பெர்வேஸ் முஷாரஃப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பர்வேஸ் முஷாரஃப் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
பெர்வேஸ் முஷாரஃப்
Pervez Musharraf
پرويز مشرف
PervezMusharraf.jpg
பாகிஸ்தானின் 12வது அதிபர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
ஜூன் 20, 2001
பிரதமர் சஃபாருல்லா கான் ஜமாலி, சௌத்திரி ஹுசேன் மற்றும் ஷௌக்காத் அசீஸ்
முன்னவர் முகமது ரஃபீக் தரார்
தனிநபர் தகவல்
பிறப்பு ஆகத்து 11, 1943 (1943-08-11) (அகவை 76)
Flag of Imperial India.svg டில்லி, பிரித்தானிய இந்தியா
அரசியல் கட்சி பாகிஸ்தான் முஸ்லிம் லீக்

பெர்வேஸ் முஷாரஃப் பாகிஸ்தானின் முன்னாள் இராணுவத் தளபதியும் அதிபரும் ஆவார். இவர் 1999 ஆம் ஆண்டில் பிரதமர் நவாஸ் செரிபின் ஆட்சியைக் கலைத்து இராணுவ சதிப்புரட்சி மூலம் நாட்டின் அதிபரானார். பதவியேற்றவுடன் இராணுவப் பதவியைக் கைவிடுவதாக அறிவித்த போதும் அதனைச் செய்ய மறுத்தார். இனிவரும் தேர்தலில் வெற்றி பெற்றால் இராணுவத் தளபதிப் பொறுப்பில் இருந்து விலகுவதாகக் குறிப்பிட்டுள்ளார். இவர் அமெரிக்கச் சார்புக் கொள்கையைக் கையாண்டு வருகின்றார்.[1]

2007 மார்ச் மாதம் நாட்டின் உயநீதிமன்ற நீதிபதியைப் பதவி விலக்கியதில் இருந்து மக்கள் மத்தியில் இவரது செல்வாக்குக் குறையத் தொடங்கியது. மேலும் 2007 ஜூலை மாதம் இவரது கட்டளைப் படி இஸ்லாமாபாத்தின் செம்மசூதியை ஒரு வாரம் வரையில் முற்றுகையிட்டிருந்த பாகிஸ்தானிய இராணுவம் உள்நுழைந்து அதில் தங்கியிருந்த அல்-கைடா ஆதரவுத் தீவிரவாதிகளைக் கொன்றார்.[1]

2008இல் ஆகஸ்ட் 18ஆம் தேதி பிரதமர் பதவியிலிருந்து விலகினார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Haider, Kamran (நவம்பர் 3 2007). "Musharraf imposes emergency rule". ரொய்டர்ஸ். http://www.reuters.com/article/newsOne/idUSCOL19928320071103?sp=true. பார்த்த நாள்: 2007-11-03. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெர்வேஸ்_முஷாரஃப்&oldid=2759223" இருந்து மீள்விக்கப்பட்டது