பர்சிகான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பர்சிகான் (Bursicon)(கிரேக்கம் பர்சிகோசிலிருந்து, தோல் பதனிடுதல் தொடர்பானது) என்பது பூச்சி இயக்குநீர் ஆகும். இது முதிர்ச்சியடைந்த ஈக்களில் தோல் நிறமிடுதலை செய்கிறது .

அமைப்பு[தொகு]

இந்த இயக்குநீரின் மூலக்கூறு அமைப்பு சமீபத்தில் அறியப்பட்டது. பர்சிகான் என்பது 30 கிலோ டால்டன் எடையுள்ள நரம்பணு தொடர்புடைய இயக்குநீராகும். இது ஹீட்டோரோடைமெரிக் புரதம் ஆகும். இது CG13419 எனும் மரபணுவின் செயல்பாட்டினால் தோற்றுவிக்கப்படுகிறது. இரண்டு சிஸ்டைன் முடிச்சு துணைக்குழுக்களான பர்சு-α மற்றும் பர்சு-β ஆகியவற்றால் ஆனது.[1] இதனை கூழ்மப்பிரிப்பில் பிரிக்க இயலாது. மதுசாரம், அசிட்டோன், சில புரத நொதிகள் மற்றும் முக்குளோரோ அசிடேட் ஆகியவற்றில் இதன் செயல்பாட்டை இழக்கிறது. ஆனால் அம்மோனியம் சல்பேட்டைச் சேர்த்தால் பழைய நிலைக்கு மீண்டும் திரும்பும்.[2]

செயல்பாடு[தொகு]

பூச்சிகளின் உருமாற்றத்தின் கடைசிக் கட்டத்தில் பூச்சி இறக்கை விரிவாக்கத்தில் பர்சிகான் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இறக்கையின் முதிர்ச்சி. இந்த நேரத்தில், புதிதாக உருமாறிய முதிர்வடைந்த குடம்பி இறந்த உயிரணுக்களை நீக்குகின்றது. டுரோசோபிலா மற்றும் லூசிலியா குப்ரினா ஈக்களின், இறக்கையின் மேற்றோல், இறக்கை பரவும் நேரத்தில், விரிவான செல் இறப்பு உயிரணு தன்மடிவினால் நிகழ்கிறது.

இறப்பிற்கு உள்ளாகும் உயிரணு இறக்கையின் மேற்புறத்திலிருந்து அகற்றப்பட்டு இறக்கை நரம்புகள் வழியாக மார்பு குழிக்குள் உறிஞ்சப்படுகின்றன. உயிரணு இறப்பின் செயல்முறை தடுக்கப்பட்டாலோ அல்லது தாமதமானாலோ அடுத்தடுத்த இறக்கை முதிர்ச்சி பாதிக்கப்படும்.

பர்சிகான் ஒரு நிலையிலிருந்து அடுத்தநிலைக்கு உருமாற்றம் நிகழ்ந்த பிறகு வெளியிடப்படுகிறது. இது மேற்றோல் உயிரணு இறப்பைத் தூண்டுகிறது. இதே நேரத்தில், நிறமிடல் எதிர்வினையைத் துரிதப்படுத்துகிறது. மேலும் இறக்கையின் புதிதாக விரிவடைந்த மேற்புறத்தை கடினப்படுத்துகிறது.[3]

பர்சிகானும் பூச்சிகளும்[தொகு]

பர்சிகான் வெவ்வேறு பூச்சிகளில் காணப்படுகிறது. இது மூளையில் உள்ள சராசரி நரம்பு சுரப்பு உயிரணுக்களால் உற்பத்தி செய்யப்படுகிறது. இரத்த ஓட்டத்தில் கலந்து கார்போரா கார்டியாகாவில் சேமிக்கப்படுகிறது.

பர்சிகானின் அமைப்பு, பழ ஈ (டுரோசோபிலா மெலனோகாஸ்டர்) புரதத்தின் அமைப்பு நன்கு ஆராயப்பட்டது. மேலும் சில பூச்சி இனங்களில் கொசு (அனாபிலிசு கேம்பியே), கிரிக்கெட் (கிரைலசு பைமாகுலேடசு), வெட்டுக்கிளி (லோகோசுடா மைக்ரேடோரியா) மற்றும் உணவுப் புழு (டெனெப்ரியோ மோலிட்டர்) உட்படப் பல பூச்சியினங்களில் பர்சிகான் அமினோ அமில வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

பட்டுப்புழு (பாம்பிக்ஸ் மோரி ), ப்ளோ ஈ (கலிபோரா எரித்ரோசெபலா) மற்றும் கரப்பான் பூச்சி (பெரிப்லானெட்டா அமெரிக்கானா) ஆகியவற்றிலும் இந்த இயக்குநீர் காணப்படுகிறது.[4]

குறைபாட்டு விளைவு[தொகு]

முதலாவதாக, பர்சிகான் மரபணு இல்லாத டிரோசோபிலா மெலனோகாஸ்டரின் கூட்டுப்புழுவிலிருந்து உருமாறிய பூச்சி தங்கள் இறக்கைகளை விரிக்க இயலவில்லை. இரண்டாவதாக, புதிதாகத் தோன்றிய ஈயின் நீண்ட வயிற்றுடன் நீண்ட காலத்திற்கு இருக்கும். மேலும் வயிற்றுப்பகுதியில் மெலானின் நிறமி குறைவாகக் காணப்படும்.[1]

கலப்பினமாக்கல் மற்றும் நோய்தடுப்பாற்றல் உயிரணு உயிரியல் தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி, ஓடுடைய கணுக்காலிகளில் பர்சிகான் இதய செயல் பெப்டைடுடன் இணைக்கப்பட்டுள்ளது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. தோல்கழற்றல் செயல் படுத்தலில் ஓடுடைய கணுக்காலி இதய செயல் பெப்டைடு aகாரணமாக உள்ளது. நரம்பணுக்களில் குறைபாட்டைக் கொண்ட திடீர் மாற்றத்தில் தோன்றிய ஈக்களால் பர்சிகானை வெளிப்படுத்த முடியவில்லை.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Identification of the gene encoding bursicon, an insect neuropeptide responsible for cuticle sclerotization and wing spreading". Curr. Biol. 14 (13): 1208–13. July 2004. doi:10.1016/j.cub.2004.06.051. பப்மெட்:15242619. 
  2. "Properties of bursicon: an insect protein hormone that controls cuticular tanning". Science 151 (3706): 91–3. January 1966. doi:10.1126/science.151.3706.91. பப்மெட்:5908970. 
  3. "RNA interference-mediated silencing of the bursicon gene induces defects in wing expansion of silkworm". FEBS Lett. 581 (4): 697–701. February 2007. doi:10.1016/j.febslet.2007.01.034. பப்மெட்:17270178. 
  4. "Bursicon, the insect cuticle-hardening hormone, is a heterodimeric cystine knot protein that activates G protein-coupled receptor LGR2". Proc. Natl. Acad. Sci. U.S.A. 102 (8): 2820–5. February 2005. doi:10.1073/pnas.0409916102. பப்மெட்:15703293. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பர்சிகான்&oldid=3430431" இருந்து மீள்விக்கப்பட்டது