பறப்புக் கட்டுப்பாட்டு மேற்பரப்புகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அடிப்படையான வானூர்திக் கட்டுப்பாட்டு மேற்பரப்புக்களும் அவற்றின் இயக்கமும்.

வானூர்தியொன்றில் பறப்புக் கட்டுப்பாட்டு மேற்பரப்புகள் (flight control surfaces) என்பன, வானூர்தி ஓட்டி வானூர்தியின் திசை உயரம் என்பவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு உதவும் சாதனங்கள் ஆகும். திறன் வாய்ந்த பறப்புக் கட்டுப்பாட்டு மேற்பரப்புகளின் வளர்ச்சியே வானூர்திகளின் வளர்ச்சியில் முக்கிய முன்னேற்றங்களை ஏற்படுத்தியது. நிலைத்த இறக்கை வானூர்திகளின் வடிவமைப்பின் தொடக்ககால முயற்சிகள் நிலத்திலிருந்து வானூர்திகளை மேலெழும்பச் செய்வதற்குப் போதுமான உயர்த்து விசையை உருவாக்குவதில் வெற்றிபெற்றன. ஆனால், மேலெழுந்ததும் அதைக் கட்டுப்படுத்த முடியாமல் கெடுதலான விளைவுகள் ஏற்பட்டன.

வளர்ச்சி[தொகு]

முதல் நடைமுறைச் சாத்தியமான கட்டுப்பாட்டு மேற்பரப்புக்களை உருவாக்கிய பெருமை ரைட் சகோதரர்களைச் சாரும். பறப்புத் தொடர்பான அவர்களது காப்புரிமையில் இது முக்கிய பகுதியாக இருந்தது.[1] தற்காலத்துக் கட்டுப்பாட்டு மேற்பரப்புக்கள் போலன்றி, இவர்களுடையதில் "இறக்கை முறுக்கல்" முறை பயன்பட்டது.[2] ரைட் சகோதரர்களின் காப்புரிமையில் இருந்து தப்புவதற்காக கிளென் கேர்ட்டிசு என்பவர் பிணைச்சல் பயன்படுத்திய கட்டுப்பாட்டு மேற்பரப்புகளைப் பயன்படுத்தினார். இதே போன்ற கருத்துரு ஒன்றுக்கு ஏறத்தாழ நான்கு பத்தாண்டுகளுக்கு முன்பே ஐக்கிய இராச்சியத்தில் காப்புரிமை பதிவுசெய்யப்பட்டிருந்தது. இறக்கை முறுக்கல் முறையில் இருப்பதுபோல் பிணைச்சற் கட்டுப்பாட்டு மேற்பரப்புகளில் தகைப்பு ஏற்படுவதில்லை. பிணைச்சற் கட்டுப்பாட்டு மேற்பரப்புகளை அமைப்புக்களில் பொருத்துவதும் இலகு.

மேற்கோள்கள்[தொகு]

  1. Patents
  2. *Centennial of flight Archived 2008-05-05 at the Wayback Machine - illustration of Wilbur Wright invention of wing warping using a cardboard box