உள்ளடக்கத்துக்குச் செல்

பர்யால் கோகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பர்யால் கோகர்
பிறப்புபர்யால் அலி கோகர்
18 திசம்பர் 1959 (1959-12-18) (அகவை 65)
இலாகூர், பாக்கித்தான்
கல்விமெக்கில் பல்கலைக்கழகம்
பணி
  • நடிகை
  • தொலஒக்காட்சி எழுத்தாளர்
  • மனித உரிமை ஆர்வலர்
  • எழுத்தாளர்
செயற்பாட்டுக்
காலம்
1979 – தற்போது வரை
பெற்றோர்சையது கோகர் (தந்தை)
கதீஜா அலி (தாய்)
வாழ்க்கைத்
துணை
ஜமால் ஷா (விவாகரத்து)
பிள்ளைகள்1

பர்யால் கோகர் (Faryal Gohar) (பிறப்பு: டிசம்பர் 18,1959) ஓர் பாக்கித்தானிய நடிகையும், தொலைக்காட்சி எழுத்தாளரும் மற்றும் மனித உரிமை ஆர்வலரும் ஆவார்.[1][2] உரான், சாந்தினி ராதைன், சந்த் கிரெகான், விசால் மற்றும் மோகினி மான்சன் கி சிண்ட்ரெல்லாயின் போன்ற ஆகிய நாடகங்களில் நடித்ததற்காக இவர் அறியப்படுகிறார்.[3]

இளமை வாழ்க்கை

[தொகு]

பரியால், 1959 டிசம்பர் 18 அன்று பாக்கித்தானின் இலாகூரில் பிறந்தார்.[4] இலாகூர் அமெரிக்கன் பள்ளியில் கல்வியைப் பயின்றார். மென்பந்தாட்டத்தில் ஆர்வம் கொண்ட இவர் தனது பள்ளியில் அணித்தலைவானார்.[5] பின்னர் கின்னெர்ய்ட் கல்லூரியில் பயின்றார்.[6] பின்னர் அரசியல் பொருளாதாரம் படிக்க கனடாவின் மெக்கில் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.[6] அங்கு பட்டம் பெற்ற பிறகு, இவர் அமெரிக்கா சென்று லாஸ் ஏஞ்சலஸில் உள்ள தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் திரைப்பட ஆவணப்படங்கள் பற்றி படித்தார்.[6]

தொழில் வாழ்க்கை

[தொகு]

பரியால், 1979 ஆம் ஆண்டில் பாக்கித்தான் தொலைகாட்சியில் ஒரு நடிகையாக அறிமுகமானார்.[7][6] இவர் தனது வருங்கால கணவர் ஜமால் ஷாவுடன் டிராஃபிக் என்ற நாடகத்தில் தோன்றினார்.[6] பின்னர் உரன், சந்த் கிரெகான் மற்றும் சாந்தினி ராதைன் ஆகிய நாடகங்களில் தோன்றினார்.[6]

1984 ஆம் ஆண்டில், பரியால் பலுசிஸ்தான் பல்கலைக்கழகத்தில் நுண்கலை துறையை நிறுவினார்.[6][8] குல் பெங்கே ஹெய்ன் என்ற தொலைக்காட்சித் திரைப்படத்திலும் தோன்றினார். பரியால் தனது சகோதரி மதீஹா கௌஹரால் நிறுவப்பட்ட அஜோகா நாடக நிறுவனத்தில் சேர்ந்து 1980கள் மற்றும் 1990களில் பல நாடகங்களை நிகழ்த்தினார்..[6][9][10]

1997 ஆம் ஆண்டில்இவர் ஜார் குல் திரைப்படத்தில் யாஸ்மினாகவும், 2014 ஆம் ஆண்டில் தமன்னா திரைப்படத்தில் மேடம் பாத்திமா என்ற கதாபாத்திரத்திலும் தோன்றினார்.[11] பின்னர் மோகினி மான்சன் கி சிண்ட்ரெல்லாயின் என்ற நாடகத்தில் தாரோ மாசியாக நடிகை ஷப்னம் மற்றும் கவி கானுடன் தோன்றினார்.[12]

நல்லெண்ண தூதர்

[தொகு]

1999 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் மக்கள் நிதியத்திற்கான நல்லெண்ண தூதராக பரியால் நியமிக்கப்பட்டார்.[6]

2018 ஆம் ஆண்டில் புற்றுநோய் பராமரிப்பு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தால் நல்லெண்ண புற்றுநோய் பராமரிப்புப் தூதராக நியமிக்கப்பட்டார்.[13]

பரியால் 2019 ஆம் ஆண்டில் பாக்கித்தான் கூட்டமைப்பின் சார்பில் மென்பந்தாட்ட நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டார்.[14]

