உள்ளடக்கத்துக்குச் செல்

பலுரான் மலை

ஆள்கூறுகள்: 7°51′S 114°22′E / 7.850°S 114.367°E / -7.850; 114.367
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பலுரான் மலை
Mount Baluran
Gunung Baluran
பலுரான் மலை
உயர்ந்த புள்ளி
உயரம்1,247 m (4,091 அடி)[1]
பட்டியல்கள்ரீபு மலைகள்
ஆள்கூறு7°51′S 114°22′E / 7.850°S 114.367°E / -7.850; 114.367[1]
புவியியல்
நிலவியல்
மலையின் வகைசுழல் வடிவ எரிமலை

பலுரான் மலை (ஆங்கிலம்: Mount Baluran; இந்தோனேசியம்: Gunung Baluran) என்பது இந்தோனேசியா, ஜாவா தீவு, கிழக்கு ஜாவா, சித்துபொன்டோ பிராந்தியத்தில் (Kabupaten Situbondo) அமைந்துள்ள சுழல் வடிவ எரிமலை ஆகும்.

சிறிய, செயலற்ற எரிமலையான பலுரான் மலை, ஜாவாவின் வடகிழக்கு முனையில் உள்ள பலுரான் தேசிய பூங்காவில் அமைந்துள்ளது. மழை குறைவாகப் பெய்வதால், பலுரான் மலைப் பகுதி ஆப்பிரிக்க சவன்னா வளிமண்டலத்தைப் போல மிகவும் வறண்டதாக உள்ளது.[2] இந்த பலுரான் மலை அருகிலுள்ள மிகப் பெரிய இஜென் மலையால் மறைக்கப்பட்ட நிலையில் உள்ளது.

பொது

[தொகு]

பலுரான் மலை கடல் மட்டத்திலிருந்து 1,247 மீட்டர் உயரத்தில் உள்ளது.அணமைய காலங்களில் இந்த மலை வெடிக்கவில்லை. இருப்பினும் இது ஹோலோசீன் காலத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது.[1]

பலுரான் மலையில் அலெங் சிகரம், காசிப் சிகரம் மற்றும் குளோசோட் சிகரம் போன்ற பல சிகரங்கள் உள்ளன. இந்த மலை ஜாவா தீவின் கிழக்கு திசையில் உள்ள மலையாகும். இது பலூரான் தேசிய பூங்கா பகுதிக்குள் அமைந்துள்ளது.

காட்சியகம்

[தொகு]

பலுரான் மலையின் காட்சிப் படங்கள்:

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 "Baluran". Global Volcanism Program. சிமித்சோனிய நிறுவனம். Retrieved 2011-07-03.
  2. "Baluran is located in Baluran National Park on the extreme NE tip of Java". gunung bagging. 11 June 2016. Retrieved 27 February 2025.

வெளி இணைப்புகள்

[தொகு]

விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Baluran National Park

"https://ta.wikipedia.org/w/index.php?title=பலுரான்_மலை&oldid=4231173" இலிருந்து மீள்விக்கப்பட்டது