பறி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பறி என்பது தமிழ் மீனவர்கள் தாங்கள் பிடித்த மீன்களை இடுகின்ற ஒரு பெட்டி ஆகும். இது பனை ஓலையில் செய்யப்பட்டதாக குடுவை போன்ற அமைப்பில் இருக்கும். இதைப் பார்ப்பதற்குச் சுரைக் குடுவை போலவே இருக்கும். குருத்தோலைகளைக் கொண்டு இவற்றைப் பின்னுவதால், நெகிழும்தன்மை கொண்டதாக இருக்கிறது. இதற்கு கையளவுள்ள சிறிய வாய் அமைத்திருக்கும். உயிருடன் பிடிக்கப்படும் மீன்கள், துள்ளி வெளியே சென்றுவிடாதபடி இருக்க ஒரு அமைப்பைக் கொண்டதாகவும் இது உள்ளது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. காட்சன் சாமுவேல் (2018 சூலை 21). "மீன்களை ‘பறி’ கொடுக்காமலிருக்க…". கட்டுரை. இந்து தமிழ். பார்த்த நாள் 23 சூலை 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பறி&oldid=2555779" இருந்து மீள்விக்கப்பட்டது