உள்ளடக்கத்துக்குச் செல்

பர்பர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேர்பர்கள்
Imazighen / ⵉⵎⴰⵣⵉⵗⴻⵏ
பேர்பர் இனக் கொடி
மொத்த மக்கள்தொகை
25 - 30 மில்லியன்[1] – +70 மில்லியன்[2][3][4][5]
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
 அல்ஜீரியாfrom 9[3] to ≈ 13 million[6][7] or ~32,000,000[8]
 மொரோக்கோfrom ≈ மில்லியன்[3] to ≈ 20 மில்லியன்[9][10][6][11] or 27,078,593[2]
 லிபியா~3,850,000[2]
 தூனிசியா110,000[12] or >6,589,652[2]
 பிரான்சு2 மில்லியனுக்கு மேல்[13]
 மூரித்தானியா2,883,000 (2,768,000[14] & 115,000[15])
 நைஜர்1,620,000[16]
 மாலி850,000[17]
 புர்க்கினா பாசோ50,000[18]
 எகிப்து34,000[19] or 1,826,580[2]
 கனடா37,060 (Including those of mixed ancestry)[20]
 இசுரேல்3,500[21]
மொழி(கள்)
பேர்பர் மொழிகள் (தமாசைட்), முன்னர் "திபினா" எழுத்தில் எழுதப்பட்டது (தாய் மொழி), அத்துடன் பேர்பர் இலத்தீன் எழுத்து (கடன் எழுத்து);
மக்ரெபி அரேபியக் கிளைமொழி (அரேபியமயமான பேர்பர்களிடையே)
சமயங்கள்
முதன்மையாக இசுலாம் (சுன்னி, சியா, இபாடி);
சிறுபான்மை கிறித்தவம்,[22][23] யூத மதம், மரபுவழி நம்பிக்கைகள்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
பிற ஆப்பிரிக்க-ஆசிய மொழிகள்[24][25][26][27][28][29][30]
இந்தக் கட்டுரை திபினா உரையைக் கொண்டுள்ளது. சரியான ஒழுங்கமைவு ஆதரவில்லையெனில், உங்களுக்கு கேள்விக்குறிகளோ, கட்டங்களோ அல்லது மற்ற குறியீடுகளோ தெரியலாம். திபினா எழுத்துக்களுக்குப் பதிலாக தெரியலாம்.

பேர்பர்கள் (Berbers) என்போர், வட ஆப்பிரிக்காவை, முதன்மையாக அல்சீரியா, வடக்கு மாலி, மௌரித்தானியா, மொரோக்கோ, வடக்கு நைகர், துனீசியா, லிபியா, மேற்கு எகிப்தின் சில பகுதிகள் ஆகியவற்றைத் தாயகமாகக் கொண்ட ஒரு இனக் குழுவினர் ஆவர். அத்திலாந்திக் பெருங்கடலில் இருந்து எகிப்தில் உள்ள சிவா பாலைவனச் சோலை வரையும், நடுநிலக் கடலில் இருந்து மேற்கு ஆப்பிரிக்காவின் நைகர் ஆறு வரையும் உள்ள ஒரு பகுதியில் பேர்பர்கள் பரவியுள்ளனர். முற்காலத்தில் இவர்கள், ஆப்பிரிக்க-ஆசிய மொழிக் குடும்பத்தின் பேர்பர் கிளையைச் சேர்ந்த பேர்பர் மொழிகளைப் பேசி வந்தனர். ஏழாம் நூற்றாண்டில் வடக்கு ஆப்பிரிக்காவை முசுலிம்கள் கைப்பற்றியதில் இருந்து, மக்ரெப்பில் வாழ்ந்த பேர்பர்கள் வெவ்வேறு அளவுகளில் வட ஆப்பிரிக்காவில் பேசப்பட்ட பிற மொழிகளைப் பொது மொழியாகப் பயன்படுத்தத் தொடங்கினர். வட ஆப்பிரிக்காவின் பகுதிகள் பிரான்சின் குடியேற்றப் பகுதிகளான பின்னர், பிரெஞ்சு மொழியை அல்சீரியாவின் உத்தியோகபூர்வ தேசிய மொழியாக ஆக்கியதன் மூலமும், கல்வி பிரெஞ்சு மொழியிலேயே கற்கப்படவேண்டும் என விதித்ததன் மூலமும், அங்கே பிரெஞ்சு மொழியைப் புகுத்துவதில் பிரெஞ்சு அரசாங்கம் வெற்றி கண்டது.[31] முன்னைய குடியேற்றவாத ஆட்சியாளர்களூடாகப் புகுத்தப்பட்ட வெளி மொழிகளான, முதன்மையாக பிரெஞ்சும், ஓரளவு இசுப்பானிய மொழியும் இன்றும் அல்சீரியாவிலும், மொரோக்கோவிலும், உயர் கல்வி, வணிகம் போன்ற தேவைகளுக்குப் பயன்பட்டு வருகின்றன.

