உள்ளடக்கத்துக்குச் செல்

பர்ப்பிள் க்ரோ லிடார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பர்ப்பிள் குரோ லிடார் (Purple Crow Lidar) என்பது மிகவும் சக்திவாய்ந்த ஒளி கண்டறிந்து வரம்பு நிர்ணயிக்கும் ஒரு லிடார் (லேசர் ரேடார்) அமைப்பு ஆகும்.[1] இது மிகுந்த பிரகாசமுள்ள ஒளித் துடிப்புகளை வெளியிடுகிறது. அந்த பிரகாசமான ஒளி காற்று மூலக்கூறுகளில் சிதறி, அதன் பிரதிபலிப்புகள் ஒரு பெரிய தொலைநோக்கி மூலம் சேகரிக்கப்படுகின்றன.[2] இது வளிமண்டலத்தை ஆய்வு செய்ய பயன்படும் ஒரு வகை லேசர் ரேடார் தொழில்நுட்பம் ஆகும். மிக அதிக பிரகாசமுள்ள லேசர் ஒளிக் கற்றைகளை வானில் அனுப்பி, அவை காற்று மூலக்கூறுகளில் மோதித் திரும்ப வரும் ஒளியைப் பதிவு செய்து ஆய்வு செய்வது இவ்வமைப்பின் அடிப்படையாகும்.

தொலைநோக்கி

[தொகு]

இந்த அமைபுக்கான தொலைநோக்கி, 2.65 மீட்டர் விட்டமுள்ள ஒரு பாத்திரத்தில் உள்ள திரவ பாதரசத்தை நிமிடத்திற்கு 10 சுற்றுகள் வேகத்தில் சுழற்றுவதன் மூலம் உருவாக்கப்படுகிறது. இந்த திரவக் கண்ணாடி தொழில்நுட்பம் கியூபெக் நகரத்தில் உள்ள லாவல் பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளது. இத்தகைய சுழலும் அளவீடு காற்றின் அடர்த்தி, அழுத்தம், வெப்பநிலை மற்றும் கலவையை அளவிட அனுமதிக்கிறது. இது புவி வெப்பமயமாதல் மற்றும் வானிலை முன்னறிவிப்புக்கான தரவுகளைச் சேகரிக்க பயனுள்ளதாக இருக்கும். [2]

வானிலை முன்னறிவிப்பு

[தொகு]

இந்த வரைபடம் இலண்டன் ஒன்டாரியோவில் உள்ள பர்ப்பிள் குரோ லிடார் நிலையத்தில் வானியல் கண்காணிப்புக்கான வானிலையைத் தீர்மானிக்கவும் கணிக்கவும் பயன்படுகிறது. [3]

அமைவிடம்

[தொகு]

கனடாவின் ஒன்டாரியோவில் உள்ள லண்டனுக்கு அருகில் அமைந்துள்ள வெசுட்டர்னின் சுற்றுச்சூழல் அறிவியல் கள நிலையத்தில் அமைந்துள்ள எக்கோ பேசு ஆய்வகத்திலிருந்து பர்ப்பிள் குரோ செயல்படுகிறது. [2]

பொறுப்பில் உள்ளவர்கள்

[தொகு]

பர்ப்பிள் குரோ லிடார் ஆராய்ச்சித் திட்டத்திற்கு மேற்கு ஒன்டாரியோ பல்கலைக்கழக இயற்பியல் துறை பேராசிரியர் ராபர்ட் ஜே. சிகா தலைமை தாங்குகிறார். [4] இதன் முக்கிய ஆதரவு கனடாவின் இயற்கை அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி கவுன்சிலிடமிருந்து வருகிறது. (NSERC). [5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Wing, Robin; Martic, Milena; Hauchecorne, Alain; Porteneuve, Jacques; Keckhut, Philippe; Courcoux, Yann; Yung, Laurent; Retailleau, Patrick et al. (2020). "Atmospheric Density and Temperature Vertical Profile Retrieval for Flight-Tests with a Rayleigh Lidar On-Board the French Advanced Test Range Ship Monge". Atmosphere 11 (1): 75. doi:10.3390/atmos11010075. Bibcode: 2020Atmos..11...75W.
  2. 1 2 3 "Purple Crow Lidar at The University of Western Ontario". Retrieved 28 January 2015.
  3. "Clear Sky Chart by Purple Crow Lidar Facility". Retrieved 28 January 2015.
  4. "The Department of Physics and Astronomy at The University of Western Ontario". Retrieved 28 January 2015.
  5. "Natural Science and Engineering Research Council of Canada". Retrieved 28 January 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பர்ப்பிள்_க்ரோ_லிடார்&oldid=4601348" இலிருந்து மீள்விக்கப்பட்டது