பர்னாலா (பாகிஸ்தான் காஷ்மீர்)
தோற்றம்
பர்னாலா
برنالہ | |
|---|---|
நகரம் | |
| ஆள்கூறுகள்: 32°52′14″N 74°14′51″E / 32.870650°N 74.247478°E | |
| நாடு | பாகிஸ்தான் |
| பிரதேசம் | பாகிஸ்தான் காஷ்மீர் |
| மாவட்டம் | பீம்பெர் மாவட்டம் |
| அரசு | |
| ஏற்றம் | 313 m (1,027 ft) |
| மக்கள்தொகை (2017)[1] | |
| • மொத்தம் | 1,37,629 |
| நேர வலயம் | ஒசநே+5 (பாகிஸ்தான் சீர் நேரம்) |
| தொலைபேசி குறியீடு | 0092-05828 |
| இணையதளம் | Official Website |
பர்னாலா, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள காஷ்மீர் பகுதியில் அமைந்த பீம்பெர் மாவட்டத்தில் உள்ள பர்னாலா வருவாய் வட்டத்தின் தலைமையிட நகரம் ஆகும். செனாப் ஆற்றின் கரையில் அமைந்த பர்னாலா நகரம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தலைநகரான முசாபராபாத் நகரத்திற்கு தென்மேற்கே 309.3 கிலோமீட்டர் தொலைவிலும், சியால்கோட்டிற்கு 60 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. 2017 பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, பர்னாலா நகரத்தின் மக்கள் தொகை 1,37,629 ஆகும். இந்திய-பாகிஸ்தான் கட்டுப்பாட்டு கோடு எல்லையில் அமைந்த பர்னலா நகரத்தில் குஜ்ஜர் சமூக மக்கள் அதிகம் வாழ்கின்றனர். இந்நகரத்தில் பஞ்சாபி மொழியை 92% பேசுகின்றனர். மேலும் பகாரி மொழி மற்றும் உருது மொழிகள் பேசப்படுகிறது.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Statistical Year Book 2019" (PDF). Statistics Azad Jammu and Kashmir. Retrieved 4 May 2020.