பறவைகளைப் பிடிக்கும் மரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பறவைகளைப் பிடிக்கும் மரம்[தொகு]

பறவைகளைப் பிடிக்கும் மரம்

வகைப்பாடு[தொகு]

தாவரவியல் பெயர் : பைசோனியா புருனோனியானம் Pisonia brunoianum

குடும்பம் : நிக்டாஜீனியேசியீ Nyctaginaceae

இதரப் பெயர் : பராபரா Parapara

மரத்தின் அமிவு[தொகு]

பைசோனியா புருனோனியானம்

காகித பூ குடும்பத்தைச் சேர்ந்த மரம். இது 66 அடி உயரம் வளரக் கூடியது. பலக் கிளைகள் உடையது. மிருதுவானது. வெளுத்த நிறம் கொண்டது. தடிமனான, பச்சை நிறம் உடைய 25 செ.மீ. நீளம் உடைய இலை. இம்மரத்தின் வரும் பழங்கள் நேராக நிமிர்ந்து முக்கோண வடிவமாக இருக்கும். இதன் மீது அடர்த்தியான இனிப்பான பசை மூடி உள்ளது. இதன் மீது உட்காரும் பறவைகள் பசையில் ஒட்டிக்கொள்கிறது. தப்பிக்க முயற்சிக்கும் போது மேலும் இதன் இறக்கையில் பசை ஒட்டிக்கொண்டு பறவை பறக்க முடியாமல் மாட்டி கொள்கிறது. சிறுவர்கள் இம்மரத்தில் ஏறி பறவைகளை பிடித்துக் கொள்ளகிறார்கள். இம்மரம் ஆஸ்திரேலியாவில் வளர்கிறது. இம்மரத்திற்கு மருத்துவரும் இயற்கையாளருமான வில்லியம் பைசோ என்பவரின் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்[தொகு]

| 1 || சிறியதும் - பெரியதும் [1] || அறிவியல் வெளியீடு || ஜூன் 2001

  1. சிறிதும் - பெரியதும். அறிவியல் வெளியீடு. http://books.google.com/books/about/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF.html?id=vKXyPAAACAAJ.