பர்டியூ பல்கலைக்கழகம்
![]() 1968 வரையிலான இலச்சினை | |
வகை | பொது நல்கையாக இடமளிக்கப்பட்ட ஆய்வு பல்கலைக்கழகம் |
---|---|
உருவாக்கம் | மே 6, 1869 |
நிறுவுனர் | ழான் பர்டியூ |
Parent institution | பர்டியூ பல்கலைக்கழகம் தொகுதி |
நிதிக் கொடை | $4.1 பில்லியன் (2023) (system-wide)[1] |
நிதிநிலை | $2.5 பில்லியன் (2020–21)[2] |
தரநிர்ணயம் | உயர்நிலைக் கற்றல் ஆணையம் |
தலைவர் | முங் சியாங் |
Provost | பாட்றிக்கு ஜெ. வொல்ஃப் |
கல்வி பணியாளர் | 2,974 (உதிர்காலம் 2023)[3] |
மாணவர்கள் | 52,211 (உதிர்காலம் 2023)[3] |
பட்ட மாணவர்கள் | 39,170 (உதிர்காலம் 2023)[3] |
பட்டப்பின் படிப்பு மாணவர்கள் | 13,041 (உதிர்காலம் 2023)[3] |
அமைவிடம் | , , 40°25′30″N 86°55′23″W / 40.42500°N 86.92306°W |
வளாகம் | குறுநகரம்[4] |
செய்தித்தாள் | பர்டியூ எக்ஸ்போனென்ட் |
நிறங்கள் | பழைய தங்கமும் கருப்பும் [5] |
சுருக்கப் பெயர் | கொதிகலன் உருவாக்குநர்கள் |
நற்பேறு சின்னம் |
|
Sporting affiliations | NCAA டிவிசன் I FBS – பிக் டென் |
இணையதளம் | purdue |
![]() |
பர்டியூ பல்கலைக்கழகம் (Purdue University) ஐக்கிய அமெரிக்காவின் இந்தியானா மாநிலத்தின் மேற்கு லாஃபயாட்டே குறுநகரில் பொதுத்துறையில் நல்கையாக அளிக்கப்பட்ட இடத்தில் அமைந்துள்ள ஆய்வுப் பல்கலைக்கழகமாகும்.[6] இந்தப் பல்கலைக்கழகம் 1869ஆம் ஆண்டு நகரவணிகர் ழான் பர்டியூ என்பவரால் நல்கையாக வழங்கப்பட்ட பணம் மற்றும் இடத்தைக் கொண்டு துவங்கப்பட்டது; அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் வேளாண்மை கல்விக்காக நிறுவப்பட்டது.[7] செப்டம்பர் 16, 1874 அன்று முதல் வகுப்புகள் தொடங்கின .[7]
இந்தப் பல்கலைக்கழகம் அமெரிக்க பல்கலைக்கழக சங்கத்தின் உறுப்பினராக உள்ளது. உயர்கல்வி நிறுவனங்களை வகைப்படுத்தும் கார்னகி வரையறிதலில் "R1: முனைவர்பட்ட பல்கலைக்கழகங்கள் – மீயுயர் ஆய்வுச் செயல்திறன்" என வகைப்படுத்தப்பட்டுள்ளது.[8] இந்தியானாவின் எந்தவொரு தனியார் பல்கலைக்கழக வளாகங்களை விட கூடுதலான மாணவர்கள் பர்டியூவில் படித்து வருகின்றனர்., தவிரவும் ஐக்கிய அமெரிக்காவில் வெளிநாட்டு மாணவர்கள் பயிலும் பல்கலைக்கழகங்களில் மிகுதியானவர்கள் பயிலும் ஒன்பதாவது பல்கலையாக உள்ளது. [9] ஐக்கிய அமெரிக்காவின் மிகவும் தொன்மையான கணினியியல் கல்வித்திட்டம் இங்கு துவங்கியது.
இப்பல்கலைக்கழகத்துடன் 13 நோபல் பரிசு பெற்றோர், 1 தூரிங்கு விருது பெற்றவர், 1 பாரத ரத்னா பெற்றவர்,[a] 27 விண்ணோடிகள்,[10] 2 உலக உணவுப் பரிசு பெற்றோர், 3 புலிட்சர் பரிசு வாகையாளர்கள், 18 ஒலிம்பிக் பதக்கதாரிகள், 3 அமெரிக்க நாட்டின் தொழில்நுட்ப புதுமையாக்கப் பதக்கம் பெற்றவர்கள், 2 தேசிய அறிவியல் பதக்கம் பெற்றோர், 3 குடியரசுத் தலைவர் விடுதலைப் பதக்கம் பெற்றவர்கள், 7 ஐக்கிய அமெரிக்கப் பேரவை உறுப்பினர்கள், 3 அமெரிக்க ஆளுநர்கள், மற்றும் 2 அரசுத் தலைவர்கள் தொடர்பு பெற்றுள்ளனர்.[11][12]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ இற்றை: ஆகத்து 19, 2024 . "A year of record-setting milestones across key indicators at Purdue University". Purdue University. August 16, 2024. Retrieved August 19, 2024.
- ↑ "Purdue trustees approve university's operating budget". www.purdue.edu. Archived from the original on May 12, 2018. Retrieved May 23, 2018.
- ↑ 3.0 3.1 3.2 3.3 "Common Data Set 2023-2024" (PDF). Purdue University. October 15, 2023. Retrieved October 4, 2024.
- ↑ "IPEDS-Purdue University". Archived from the original on November 7, 2021. Retrieved November 7, 2021.
- ↑ "Visual Language Guideline". Brand.Purdue.edu. Purdue University Brand Style Guide. Archived from the original on February 14, 2020. Retrieved February 17, 2020.
- ↑ "Purdue Points of Pride". Purdue University. Archived from the original on May 8, 2004. Retrieved November 2, 2009.
- ↑ 7.0 7.1 "Purdue History". Purdue University. Archived from the original on March 22, 2016. Retrieved November 2, 2009.
- ↑ "Carnegie Classification of Institutions of Higher Education". Archived from the original on July 5, 2018. Retrieved April 14, 2019.
- ↑ Institute of International Education. (2020). "Leading Host Institutions, International Student Data from the 2020 Open Doors Report". பரணிடப்பட்டது ஆகத்து 23, 2021 at the வந்தவழி இயந்திரம். Open Doors Report on International Educational Exchange. Retrieved August 22, 2021.
- ↑ "Purdue in Space - Cradle of Astronauts". Purdue University (in ஆங்கிலம்). Retrieved February 4, 2024.
- ↑ "Fast Facts About Purdue University" (in ஆங்கிலம்). Purdue University. Retrieved April 12, 2021.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "The President's National Medal of Science: Recipient Search Results" (in ஆங்கிலம்). National Science Foundation. Archived from the original on April 12, 2021. Retrieved April 12, 2021.
பிழை காட்டு: <ref>
tags exist for a group named "lower-alpha", but no corresponding <references group="lower-alpha"/>
tag was found