பற்சக்கர வால் வால்காகம்
தோற்றம்
| பற்சக்கர வால் வால்காகம் | |
|---|---|
| தாய்லாந்து காயெங் கிராச்சன் தேசியப் பூங்காவில் | |
| உயிரியல் வகைப்பாடு | |
| உலகம்: | |
| திணை: | |
| தொகுதி: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | கோர்விடே |
| பேரினம்: | தெம்னுரசு |
| இனம்: | தெ. தெம்னுரசு |
| இருசொற் பெயரீடு | |
| தெம்னுரசு தெம்னுரசு (தெம்மினிக், 1825) | |
பற்சக்கர வால் வால்காகம் (ratchet-tailed treepie-தெம்னுரசு தெம்னுரசு) என்பது கார்விடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவை சிற்றினமாகும். இந்தச் சிற்றினம் வெட்டுப்பள்ள வால் வால்காகம் என்றும் அழைக்கப்படுகிறது. இது தெம்னுரசு பேரினத்தில் உள்ள ஒரே ஒரு சிற்றினமாகும்.[2]
இந்தச் சிற்றினம் தென்கிழக்கு ஆசியாவிலும் சீனாவிலும் வேறுபட்ட பரவலைக் கொண்டுள்ளன. தெற்கு தாய்லாந்திலும், தெற்கு வியட்நாமிலும், மத்திய மற்றும் வடக்கு வியட்நாம், லாவோஸிலும், சீனாவின் ஹைய்நானிலும் காணப்படுகிறது. இதன் இயற்கையான வாழிடம் வெப்பமண்டல ஈரப்பதமான அகன்ற பசுமையான தாழ் நிலக் காடுகளும் இரண்டாம் நிலை காடுகளும் புதர் நிலங்களும் ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ BirdLife International (2016). "Temnurus temnurus". IUCN Red List of Threatened Species 2016: e.T22705862A94038926. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22705862A94038926.en. https://www.iucnredlist.org/species/22705862/94038926. பார்த்த நாள்: 12 November 2021.
- ↑ dos Anjos, Luiz (2007). "Family Corvidae (Crows)". Handbook of the Birds of the World 9. Bush-shrikes to Old World Sparrows. Barcelona: Lynx Editions.