பப்பாளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பறங்கிப்பழம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பப்பாளி
Carica papaya - Köhler–s Medizinal-Pflanzen-029.jpg
கோயெலர்-ன்மெடிசினல்-ப்லான்ட்ஸ்-லிருந்து (1887), பப்பாளிப் பழமும் மரமும்
உயிரியல் வகைப்பாடு
திணை: நிலைத்திணை
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: இருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத: Rosids
வரிசை: Brassicales
குடும்பம்: Caricaceae
பேரினம்: Carica
இனம்: C. papaya
இருசொற் பெயரீடு
Carica papaya
L.

பப்பாளி (Carica papaya) (பறங்கிப்பழம் என்பது மற்றோரு பெயர் ஆகும்) ஒரு பழந் தரும் மரமாகும். இதன் பூர்வீகம் மெக்சிக்கோ. தற்போது மேற்கிந்தியத் தீவுகள், ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கா முதலான நாடுகளிலும் பப்பாளி விளைகிறது. இதன் விளைச்சல் காலம் பெப்ரவரி, மார்ச் மாதங்களும், மே முதல் அக்டோபர் வரையான மாதங்களும் எனக் கணிக்கப் பட்டுள்ளது. பப்பாளி காயாக இருக்கும் போது பச்சையாகவும், நன்கு கனிந்ததும் மஞ்சளாகவும் தோற்றமளிக்கும். கனிந்த பப்பாளி மிகவும் இனிமையாக இருக்கும். விதைகள் கசப்பாக இருக்கும். பார்ப்பதற்கு கரு மிளகு போன்றிருக்கும்.

அடங்கியுள்ள சத்துக்கள்[தொகு]

  • பப்பாளியிலுள்ள சர்க்கரையில் பாதி குளுக்கோஸ், மீதி ஃபிரக்டோஸ்(பழச்சர்க்கரை.
  • விட்டமின் ஏ அதிகமாக உள்ளது.இது 1094 IU கொண்டிருக்கிறது [1]
  • கனியக் கனிய விட்டமின் சி கூடும். 100 கிராம் பச்சைக் காயான பப்பாளியில் 32 மில்லி கிராமும், சற்றே கனிந்த பப்பாளியில் 40 முதல் 72 மில்லி கிராமும், பாதிக்கு மேல் கனிந்தததில் 53 முதல் 95 மில்லி கிராமும், நன்கு கனிந்ததில் 68 முதல் 136 மில்லி கிராமும் விட்டமின் சி இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
  • மே முதல் அக்டோபர் வரை விளையும் பப்பாளிகளில் சர்க்கரைச் சத்தும் விட்டமின் சி யும் மிக அதிகமாக இருக்கும். பப்பாளியில் சிறிதளவு விட்டமின் பி1, விட்டமின் பி2 மற்றும் நியாசின் என்பனவும் உள்ளன.
  • பச்சைக் காயிலுள்ள பாலில், செரிமானத்திற்கு உதவும் நொதியப் பொருட்கள்(என்சைம்) உள்ளன. இதற்கு பப்பாயின் என்று பெயர். இது புரோட்டீனை செரிக்க வைக்க மிகவும் உதவும். நிறைய பருப்பு உணவை உண்டபின் பப்பாளித் துண்டுகள் சாப்பிட்டால் நன்றாகச் செரிமானம் ஆகிவிடும்.

வெளி இணைப்புகள்[தொகு]

  1. Papaya nutrition facts
"https://ta.wikipedia.org/w/index.php?title=பப்பாளி&oldid=2039522" இருந்து மீள்விக்கப்பட்டது