பர்குந்தா சக்ரா நதேரி
பர்குந்தா சக்ரா நதேரி فرخنده زهرا نادری | |
---|---|
தேசிய நல்லிணக்கத்துக்கான ஆப்கானித்தான் உயர் மன்ன்றத்தின் உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 22 ஆகத்து 2020 | |
குடியரசுத் தலைவர் அசரஃப் கனி அகமத்சயின் மூத்த ஆலோசகர் | |
பதவியில் திசம்பர் 2016 – நவம்பர் 2018 | |
ஆப்கானிஸ்தான் தேசிய மன்றத்தின் உறுப்பினர் (Lower House, Term 16) | |
பதவியில் 2010–2015 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பர்குந்தா சக்ரா ஏப்ரல் 19, 1981 |
தேசியம் | ஆப்கானித்தான் |
அரசியல் கட்சி | ஆப்கானித்தானின் தேசிய ஒருமைப்பாட்டு கட்சி |
பெற்றோர் |
|
வாழிடம்(s) | தைமானி, காபுல், ஆப்கானித்தான் |
Religion | இசுலாம் (இசுமாயிலி சியா) |
விருதுகள் | N-அமைதி விருது 2012 |
இணையத்தளம் | |
பர்குந்தா சக்ரா நதேரி (Farkhunda Zahra Naderi) ஆப்கானித்தானைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். அப்துல்லா அப்துல்லா தலைமையிலான ஆப்கானித்தானின் தேசிய நல்லிணக்கத்திற்கான உயர் மன்றத்தின் உறுப்பினராக இருந்தர். முன்னதாக இவர் ஐக்கிய நாடுகளின் விவகாரங்களில் குடியரசுத் தலைவர் அசரப் கனியின் மூத்த ஆலோசகராக பணியாற்றினார். திசம்பர் 2016இல் வெளியிடப்பட்ட ஆணை மூலம் நதேரி நியமிக்கப்பட்டார்.[1] இவர் நவம்பர் 2018 இல் இப்பணியை விட்டு விலகினார்.[2] இவர் முன்னர் ஆப்கானித்தான் தேசிய மன்றத்தின் உறுப்பினராக பணியாற்றினார். இவர் 2010 ஆப்கானித்தான் நாடாளுமன்ற தேர்தலில் ஆப்கான் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] 2010 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் பாரிசில் தொடர்ச்சியாக மூன்று சாண்டிலி மாநாடுகளில் பங்கேற்ற ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஒரே பெண் பிரதிநிதியானார்.[4][5]
நதேரிக்கு சூலை 2012 இல் N- அமைதி (ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்டம்) விருது வழங்கப்பட்டது.[6]
மார்ச் 2013 இல், நதேரிஎக்குவடோரில் நடைபெற்ற நாடாளுமன்றங்களுக்கு இடையேயான நிலைக்குழு 128வது சட்டமன்றத்தில் ஒரு தேர்தல் செயல்பாட்டில் மூன்றாவது நிலைக்குழுவில் (மனித உரிமைகள் & ஜனநாயகம்) உறுப்பினரானார். ஆப்கானித்தான், ஆத்திரேலியா, ஈரான் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளுக்கு இடையேயான தேர்தலில், நதேரி 52இல் 28 வாக்குகளையும், ஆத்திரேலிய மற்றும் ஈரானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் முறையே 20 மற்றும் 3 வாக்குகளையும் பெற்றனர்.[7] மார்ச் 2014 இல் குழுவின் 130வது சட்டசபையில், நாடாளுமன்றங்களுக்கிடையேயான ஒன்றியத்தின் மூன்றாவது நிலைக்குழுவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[8] திசம்பர் 2016 இல், இவர் ஐக்கிய நாடுகள் அவையின் விவகாரங்களில் அசரப் கனியின் மூத்த ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.[9]
ஆரம்பகால வாழ்க்கை
[தொகு]நதேரி ஏப்ரல் 19, 1981இல் பிறந்தார்.[10] இவர் ஆப்கானித்தான் பாக்லான் இஸ்மாயிலின் தலைவர் சையத் மன்சூர் நதேரியின் மகள்.[11]
இவர், பாக்லான் மற்றும் காபூல் மாகாணங்களில் ஆரம்ப மற்றும் மேல்நிலைப் பள்ளியில் பயின்றார். பின்னர் இலண்டனில் உள்ள ஹரோவில் உள்ள ஹரோ கல்லூரியில் தனது இளங்கலை பட்டப்படிப்பை முடித்தார் [12] இவர் தாஷ்கந்துவுலுள்ள வெஸ்ட்மின்ஸ்டர் சர்வதேச பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். 2007இல் அதே பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றார்.[13]
2010 நாடாளுமன்ற தேர்தல்
