உள்ளடக்கத்துக்குச் செல்

பறவை ஒளிப்படவியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பறவை ஒளிப்படவியல் (Bird photography)என்பது பறவைகளின் ஒளிப்படங்களை எடுக்கும் ஒரு சிறப்பு துறையாகும். இது பறவைகளின் நடத்தை, தோற்றம் மற்றும் வாழ்விடங்கள் போன்ற விடயங்களை ஒளிப்படம் எடுக்கும் செயற்பாடாகும். பறவை ஒளிப்படவியலின் அடிப்படைக் கொள்கை, ஒரு ஒளிப்படக்கருவி மூலம் பறவைகளின் ஒளிப்படங்களை எடுப்பதாகும். இதில் பறவைகளின் பலவிதமான வகை வடிவங்கள், நடையங்கள் மற்றும் வாழ்விடங்களை பதிவிடுவதால், பறவை ஒளிப்படவியல் ஒரு கலை மற்றும் அறிவியல் கலவையாகும். பறவை ஒளிப்படவியலில், பறவைகளின் உருவம், நடத்தை, பறக்கும் முறை, இனப்பெருக்கம், உணவு பழக்கங்கள் போன்றவற்றை படம்பிடித்து பதிவுசெய்வதில் அடங்கும். மேலும், இது பறவைகளின் வாழ்விடங்களை பாதுகாப்பதற்கும், பறவைகளைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே அதிகப்படுத்துவதற்கும் உதவுகிறது.[1]

வரலாறு

[தொகு]

1900 -1930களின் நடுப்பகுதி வரை, தீவிரமாகப் பணியாற்றிய ஆங்கிலப் பறவை ஒளிப்படக் கலைஞரான எம்மா லூயிசா டர்னர் போன்றவர்களை பறவை ஒளிப்படக் கலையில் ஈடுபடத் தூண்டியது. பறவை ஒளிப்படம் எடுக்கும் நடைமுறை ஒரு முக்கியமான தருணத்தில் வந்தது என்றும், அச்சிடுதல் மற்றும் ஒளிப்படம் எடுக்கும் நுட்பங்களின் வளர்ச்சியுடன் மட்டுமல்லாமல், உலகளவில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு அதிகரித்ததன் மூலம் அது வேகமாக வளர்ந்தது என்றும் கூறப்படுகிறது.[2]

20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், பறவை கண்காணிப்பு (காட்டுப் பறவைகளைக் கவனிக்கும் நடைமுறை) பிரபலமடைந்தது. ஆரம்பகால ஒளிப்படக்கருவிகள் மெதுவாகவும் சிரமமாகவும் இருந்தன, எனவே மற்ற இயற்கை ஒளிப்படப் பொருட்களை விட உயிருள்ள பறவைகளின் நல்ல ஒளிப்படங்களைப் பெறுவது கடினமாக இருந்தது. பெரும்பாலான பறவை ஆர்வலர்கள் பறவைகளின் நடத்தையை மட்டுமே பார்ப்பவர்களாக இருந்தனர். 1980 களில் தானியங்கிக் குவியம் அறிமுகப்படுத்தப்பட்டபோதும், தொலையொளி வில்லைகள் மற்றும் படச்சுருள்களின் விலை பெரும்பாலான வளரும் இயற்கை ஒளிப்படக் கலைஞர்களுக்கு பறவை ஒளிப்படத்தை மிகவும் விலை உயர்ந்ததாக மாற்றியது.[3]

இவற்றையும் காண்க

[தொகு]


மேற்கோள்கள்

[தொகு]
  1. "How has photography shaped ornithology and bird conservation?". futurumcareers.com - © December 10, 2024 (ஆங்கிலம்). Retrieved 2025-05-06.
  2. "History of bird photography research". www.openaccessgovernment.org - © 19th March 2025 (ஆங்கிலம்). Retrieved 2025-05-06.
  3. "Bird photography for beginners". www.adobe.com - © 2025 Adobe (ஆங்கிலம்). Retrieved 2025-05-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பறவை_ஒளிப்படவியல்&oldid=4267459" இலிருந்து மீள்விக்கப்பட்டது