வட ஆப்பிரிக்காவில் வாழும் பேர்பர்கள் பெரும்பாலும், லிபியா, அல்சீரியா, துனீசியா, மொரோக்கோ ஆகிய நாடுகளிலேயே வாழ்கின்றனர். சிறிய அளவிலான பேர்பர் மக்கள் நைகர், மாலி, மௌரித்தானியா, புர்க்கினா பாசோ, எகிப்து ஆகிய நாடுகளிலும், புலம்பெயர் சமூகமாக, பிரான்சு, இசுப்பெயின், கனடா, பெல்சியம், நெதர்லாந்து, செருமனி மற்றும் சில ஐரோப்பிய நாடுகளிலும் வாழ்கின்றனர்.[32][33]

பெரும்பான்மையான பேர்பர் மக்கள் சுன்னி முசுலிம்கள் ஆவர்.[34] பேர்பர் அடையாளம், பெரும்பாலும் மொழி, இனம் ஆகியவற்றுக்கும் அப்பால் பரந்து காணப்படுவதுடன், அது வட ஆப்பிரிக்காவின் முழு வரலாற்ரையும், புவியியலையும் தழுவியதாக உள்ளது. பேர்பர்கள், ஓரினத் தன்மை கொண்டவர்களாக இல்லாமல், பல்வேறுபட்ட சமூகங்களையும், குல மரபுகளையும் சேர்ந்தவர்களாகக் காணப்படுகின்றனர். பேர்பர்களை ஒன்றிணைக்கும் விடயம் பொது மொழியாகவோ, பொதுவான மரபுரிமை அல்லது வரலாறாகவோ இருக்கக்கூடும்.

வட ஆப்பிரிக்காவில், ஏறத்தாழ 25 மில்லியன் முதல் 30 மில்லியன் வரையிலான பேர்பர் மக்கள் வாழ்கின்றனர்.[1] பெரும்பாலான பேர்பர்கள் கடந்த பல பத்தாண்டுகள் அல்லது நூற்றாண்டுகளுக்கூடாகப் பிற மொழிகளைப் பேசி வருவதுடன், பேர்பர் மொழியை அறியாதவர்களாக இருப்பதால், பேர்பர் அல்லாத மொழிகளைப் பேசுபவர்களும் உள்ளிட்ட இன அடிப்படையிலான பேர்பர்கள் இன்னும் அதிகமான எண்ணிக்கையில் இருக்கக்கூடும். பெரும்பான்மை வட ஆப்பிரிக்க மக்கள் பேர்பர் மூலத்தைக் கொண்டவர்கள் எனக் கருதப்படுகின்றது. ஆனாலும், அரேபியமயமாக்கலினால் பெரும்பாலான பேர்பர் இனத்தவர் தம்மை அரேபியமயமான பேர்பர்களாக அடையாளம் காண்கின்றனர்.[35][36]

பேர்பர்கள் தம்மை "இ-மசி-என்" (i-Mazigh-en) என்னும் சொல்லினாலும் அதன் சில வேறுபாடுகளாலும் அழைக்கின்றனர். இது "சுதந்திரமான மக்கள்" அல்லது "உயர்குடி மக்கள்" என்ற பொருளை உடையதாக இருக்கக்கூடும். இச்சொல், கிரேக்க, உரோமர் காலங்களில் பேர்பர்களை அழைக்கப் பயன்படுத்திய "மசிசெஸ்" என்பதற்கு இணையானதாக இருக்கலாம்.[37] நன்கு அறியப்பட்ட பழங்கால பேர்பர்களுள், நுமிடிய அரசர் மசினிசா, அரசர் யுகுர்த்தா, பேர்பர்-உரோம எழுத்தாளர் அப்புலெயியசு, இப்போவின் செயின்ட் அகசுத்தீன், பேர்பர்-உரோமத் தளபதி லுசியசு குயியெட்டசு ஆகியோர் அடங்குவர்.

