உள்ளடக்கத்துக்குச் செல்

பர்சானா (நடிகை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பர்சானா பரூச்சா
பிறப்புமும்பை, மகாராட்டிரா
பணிநடிகை, நடன இயக்குநர், வடிவழகர்
செயற்பாட்டுக்
காலம்
2006–2009

பர்சானா (Farzana) இந்தியாவின் மகாராட்டிர மாநிலம் மும்பையில் பிறந்த பர்சானா பருச்சா என்ற இயற்பெயர் கொண்டவர் ஓர் இந்திய நடிகையும், நடன இயக்குநரும் வடிவழகியும் ஆவார். ஒரு நடிகையாக, இவர் முக்கியமாகத் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். இவற்றில் குறிப்பிடத்தக்கவை பாக்யலட்சுமி பம்பர் டிரா (2006), சீமா சாசுதிரி (2007), பொம்மனா பிரதர்சு சந்தன சிசுடர்சு (2008).

ஆரம்பகால வாழ்க்கை

[தொகு]

பர்சானா மும்பையில் ஒரு பார்சி குடும்பத்தில் பிறந்து வளர்ந்தார்.[1]

திரைப்பட வாழ்க்கை

[தொகு]

பர்சானா ஒரு தொழில்முறை நடனக் கலைஞராகவும் நடன இயக்குநராகவும் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.[1] இவர் பல அழகுநயப்புக் காட்சிகள், காணொளிகளுக்கு நடன அமைப்பு செய்துள்ளார். ஒரு நடன இயக்குநராக, இவர் அட்னன் சமியின் மேடை நிகழ்ச்சிகளில் பணியாற்றினார். 2006-ஆம் ஆண்டு சஞ்சய் தத் நடித்த ஜிந்தா திரைப்படத்தின் தலைப்புப் பாடலுக்கான நடன அமைப்பு இவரது குறிப்பிடத்தக்க நடன அமைப்பாகும்.[2] பின்னர் இவர் ஹீரோ ஹோண்டா, சான்சுய், கோத்ரேஜ் ஹேர் கேர், பிக் பஜார் உள்ளிட்ட நிறுவனங்களுக்குத் தொழில்முறை வடிவழகியாக விளம்பரங்களில் நடித்துள்ளார்.[1]

இயக்குனர் நிதி பிரசாத் இவரை, தனது பாக்கியலட்சுமி பம்பர் டிரா (2006) திரைப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தார்.[3] இந்தப் படம் பிரியதர்சன் எழுதி இயக்கிய பாலிவுட் நகைச்சுவைத் திரைப்படமான மாலமால் வீக்லி (2006) திரைப்படத்தின் தெலுங்கு மாற்றுமொழித் திரைப்படம் ஆகும். ஒரு நகைச்சுவைத் திரைப்படத்தில் தனது வாழ்க்கையைத் தொடங்கிய இவர் , நகைச்சுவைத் திரைப்படக் கதாநாயகியாகவே சித்தரிக்கப்பட்டார்.

சீமா சாசுதிரி (2007), பொம்மனா பிரதர்சு சந்தன சிசுடர்சு (2008), கஜிபிஜி (2008),[4] மற்றும் குபேருலு (2008) போன்ற நகைச்சுவைத் திரைப்படங்களில் பர்சானா முன்னணி வேடத்தில் நடித்துள்ளார். முரளிகிருஷ்ணா, பூமிகா சாவ்லா நடித்த மல்லேபுவ்வு (2008) திரைப்படத்தில் இவர் நடனமாடியுள்ளார்.

2009-ஆம் ஆண்டு தமிழ்த் திரையுலகில் நுழைந்து சரத்குமார், நமீதா நடித்த 1977 திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார்.

பர்சானா ஓர் ஊட்டச்சத்து நிபுணர். மேலும் குடையூர்தி சறுக்கல், பாறை ஏறுதல், பங்கீ ஜம்பிங் போன்ற சாகச விளையாட்டுகளை விரும்புகிறவர். இவர் ரீபொக் பன்னாட்டு விளையாட்டு ஆடை நிறுவனத்திற்குப் பயிற்சியாளராக இருந்தார்.[1]

திரைப்படவியல்

[தொகு]
  • குறிப்பு: வேறுவிதமாகக் குறிப்பிடப்படாவிட்டால், அனைத்துப் படங்களும் தெலுங்கில் உள்ளன.
ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் குறிப்புகள்
2006 பாக்யலட்சுமி பம்பர் டிரா பாக்யலட்சுமி
2007 சீமா சாசுதிரி சுரேகா ரெட்டி
2008 பொம்மனா சகோதரர்கள் சந்தனா சகோதரிகள் சிரி சந்தன
2008 கஜிபிஜி வங்கியாளர்
2008 மல்லேபுவ்வு அவராகவே சிறப்புத் தோற்றம்
2008 குபேருலு மருத்துவர் கல்பனா
2009 1977 இன்பா தமிழ் திரைப்படம்
2009 சோல்ஜர்சு

நடன இயக்குனர்

[தொகு]
ஆண்டு திரைப்படம் மொழி குறிப்புகள்
2006 ஜிந்தா இந்தி

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 3 4 "Star Interviews : Farzana". Telugucinema.com. 8 December 2006. Archived from the original on 16 June 2012. Retrieved 17 August 2013.
  2. "Farzana interview - chitchat - Telugu film actress". Idlebrain.com. 7 December 2006. Retrieved 17 August 2013.
  3. "Item numbers are definitely not on my list". The Hindu. 12 December 2006. Retrieved 8 February 2022.
  4. "Multi-faceted Farzana - Times of India". The Times of India.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பர்சானா_(நடிகை)&oldid=4389648" இலிருந்து மீள்விக்கப்பட்டது