பலாவு பக்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பலாவு பக்கி
உயிரியல் வகைப்பாடு e
திணை: விலங்கு
Phylum: முதுகுநாணி
வரிசை: கேப்ரிமுல்கிபார்மஸ்
குடும்பம்: பக்கி
பேரினம்: கேப்ரிமுல்கசு
இனம்: C. phalaena
இருசொற் பெயரீடு
Caprimulgus phalaena
கார்ட்லாப் & பின்ஞ்ச், 1872)

பலாவு பக்கி (Palau nightjar)(கேப்ரிமுல்கசு பலேனா) என்பது பலாவுவில் மட்டும் காணப்படும் (அகணிய உயிரி) ஒரு வகை பக்கிச் சிற்றினம் ஆகும். இது முன்பு சாம்பல் பக்கியின் துணையினமாகக் கருதப்பட்டது.[2]

விளக்கம்[தொகு]

கசுகொட்டை நிறக் கழுத்து, முதுகு மற்றும் நடுத்தர அளவிலான வால் கொண்ட ஒரு சிறிய சாம்பல்-பழுப்பு நிற பக்கியாகும். வெள்ளைத் தொண்டைப் பொட்டு மற்றும் பறக்கும்போது வெளிப்புற வால் மற்றும் இறக்கைகள் வெள்ளை முனையுடன் காணப்படும். இரவுநேரப் பறவைகளான இது, சதுப்புநிலங்கள் மற்றும் தாழ் நில காடுகளின் ஓரங்களில் காணப்படும்.[3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பலாவு_பக்கி&oldid=3612876" இருந்து மீள்விக்கப்பட்டது