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 "North Africa's Berbers get boost from Arab Spring". Fox News. 5 May 2012. பார்க்கப்பட்ட நாள் 8 December 2013.
 2. 2.0 2.1 2.2 2.3 2.4 Tej K. Bhatia, William C. Ritchie (2006). The Handbook of Bilingualism. John Wiley & Sons. p. 860. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0631227350. பார்க்கப்பட்ட நாள் 16 July 2016.
 3. 3.0 3.1 3.2 "Berber people". பார்க்கப்பட்ட நாள் 2016-08-17.
 4. Native Peoples of the World: An Encyclopedia. Ed. Steven L. Danver, M. E. Sharpe/Mesa Verde Publishing, 2013, p. 23f.
 5. Berbers: The Empire Without Borders on temehu.com.
 6. 6.0 6.1 "Les Berbères en Afrique du Nord". Chaire pour le développement de la recherche sur la culture d'expression française en Amérique du Nord., Université Laval Québec, 2016.
 7. "Algeria reinstates term limit and recognises Berber language". BBC News.
 8. Tej K. Bhatia, William C. Ritchie (2006). The Handbook of Bilingualism. John Wiley & Sons. p. 860. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0631227350. -- 80% of Algeria population
 9. "Morocco – Berber". World Directory of Minorities and Indigenous Peoples.
 10. Peter Prengaman: Morocco's Berbers Battle to Keep From Losing Their Culture / Arab minority forces majority to abandon native language, Chronicle Foreign Service, March 16, 2001, on sfgate.com.
 11. Sandy Donovan: Teens in Morocco. Compass point books, Minneapolis 2008, p. 42 (online version).
 12. "Tunisia". The World Factbook.[தொடர்பிழந்த இணைப்பு]
 13. Les langues de France : un patrimoine méconnu, une réalité vivante பரணிடப்பட்டது 2014-09-29 at the வந்தவழி இயந்திரம், originally published by CultureCommunication.gouv.fr.
 14. Scholastic Library Publishing (2005). Lands and Peoples: Africa. Grolier. p. 135. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0717280241. பார்க்கப்பட்ட நாள் 17 August 2016.; Moors 80% of population of 3,460,000
 15. Joshua Project. "Tuareg, Tamasheq in Mauritania".
 16. "Niger". The World Factbook. Archived from the original on 2020-04-24. பார்க்கப்பட்ட நாள் 2018-05-24.
 17. "Mali". The World Factbook. Archived from the original on 2015-11-10. பார்க்கப்பட்ட நாள் 2018-05-24.
 18. Joshua Project. "Tuareg, Tamasheq in Burkina Faso".
 19. Joshua Project. "Berber, Siwa in Egypt".
 20. [1]
 21. Moshe Shokeid: The Dual Heritage: Immigrants from the Atlas Mountains in an Israeli Village. Manchester University Press, 1971.
 22. "Believers in Christ from a Muslim Background: A Global Census | Duane A Miller Botero - Academia.edu". academia.edu. பார்க்கப்பட்ட நாள் 27 March 2016.
 23. *(பிரெஞ்சு) Sadek Lekdja: Christianity in Kabylie, Radio France Internationale, 7 mai 2001 பரணிடப்பட்டது 2017-10-18 at the வந்தவழி இயந்திரம்.
 24. Blench, Roger. Archaeology, Language, and the African Past. Rowman: Altamira, 2006 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780759104662
 25. Diakonoff, Igor. The Earliest Semitic Society: Linguistic Data. Journal of Semitic Studies, Vol. 43 Iss. 2 (1998).
 26. Shirai, Noriyuki. The Archaeology of the First Farmer-Herders in Egypt: New Insights into the Fayum Epipalaeolithic and Neolithic. Leiden University Press, 2010. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789087280796.
 27. Blench R (2006) Archaeology, Language, and the African Past, Rowman Altamira, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7591-0466-2, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7591-0466-2, books.google.be/books?id=esFy3Po57A8C
 28. Ehret C, Keita SOY, Newman P (2004) The Origins of Afroasiatic a response to Diamond and Bellwood (2003) in the Letters of SCIENCE 306, no. 5702, p. 1680 எஆசு:10.1126/science.306.5702.1680c
 29. Bender ML (1997), Upside Down Afrasian, Afrikanistische Arbeitspapiere 50, pp. 19-34
 30. Militarev A (2005) Once more about glottochronology and comparative method: the Omotic-Afrasian case, Аспекты компаративистики - 1 (Aspects of comparative linguistics - 1). FS S. Starostin. Orientalia et Classica II (Moscow), p. 339-408. http://starling.rinet.ru/Texts/fleming.pdf
 31. Briggs, Carina Lynn (2010). Language, Identity, and Literary Expression in Algeria. Chapel Hill: University of North Carolina. பார்க்கப்பட்ட நாள் 12 November 2014.
 32. Morocco's Berbers Battle to Keep From Losing Their Culture. San Francisco Chronicle. March 16, 2001.
 33. Berbers: The Proud Raiders. BBC World Service.
 34. https://www.britannica.com/topic/Berber
 35. "Ethnic groups". The World Factbook. Archived from the original on 2019-01-06. பார்க்கப்பட்ட நாள் 2018-05-24.
 36. Tore Kjeilen. "Berbers". LookLex Encyclopaedia. Archived from the original on 2018-09-17. பார்க்கப்பட்ட நாள் 2018-05-24.
 37. Lipiński, Edward (2001). Semitic Languages: Outline of a Comparative Grammar. Leuven: Peeters Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-429-0815-4. page 38.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பர்பர்கள்&oldid=3561903" இலிருந்து மீள்விக்கப்பட்டது