோதி , அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. ஆராம்பிக்கப்பட்ட போது 5 நீதியரசர்களைக் கொண்டு திறம்படச் செயல்பட்டது. தற்போது 11 நீதியரசர்களைக் கொண்டு திறம்படச் செயல்படுகிறது.

தற்போது உள்ள இந்த கட்டிடம் கட்டிட வேலைகள் 1987ல் தொடங்கி 1993 ல் கட்டி முடிக்கப்பட்டது. 5 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது.

நீதிபதிகள்[தொகு]

தலைமை நீதிபதி[தொகு]

திரு. முகமது நூர் மெஸ்கண்சி

பிற நீதிபதிகள்[தொகு]

 1. திருமதி. சையத தஹிரா சஃப்டார்
 2. திரு. ஜமால் கான் மண்டொகைல்
 3. திரு. நயீம் அக்தர் அஃப்கான்
 4. திரு. முகமது ஹாஸிம் கான் காகர்
 5. திரு. முகமது ஈசாஜ் ச்வாடி
 6. திரு. முகமது கம்ரான் கான் முலாகைல்
 7. திரு. ஜாஹீர் உட் டீன் காகர்
 8. திரு. அப்துல்லா பலொக்
 9. திரு. நஸீர் அஹமது லாங்கோவ்

விடுமுறை தினங்கள்[தொகு]

 • காஷ்மீர் தினம்
 • பாகிஸ்தான் தினம்
 • தொழிலாளர் தினம்
 • பக்ரீத்
 • மொஹரம்
 • ரமலான்
 • மிலாதுநபி
 • சுதந்திர தினம்
 • கிருஸ்துமஸ்

வலைத்தளம்[தொகு]