பறவையின் கால்களும் பாதங்களும்

பறவைகளின் கால்களும் பாதங்களும் (Bird feet and legs) உடற்கூறியல் வேறுபட்டதாக, பல்வேறு செயல்களைச் செய்வதற்கு ஏற்றதாக அமைந்துள்ளன.[1]
பெரும்பாலான பறவைகள் விரலூன்றி நடக்கின்ற விரல் விலங்குகளாக வகைப்படுத்தப்படுகின்றன. அதாவது அவை பாதம் முழுவதையும் பயன்படுத்தி நடக்காமல் கால்விரலூன்றி நடக்கின்றன.[2]

பின்னங்கால்கள்
[தொகு]பறவைகள் பொதுவாக விரலூன்றி நடக்கும் விலங்குகள் ( குதிகால் படாது -நடப்பவை)[3][4], இது அவற்றின் கால் எலும்புக்கூட்டின் அமைப்பில் தக்கம் செலுத்துகிறது. அவை நடக்க தங்கள் பின்னங்கால்களை மட்டுமே பயன்படுத்துகின்றன ( இருகால் நகர்வு )[5]. அவற்றின் முன்கைகள் பரிணமித்து இறக்கைகளாக மாறியள்ளன. பறவையின் காலின் பெரும்பாலான எலும்புகள் (கால் விரல்களைத் தவிர) ஒன்றாகவோ அல்லது பிற எலும்புகளுடன் இணைந்தோ, காலப்போக்கில் அவற்றின் செயல்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளன.
பறவைகளின் கால் நீளமானது அவற்றின் தேவைகேற்றப அமைந்துள்ளன. சிறிது தூரம் ஓடி பறக்கும் பறவைகளுக்கு உந்துவிசையை அளிக்க அவற்றின் கால்கள் பயன்படுகின்றன. நீரில் இறங்கி இரைதேடும் பறவைகளுக்கு நீண்ட கால்கள் அமைந்துள்ளன. இதனால் அப்பறவைகள் நீரில் நனைந்துவிடாமல் நீரில் இறங்கி இரைதேட இயலும். பறக்காமல் நடந்து செல்லும் பறவைகளுக்குக் கால் அமைப்பு அதற்கு ஏற்றவாறு அமைந்துள்ளது. எடை மிக்க கிவியின் கால்கள் வலிமையான தசையைக் கொண்டும் இறகுகளால் மூடப்பட்டும் உள்ளது. பறக்கும் பறவைகளுக்கு மெல்லிய கால்கள் அமைந்துள்ளன.[6]
தசைகள் குறைவாக, இறகுகள் இல்லாத கால்கள் பறவைகளின் உடல் வெப்ப நிலையை சமநிலைப்படுத்த உதவுகின்றன.[6]
பாதங்கள்
[தொகு]பறவைகளின் தன்மையைப் பொறுத்து அவற்றின் பாத அமைப்புகள் மாறுபடுகின்றன. வேட்டையாடிகளான ஊனுண்ணிப் பறவைகளுக்கு கூர்மையான நகங்களும், நல்ல பிடிப்புத் தன்மைகொண்ட விரலமைப்பையும் கொண்டுள்ளன. மரக் கிளைகளில் நடந்து செல்ல நெகிழ்வான பதங்களை கிளிகள் போன்ற பறவைகள் கொண்டுள்ளன. வத்து, கொக்கு போன்ற நீர்ப்பறவைகள் எளிதாக நீந்துவதற்கு ஏற்ற பாத அமைப்பைப் பெற்றுள்ளன. பறக்க இயலாத நெருப்புக்கோழி, ஈமு கோழி போன்ற பெரிய பறவைகள் நீண்ட தூரம் தரையில் ஓடுவதற்கு தேவையான பெருவிரல் அமைப்பை பாதங்களில் கொண்டுள்ளன.[6]
கணுக்காலனுவெலும்பு
[தொகு]பறவைகளுக்கு மட்டுமே உரிய காலின் மூன்றாவது பிரிவாக கணுக்காலனுவெலும்பு உள்ளது.[7] அது பாதத்தின் சில கீழ் எலும்புகள் ஒன்றிணைந்து உருவானது. இது சேய்மை எலும்புகள், பாத எலும்புகள் II, III, IV ஆகியவற்றைக் கொண்டுள்ளது.[8] கணுக்காலனுவெலும்பு என்பது நீட்டிக்கப்பட்ட கால் பகுதி, இது காலுக்கு கூடுதல் நெம்புகோல் நீளத்தை அளிப்பதாக உள்ளது.[3]
முழங்காற்சில்லு
