பர்வீனா அஹங்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பர்வீனா அஹங்கர்
பிறப்புசிறிநகர், காஷ்மீர், இந்தியா
மற்ற பெயர்கள்காஷ்மீரின் இரும்புப் பெண்மணி
பணிகாணாமல் போனவர்களின் பெற்றோர் சங்கத்தின் நிறுவனர் (APDP)
அறியப்படுவது2017 ஆம் ஆண்டு மனித உரிமைகளுக்கான ராஃப்டோ பரிசை பெற்றவர்
வலைத்தளம்
http://www.apdpkashmir.com

பர்வீனா அஹங்கர் (Parveena Ahanger) ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஸ்ரீநகரில் பிறந்தார். இவர், ஜம்மு மற்றும் காஷ்மீரில் காணாமல் போனவர்களின் பெற்றோர் சங்கத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் ஆவார்.

2017 ஆம் ஆண்டு மனித உரிமைகளுக்கான ராஃப்டோ பரிசை இவர் "கட்டாயமாக காணாமல் போதல்களுக்கு எதிரான போராட்டங்களுக்காக" வென்றார். மேலும், ஜம்மு மற்றும் காஷ்மீரில் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரியதற்காக வென்றார். [1] [2] 2019 ஆம் ஆண்டிற்கான உலகெங்கிலும் உள்ள 100 ஊக்கமளிக்கும் மற்றும் செல்வாக்கு மிக்க பிபிசி 100 பெண்களின் பட்டியலில் ஒருவராக இவர் பெயரிடப்பட்டார் [3]

பர்வீனாவை 'காஷ்மீரின் இரும்புப் பெண்மணி' என்று குறிப்பிடுகிறார்கள். காஷ்மீரிகளின் வலி மற்றும் துயரங்கள் குறித்து இந்திய ஊடகங்களின் வஞ்சக அணுகுமுறையின் காரணமாக இவரால் நிராகரிக்கப்பட்ட இந்திய ஊடக நிறுவனமான சிஎனென்-ஐபிஎன் ஆல் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். [4]

காணாமல் போனவர்களின் பெற்றோர் சங்கம்[தொகு]

பர்வீனா, 1994 ஆம் ஆண்டு "காணாமல் போனவர்களின் பெற்றோர் சங்கம்" என்கிற அமைப்பை பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டதால் காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்களை ஆதரிப்பதற்கும் அணிதிரட்டுவதற்கும், காஷ்மீரில் 8-10,000 தன்னிச்சையான காணாமல் போன வழக்குகளை விசாரிக்க இந்திய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்கும் தொடங்கினார். [5] இந்த அமைப்பு தன்னிச்சையாக காணாமல் போனவர்களுக்கு எதிரான ஆசிய கூட்டமைப்பின் ஒரு பகுதியாகும். [6]

காணாமல் போனவர்களின் பெற்றோர் சங்கத்தின் இணை நிறுவனரும் தலைவருமான பர்வீனா அஹங்கர், பிலிப்பைன்ஸ் (2000), தாய்லாந்து (2003), இந்தோனேசியா (2005), சியாங் மாய் (2006), ஜெனிவா (2008), கம்போடியா (2009) மற்றும் லண்டன் (2014). [7] போன்ற நகரங்களில் இந்த அமைப்பின் காரணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.

வெஸ்ட்மின்ஸ்டர் பல்கலைக்கழகத்தில் விரிவுரை[தொகு]

பர்வீனாஅஹங்கர் 2014 இல் லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் பல்கலைக்கழகத்தில் பேசினார் [8] அவரது உரையிலிருந்து ஒரு மேற்கோள்: [9]  

தாயின் வலி யாருக்கும் புரிவதில்லை. நான் பாதிக்கப்பட்டவள், எங்களைப் போல் பலர் இருக்கிறார்கள். காணாமல் போனவர்களின் பெற்றோர் சங்கம் எனது வலியிலிருந்தும் என்னைப் போன்ற நூற்றுக்கணக்கான தாய்மார்களின் வலியிலிருந்தும் உருவானது.

சான்றுகள்[தொகு]

  1. "Parveena Ahangar, Parvez Imroz Awarded Norway's Rafto Prize for Human Rights". The Wire. பார்க்கப்பட்ட நாள் 2018-06-15.
  2. "Parveena Ahangar & Parvez Imroz". The Rafto Foundation. Archived from the original on 2018-06-15. பார்க்கப்பட்ட நாள் 2018-06-15.
  3. "BBC 100 Women 2019". BBC.
  4. "Mother's Day Special: Parveena Ahengar, Mouj of Kasheer". Archived from the original on 2021-03-03. பார்க்கப்பட்ட நாள் 2023-03-08.
  5. "Association of Parents of Disappeared Persons | Cultures of Resistance". culturesofresistance.org. பார்க்கப்பட்ட நாள் 2019-08-21.
  6. "Annual Report 2018" (PDF). Asian Federation Against Involuntary Disappearances. 2019-10-16. Archived from the original (PDF) on 2021-07-26. பார்க்கப்பட்ட நாள் 2021-12-26.
  7. "Remembering those in Kashmir who exist but are missing" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-08-21.
  8. "Parveena Ahnager speaking at University of Warwick, UK". Kashmir Life. 2018-04-26. பார்க்கப்பட்ட நாள் 2021-12-10.
  9. Zahoor, Zubair (2021-07-16). "Parveena Ahangar: The Iron Lady Of Kashmir". Counter Currents (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-10.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பர்வீனா_அஹங்கர்&oldid=3766598" இலிருந்து மீள்விக்கப்பட்டது