உள்ளடக்கத்துக்குச் செல்

பர் துபாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துபை சிற்றோடை பகுதியில், எதிர்கொள்ளும் ன் Deira .

பர் துபாய் ( அரபு மொழியில் : بر دبي) ,ஐக்கிய அரபு அமீரகத்தின், துபாய் க்ரீக்கின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு வரலாற்று சிறப்புமிக்க மாவட்டமாகும். இதன் பெயர் மெயின்லாந்து துபாய் என்று பொருள்ப்படுத்தப்படுகிறது. இது துபாய் பகுதியை தெய்ரா பகுதியிலருந்து துபாய் கிரீக் மூலம் பிரிக்கும் இடமாகும். ஆகையால் இது பாரம்பரியமிக்க இடமாக பார்க்கப்படுகிறது. பர் துபாய் வரலாற்று ரீதியாக க்ரீக்கின் மேற்குக் கரைக்கும் ஜுமேராவிற்கும் இடையிலான அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கியது. இங்கு பெரிய மசூதியை ஒட்டி மாவட்டத்தின் ஆட்சியாளர் நீதிமன்றம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் தான் நகரத்தின் மிக உயரமான மினாரட், [1]கொண்ட பெரிய மசூதியும், நீல நிற ஓடு கொண்ட ஈரானிய மசூதியும் அமைந்துள்ளது. இங்கு தான் நாட்டின் ஒரே இந்து கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் பெரிய மசூதிக்கும் துபாய் க்ரீக்கிற்கும் இடையில் அமைந்துள்ளது. பெரும்பாலும் இந்திய குடும்பங்கள் பர் துபாயில் வசிக்கின்றன.

இந்த மாவட்டத்தில் தான் புதுப்பிக்கப்பட்ட பல வரலாற்று கட்டிடங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் அடங்கிய சுற்றுலா இடங்கள் அமைந்துள்ளது. இது சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்கு பிடித்த பிரபலமான இடங்களைக் கொண்டுள்ளது. இந்த மாவட்டத்தில் பல வணிக வீதிகள் மற்றும் வணிக சந்தைகள் (அல்லது சூக்) உள்ளன. இதில் அப்ரா படகு நிலையத்திற்கு அருகிலுள்ள ஜவுளி சந்தை பிரப்பலமனது. ஆனால் பலருக்கு நன்கு அறியப்பட்ட வணிக சந்தைகள் பெரும்பாலானவை தேராவில் அமைந்துள்ளன.

வரலாற்று பகுதி

[தொகு]

அல் பஸ்தாக்கியா என்ற வரலாற்றுப் பகுதி அல் பாஹிடி கோட்டையின் கிழக்கே அமைந்துள்ளது (இப்போது துபாய் அருங்காட்சியகத்தின் வீடு ). இந்த பகுதியில் தான் பழைய பல புராதான வீடுகள் அமைந்துள்ளது. இவைகளை அதன் காற்றுக் கோபுரங்களை வைத்து அடையாளம் கண்டுகொள்ளலாம். [2] இதன் வடமேற்கில் ஷிண்டாகாவும், அருகில் பர் துபாய், துபாய் கிரீக்கும், கடலும் இடையில் அமைந்துள்ளது.

நவீன முன்னேற்றங்கள்

[தொகு]

2013 மற்றும் 2016க்கு இடையில் நடைப்பெற்ற மாற்றங்களை தொடர்ந்து பர் துபாய், துபாய் க்ரீக் கடலுக்கு அருகே வரை நீட்டிக்கப்பட்டது. இதன் மூலம் பர் துபாய் ஒர் தீவாக மாற்றியது. தற்போது பர் துபாய் பல அடுக்குமாடி கட்டிடங்களைக் கொண்ட ஒரு பிரபலமான வாழ்க்கைப் பகுதியாக உள்ளது. [3]

துபாய் விமான நிலையத்திற்கு செல்லும் துபாய் மெட்ரோ சிவப்பு வழிதடம் பர் துபாய் வழியாக செல்கிறது.

குறிப்புகள்

[தொகு]
  1. DubaiCity.com பரணிடப்பட்டது திசம்பர் 16, 2010 at the வந்தவழி இயந்திரம்
  2. "Dubai Travel Guide | National Geographic". travel.nationalgeographic.com. பார்க்கப்பட்ட நாள் 2018-05-28.
  3. "First look: The Dubai Canal has opened today..." (in en-US). What's On Dubai. 2016-11-13. http://whatson.ae/dubai/2016/11/dubai-canal/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பர்_துபாய்&oldid=3536013" இலிருந்து மீள்விக்கப்பட்டது