பற்றாக்குறை வரவு செலவுத் திட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஓர் அரசின் மொத்த வருவாயை விட மொத்த செலவு அதிகமாக இருந்தால் அதற்கு பற்றாக்குறை பட்செட் அல்லது பட்செட் பற்றாக்குறை (Deficit budget) என்று பெயர். மாறாக மொத்த செலவைவிட மொத்த வருவாய் அதிகமாக இருந்தால் அது எச்ச பட்செட் அல்லது உபரி பட்செட் (Surplus budget) எனப்படும். வரவு செலவுத் திட்டத்தில் பற்றாக்குறை குவியும் போது அது கடனாக மாறுகிறது.

பற்றாக்குறை என்பது கடன் ஏற்படுவதற்கான தாற்காலிக வழி எனலாம. பல்லாண்டுகளாக பற்றாக்குறை சேர்ந்து குவியும் போது அது (அரசுக் கடனாக) மாறுகிறது. கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு அரசு சந்தையில் கடன் வாங்குதல், சேமிப்பைச் செலவிடுதல், பணம் அச்சடித்தல் ஆகிய வழிமுறைகளை அரசு கையாள்கிறது.