பர்தோலி
பர்தோலி | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 21°07′N 73°07′E / 21.12°N 73.12°E | |
நாடு | ![]() |
மாநிலம் | குஜராத் |
மாவட்டம் | சூரத் |
பரப்பளவு | |
• மொத்தம் | 46 km2 (18 sq mi) |
ஏற்றம் | 22 m (72 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 60,821 |
• அடர்த்தி | 1,300/km2 (3,400/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | குஜராத்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 394601/02 |
தொலைபேசி குறியீடு | 02622 |
வாகனப் பதிவு | GJ-19 |
இணையதளம் | www |
பர்தோலி (Bardoli), மேற்கு இந்தியாவில் குஜராத் மாநிலத்தின் தெற்கில் உள்ள சூரத் மாவட்டத்தில் அமைந்த பர்தோலி வருவாய் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் நகராட்சி ஆகும். சூரத் நகரத்திற்கு கிழக்கே 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பர்தோலி நகரம் மிந்தோலா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.[1]
சிறப்பு
[தொகு]
பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில், பர்தோலி நகரத்தில் சர்தார் வல்லபாய் படேல் உடன் மகாத்மா காந்தி, நிலவரியை விலக்கக் கோரி உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொண்டனர்..
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 12 வார்டுகளும்ம் 12,553 குடியிருப்புகளும் கொண்ட பர்தோலி நகரத்தின் மக்கள் தொகை 60,821 ஆகும். அதில் ஆண்கள் 31,034 மற்றும் 29,787 பெண்கள் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 960 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 86.78 % ஆக உள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 14.16 % மற்றும் 2.49 % ஆக உள்ளனர். இந்நகரத்தில் இந்து சமயத்தினர் 76.25%, இசுலாமியர் 19.80%, சமணர்கள் 3.24%, கிறித்தவர்கள் 0.37%, சீக்கியர்கள் 0.09% மற்றும் பிற சமயத்தினர் 0.24% ஆக உள்ளனர்.[2]