பர்ஸ்ட் பீப்பிள்சு (முதல் மக்கள்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பர்ஸ்ட் பீப்பிள்சு (முதல் மக்கள்) என்பது பூமியில் உள்ள முதல் மனிதர்களைப் பற்றிய ஐந்து பகுதிகளாக ஒளிபரப்பப்பட்ட பொது ஒளிபரப்புச் சேவை தொலைக்காட்சியின் ஆவணப் படமாகும். இந்த நிகழ்ச்சி 2015-ல் ஒளிபரப்பப்பட்டது.[1] மனிதர்கள் ஒவ்வொரு கண்டத்தையும் எப்படி அடைந்தார்கள், பல்வேறு புதைபடிவ கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்தி, நவீனக் காலத்துக்கு முந்தைய மனித இடம்பெயர்வு பற்றிய ஆராய்ச்சியின் பின்னணியினை விவரிக்கின்றது. இந்த ஆய்வுகளில் ஈடுபட்டுள்ள பல ஆராய்ச்சியாளர்களுடனான நேர்காணல்கள் இந்த திட்டத்தில் அடங்கும்.[2] மரபியல் வல்லுநர்களான சுவான்டே பாபோ மற்றும் எஸ்கே வில்லர்ஸ்லெவ் மற்றும் மானுடவியலாளர்கள் ஜான் டி. ஹாக்ஸ்[3] மற்றும் நிக்கோல் வாகுஸ்பேக் முக்கியப் பங்காற்றினர்.[4]

அத்தியாயங்கள்[தொகு]

  1. "முதல் மக்கள்: அமெரிக்கர்கள்" [5] கென்னவிக் மேனுடன் அவரது டி.என்.ஏ. அவரைப் பற்றி என்ன வெளிப்படுத்துகிறது என்பது பற்றிய நீண்ட விவாதத்துடன் அத்தியாயம் தொடங்குகிறது[6]
  2. "முதல் மக்கள்: ஆப்பிரிக்கா" [7] இந்த அத்தியாயம் மொராக்கோவில் காணப்படும் ஜெபல் இர்ஹவுட் மண்டை ஓட்டை விவாதிக்கிறது. மேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்காவில் உள்ள மற்ற மனிதர்களின் ஆதாரங்களையும் இது விவாதிக்கிறது.[1]
  3. "முதல் மக்கள்:ஆசியா" [8] இது மனிதனின் ஆய்வு தேவையை வலியுறுத்தியது. இந்த தேவையின் காரணமாக இவர்கள் மற்ற மக்களைச் சந்தித்தனர். நவீன மனித டி.என்.ஏ. நியாண்டர்தால்கள் போன்ற பிற மனித இனங்களுடன் பழமையான கோமோ சேபியன் கலப்பினைக் காட்டுகிறது.[6]
  4. "முதல் மக்கள்: ஆத்திரேலியா" [9]இந்த திட்டம் முதல் மக்களுக்கும் நவீன கால ஆத்திரேலிய பழங்குடியினருக்கும் இடையிலான நெருங்கிய தொடர்புகளை ஆராய்கிறது.[10]
  5. "முதல் மக்கள்: ஐரோப்பா"[11] இது கோமோ சேபியன்சுடன் வந்த ஐரோப்பாவில் கலையின் வெளிப்பாட்டினை எடுத்துக்காட்டுகிறது.[10]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Kristina Killgrove (June 24, 2015). "Review: 'First Peoples' Series Chronicles Origins And Spread Of Modern Humans". Forbes. பார்க்கப்பட்ட நாள் July 11, 2015.
  2. John Timmer (June 24, 2015). "Review: PBS' "First Peoples" tracks our arrival on every continent". Ars Technica. பார்க்கப்பட்ட நாள் March 7, 2020.
  3. "First Peoples - Full Cast & Crew". IMDb. பார்க்கப்பட்ட நாள் March 7, 2020.
  4. "UW Anthropologist to Appear in "First Peoples" PBS Series". Sweetwater Now. May 27, 2015. பார்க்கப்பட்ட நாள் March 7, 2020.
  5. "Americas – First Peoples". Public Broadcasting Service (PBS). Archived from the original on ஜூலை 23, 2015. பார்க்கப்பட்ட நாள் July 11, 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. 6.0 6.1 Neil Genzlinger (June 23, 2015). "Review: 'First Peoples' Finds the Drive to Explore in Our DNA". The New York Times. பார்க்கப்பட்ட நாள் July 11, 2015.
  7. "Africa – First Peoples". Public Broadcasting Service (PBS). Archived from the original on ஜூலை 21, 2015. பார்க்கப்பட்ட நாள் July 11, 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  8. "Asia – First Peoples". Public Broadcasting Service (PBS). Archived from the original on ஆகஸ்ட் 10, 2015. பார்க்கப்பட்ட நாள் July 11, 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  9. "Australia – First Peoples". Public Broadcasting Service (PBS). Archived from the original on ஆகஸ்ட் 10, 2015. பார்க்கப்பட்ட நாள் July 11, 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  10. 10.0 10.1 "First Peoples". ThinkTV/Public Media Connect. Archived from the original on அக்டோபர் 4, 2015. பார்க்கப்பட்ட நாள் July 11, 2015.
  11. "First Peoples – Europe". Public Broadcasting Service (PBS). Archived from the original on ஜூன் 22, 2015. பார்க்கப்பட்ட நாள் July 11, 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள்[தொகு]

விமர்சனங்கள்[தொகு]