உள்ளடக்கத்துக்குச் செல்

பர்னிதா பாக்ஜி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பர்னிதா பாக்ஜி (Barnita Bagchi)(பிறப்பு: 12 சூன் 1973) என்பவர் வங்காளத்தினைச் சேர்ந்த இந்தியப் பொதுவுட்மைக் கட்சியினைச் சார்ந்த பெண்ணிய ஆதரவாளரும், வரலாற்றாசிரியரும் இலக்கிய அறிஞரும் ஆவார். இவர் ஆம்ஸ்டர்டாம் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். இதற்கு முன் உட்ரெக்ட் பல்கலைக்கழகத்தில் இலக்கிய ஆய்வுகள் துறையிலும், அதற்கு முன்னதாக கொல்கத்தாவில் உள்ள கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் மேம்பாட்டு ஆய்வுகள் நிறுவனத்தில் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். இவர் கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகம், ஆக்ஸ்போர்டில் உள்ள செயின்ட் ஹில்டாஸ் கல்லூரி மற்றும் கேம்பிரிட்ச்சில் டிரினிட்டி கல்லூரி ஆகியவற்றில் கல்வி பயின்றுள்ளார்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பர்னிதா_பாக்ஜி&oldid=4555519" இலிருந்து மீள்விக்கப்பட்டது