[தொகு]கீழ்கால் மூட்டு முகடுக்கு மேலே உள்ள முழங்காலில் முழங்காற்சில்லு (முழங்கால் தொப்பி)[2] உள்ளது. சில இனங்களுக்கு முழங்காற்சில்லுகள் இல்லை, சிலவற்றிற்கு கீழ்கால் மூட்டு முகடுகள் மட்டுமே இருக்கும். முக்குளிப்பான்களில் ஒரு சாதாரண மழங்காற்சில்லு மற்றும் கீழ்கால் மூட்டு முகட்டின் நீட்சி என இரண்டும் காணப்படுகின்றன.[5]
கீழ்கால்வெளியெலும்பு
[தொகு]கீழ்கால் வெளியெலும்பு சுருங்கி, கால் முன்னெலும்புடன் நன்கு ஒட்டிக்கொண்டிருக்கும், பொதுவாக அதன் நீளத்தில் மூன்றில் இரண்டு பங்குவரை இருக்கும்.[5][3][7] பெங்குவின்களுக்கு மட்டுமே முழு நீள கீழ்கால் வெளியெலும்புகள் உள்ளன.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Gill, Frank B. (2001). Ornithology (2md ed.). New York: W.H. Freeman and Company. ISBN 978-0-7167-2415-5.
- ↑ 2.0 2.1 2.2 Kowalska-Dyrcz, Alina (1990). "Entry: noga [leg]". In Busse, Przemysław (ed.). Ptaki [Birds]. Mały słownik zoologiczny [Small zoological dictionary] (in Polish). Vol. I (1st ed.). Warsaw: Wiedza Powszechna. pp. 383–385. ISBN 978-83-214-0563-6.
{{cite book}}: CS1 maint: unrecognized language (link) - ↑ 3.0 3.1 3.2 Proctor, Noble S.; Lynch, Patrick J. (1993). "Chapters: 6. Topography of the foot, 11. The pelvic girdle, and 12. The bones of the leg and foot Family". Manual of Ornithology. Avian Structure & Function. New Haven and London: Yale University Press. pp. 70–75, 140–141, 142–144. ISBN 978-0-300-07619-6.
- ↑ Elphick, John B.; Dunning, Jack B. Jr.; Sibley, David Allen (2001). National Audubon Society: The Sibley Guide to Bird Life & Behavior. New York: Alfred A. Knopf. ISBN 978-0-679-45123-5.
- ↑ 5.0 5.1 5.2 Kochan, Jack B. (1994). Feet & Legs. Birds. Mechanicsburg: Stackpole Books. ISBN 978-0-8117-2515-6.
- ↑ 6.0 6.1 6.2 "வெப்பநிலையைக் குறைக்கும் கால்கள்!". Hindu Tamil Thisai. 2025-03-12. Retrieved 2025-03-27.
{{cite web}}: Text "பறப்பதுவே 13" ignored (help) - ↑ 7.0 7.1 Dobrowolski, Kazimierz A.; Klimaszewski, Sędzimir M.; Szelęgiewicz, Henryk (1981). "Chapters: Gromada: Ptaki - Aves: Układ kostny; Pas miednicowy i kończyna tylna [Class: Birds: The skeletal system; The pelvic girdle and the hindlimb]". Zoologia [Zoology] (in Polish) (4th ed.). Warsaw: Wydawnictwo Szkolne i Pedagogiczne. pp. 462–464, 469. ISBN 978-83-02-00608-1.
{{cite book}}: CS1 maint: unrecognized language (link) - ↑ Romer, Alfred Sherwood; Parsons, Thomas S. (1977). The Vertebrate Body. Philadelphia, PA: Holt-Saunders International. pp. 205–208. ISBN 978-0-03-910284-5.