சொந்த வாழ்க்கை

[தொகு]

பரியால் நடிகர் ஜமால் ஷா என்பவரை மணந்தார். இவர்கள் நீண்ட காலமாக திரை மற்றும் கலைத் துறையில் ஒன்றாக பணிபுரிந்தனர். ஆனால் 9 ஆண்டுகளுக்குப் பிறகு இவர்கள் விவாகரத்து செய்தனர்.[6] பின்னர், பரியால் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பாக்கித்தானைச் சேர்ந்த ஒரு மருத்துவரை மணந்தார். ஆனால் இந்த உறவும் விவாகரத்தில் முடிந்தது.[6][15] பரியாலின் மூத்த சகோதரி நடிகை மதீஹா கௌஹர் 2018 இல் இறந்தார்.[16] பர்யால் ஆசிரியர் சாகித் நதீமின் மைத்துனியும் ஆவார்.[6]

படைப்புகள்

[தொகு]

இன்றைய காலகட்டத்தில் ஆசை மற்றும் இழப்பு பற்றிய ஆய்வு பற்றிய தி சென்ட் ஆஃப் வெட் எர்த் இன் ஆகஸ்ட் என்ற தலைப்பில் பரியால் ஒரு விமர்சன நூலை எழுதினார்.[6][17][18] பின்னர், சமூக-அரசியல் சூழ்நிலை குறித்த கவலைகளைக் குறிப்பிடும் நோ ஸ்பேஸ் பார் பர்தர் பரியல்ஸ் என்ற தலைப்பில் மற்றொரு புத்தகத்தை எழுதினார். இது பல ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.[6] 2024 ஆம் ஆண்டில் ஆன் அபுன்டன்ஸ் ஆப் வைல்ட் ரோஸஸ் என்ற தலைப்பில் ஒரு நூலை எழுதினார்.[19]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Readings by Faryal Gohar: Author and rights activist shares her thoughts on social issues". The News International. 18 January 2021.
  2. "Achieving women empowerment, gender equality govt cherished goal: Ch Sarwar". The Nation. 28 September 2021.
  3. "This Is the Worst Catastrophe to Hit Any State Since Biblical Times–Just Back from Pakistan, Faryal Ali Gohar Describes the Suffering from the Flood". Democracy Now!. 2 February 2021.
  4. "Femme Faryal: A Woman of Accomplishment". Pakistaniat. 21 May 2021.
  5. "Faryal Gohar named Pakistan softball ambassador". Dawn News. 12 November 2021.
  6. 6.00 6.01 6.02 6.03 6.04 6.05 6.06 6.07 6.08 6.09 6.10 6.11 6.12 6.13 "Femme Faryal: A Woman of Accomplishment". Pakistaniat. 21 May 2021."Femme Faryal: A Woman of Accomplishment". Pakistaniat. 21 May 2021.
  7. "PTV veteran brings lives of past, present celebrities to limelight". The Nation. 8 June 2021.
  8. "Ajoka's acting Master Class from today". The Nation. 12 November 2021.
  9. "Ajoka begins workshop for aspiring actors". Images.Dawn. 19 July 2018.
  10. "Young actors given tips at Ajoka theatre workshop". The News International. 28 July 2021.
  11. "Movie Review: Tamanna is not meant for the big-screen". Dawn News. 18 June 2014.
  12. "Leaving Pakistan and Lollywood was painful, says Shabnam". Images.Dawn. 11 March 2017.
  13. "Mrs. Faryal A. Gohar joined Cancer Care Hospital & Research Center as Ambassador". Cancer Care Hospital & Research Center (A Charitable Trust). 1 September 2021.
  14. "Faryal Gohar named Pakistan softball ambassador". Dawn News. 12 November 2021."Faryal Gohar named Pakistan softball ambassador". Dawn News. 12 November 2021.
  15. "It took Bushra Ansari five years to open up about her divorce". The Express Tribune. 10 August 2021.
  16. "Veteran actress Madeeha Gohar passes away in Lahore". Dunya News. 20 March 2021.
  17. "English literary conference concludes". The Nation. 27 August 2021.
  18. "'Address Book: A Publishing Memoir in the time of COVID' review: Championing women in print". 21 August 2021. https://www.thehindu.com/books/books-reviews/address-book-a-publishing-memoir-in-the-time-of-covid-review-championing-women-in-print/article35999976.ece?__cf_chl_captcha_tk__=zKqgMcLqzTf2s6wDVl7JDCEZ_7HGnekkzHKpIAhNhKQ-1636965398-0-gaNycGzNCP0. 
  19. "Canongate scoops latest novel by Pakistani writer Ali-Gauhar". The Bookseller. January 22, 2024.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பர்யால்_கோகர்&oldid=4389659" இலிருந்து மீள்விக்கப்பட்டது