[தொகு]2010 நாடாளுமன்ற தேர்தலில் காபூல் மாகாணத்தில் இருந்து ஆப்கானித்தானின் தேசிய ஒருமைப்பாட்டு கட்சி வேட்பாளராக இருந்த இவர் 6,612 வாக்குகளுடன் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[14] இவர் 2010 தேர்தல் பிரச்சாரங்களில் "புருக்கா அதிகாரத்தின் சாரளம்" என்ற சவாலான முழகத்துடன் பிரசாரம் செய்தார். மேலும், விளம்பரங்களிலும், சுவரொட்டிகளில் தன்னுடைய படங்கள் எதுவும் இடம்பெறவில்லை, ஏனெனில் அவர் முகங்களை விட வேட்பாளர்களின் தளங்களில் கவனம் செலுத்த பொதுமக்களை ஊக்குவிக்க விரும்பினார்.[15] இவரது பிரச்சார முறைகளில் காபூல் நகரத்தின் பல்வேறு பகுதிகளில் பிரச்சாரக் கூட்டங்களை ஏற்பாடு செய்தல், வேட்பாளர்களைப் பற்றிய தகவலை வழங்குவதற்காக குடிமக்களின் கதவுகளைத் தட்டி பிரச்சாரகர்களை அனுப்புதல் ஆகியவை அடங்கும்.[16]
பெண்கள் உரிமை ஆர்வலர்
[தொகு]ஆப்கானித்தானில் உள்ள பெண் உரிமை ஆர்வலர்களில் ஒருவராக நதேரி, ஆப்கானித்தானின் உச்சநீதிமன்றத்தில் ஒரு பெண்ணின் பிரதிநிதித்துவத்திற்காக பரப்புரை செய்து வருகிறார்.[17] 2012 சிகாகோ உச்சிமாநாட்டில் , இவர் நீதிமன்றத்தில் பெண்கள் இல்லாதது தனது "மிகப்பெரிய கவலை" என்று கூறினார்.[18] 2010ஆம் ஆண்டு ஆப்கானித்தான் நாடாளுமன்றத்தில் ஒரு பெண் அமர்ந்த பிறகு இவர் நீதிமன்றத்தில் ஒரு பெண்ணுக்கு அரசியல் ஆதரவு செய்யத் தொடங்கினார். இவர் இந்த யோசனையை ஆப்கான் நாடாளுமன்றத்தில் உள்ள பெண் குழு உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொண்டார். மேலும் பொதுச் சபையிலும் தெரிவித்தார்.[19]
விருதுகள்
[தொகு]2012 N- அமைதி விருதுக்கு ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தால் நதேரி பரிந்துரைக்கப்பட்டார். மின்னணு வாக்குப்பதிவு முறை மூலம் விருது பெற்றார்.[20] 2013 விருதை மற்றொரு பெண் ஆப்கானித்தான் நாடாளுமன்ற உறுப்பினர் மசுவடா கரோக்கி வென்றார், அவர் நதேரியால் பரிந்துரைக்கப்பட்டார்.[21]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "FZN Appointed as president's senior advisor to UN affairs".[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "2018 Resignation". பார்க்கப்பட்ட நாள் 2021-06-30.
- ↑ "About Farkhunda Zahra Naderi in 2010 Election". Archived from the original on 2014-11-08. பார்க்கப்பட்ட நாள் 2021-09-12.
- ↑ "Paris Peace Chantilly Conference". Archived from the original on 2014-11-08. பார்க்கப்பட்ட நாள் 2014-07-02.
- ↑ "Paris Conf-Chantilly". Archived from the original on 2021-03-03. பார்க்கப்பட்ட நாள் 2021-09-12.
- ↑ "2012 NPeace Award". Archived from the original on 2017-01-07. பார்க்கப்பட்ட நாள் 2014-07-01.
- ↑ "FZN Got Membership of IPU in 2013".
- ↑ "FZN elected as president 3rd Standing Committee of IPU in 2014".
- ↑ "Farkhunda Zahra Naderi appointed as President Ghani's senior adviser on UN Affairs". Khaama Press. 14 December 2016. பார்க்கப்பட்ட நாள் 7 January 2017.
- ↑ "Her Date of Birth". Archived from the original on 2021-03-03. பார்க்கப்பட்ட நாள் 2021-09-12.
- ↑ "Family Background".
- ↑ "Education-School". Archived from the original on 2021-03-03. பார்க்கப்பட்ட நாள் 2021-09-12.
- ↑ "Education-University". Archived from the original on 2021-03-03. பார்க்கப்பட்ட நாள் 2021-09-12.
- ↑ "FZN in 2010 election" (PDF). Archived from the original (PDF) on 2021-09-03. பார்க்கப்பட்ட நாள் 2021-09-12.
- ↑ "FZN Slogan in 2010 election campaigns".
- ↑ "Farkhunda Zahra Naderi's Campaign Method".
- ↑ "FZN-Women's participation in Supreme Court is Highly Needed".
- ↑ "FZN at Chicago Summit 2012". Archived from the original on 2014-07-18. பார்க்கப்பட்ட நாள் 2014-07-15.
- ↑ "Raihana Azad's comment about Farkhunda Zahra Naderi".
- ↑ "FZN won 2012 N-Peace award". Archived from the original on 2021-03-03. பார்க்கப்பட்ட நாள் 2021-09-12.
- ↑ "2013 N-Peace Award".