உள்ளடக்கத்துக்குச் செல்

பர்கான் அக்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பர்கான் அக்தார்
2016 இல் பர்கான் அக்தார்
பிறப்பு9 சனவரி 1974 (1974-01-09) (அகவை 50)
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள்எச்.ஆர். வணிகக்கல்லூரி
பணி
 • நடிகர்
 • இயக்குநர்
 • திரைக்கதை எழுத்தாளர்
 • தயாரிப்பாளர்
 • பாடகர்
 • பாடலாசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
2001–தற்போது வரை
பெற்றோர்ஜாவேத் அக்தர் (தந்தை)
ஹனி இரானி (தாயார்)
வாழ்க்கைத்
துணை
அதுனா பபானி
(தி. 2000; விவாகரத்து 2017)
சிவானி தண்டேகர் (தி. 2022)
பிள்ளைகள்2[1]

பர்கான் அக்தர் (Farhan Akhtar) (பிறப்பு 9 ஜனவரி 1974) [2] ஓர் பாலிவுட் நடிகரும், திரைப்பட தயாரிப்பாளரும், பாடகரும் மற்றும் பாடலாசிரியரும் ஆவார். திரைக்கதை எழுத்தாளர்களான ஜாவேத் அக்தர் மற்றும் ஹனி இரானி ஆகியோருக்கு மும்பையில் பிறந்த பர்கான், 1999 இல் ரித்தேஷ் சித்வானியுடன் இணைந்து எக்செல் என்டர்டெயின்மென்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நிறுவிய பிறகு, [3] நகைச்சுவை-நாடகத் திரைப்படமான தில் சஹ்தா ஹை (2001) மூலம் இயக்குநராக அறிமுகமானார். [4] இது திரைப்படத்தில் யதார்த்தமான நவீன இந்திய இளைஞர்களை சித்தரித்ததற்காக பரவலான விமர்சனப் பாராட்டுகளைப் பெற்றது. மேலும், சிறந்த இந்தி திரைப்படத்திற்கான தேசிய விருதையும் சிறந்த திரைப்படத்திற்கான (விமர்சகர்கள்) பிலிம்பேர் விருதையும் வென்றது. [5] இதைத் தொடர்ந்து, இவர் லக்சயா (2004) என்றத் திரைப்படத்தை இயக்கினார். பிரைட் அண்ட் பிரெஜுடிஸ் (2004) என்ற படத்தில் ஒலிப்பதிவு இயக்குநராக பணியாற்றியதன் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமானார். இவரும் இவரது சகோதரி சோயா அக்தரும் பாடலாசிரியராக பணியாற்றினார். அடுத்ததாக இவரது மூன்றாவது படமான டான் (2006), வணிகரீதியாக வெற்றியடைந்தது. அதன் பிறகு எயிட்சு பற்றிய விழிப்புணர்வை பரப்புவதற்காக பாசிட்டிவ் (2007) என்ற குறும்படத்தை இயக்கினார்.

இவர் ஆனந்த் சுராபூரின் திரைப்படமான த பக்கிர் ஆப் வெனிஸ் (2007) மற்றும் ராக் ஆன்!! (2008) மூலம் நடிகராகவும் அறிமுகமானார்.[6] தயாரிப்பாளராக சிறந்த இந்தி திரைப்படத்திற்கான இரண்டாவது தேசிய திரைப்பட விருதையும் தனது நடிப்பிற்காக சிறந்த ஆண் அறிமுகத்திற்கான பிலிம்பேர் விருதையும் வென்றார். உரையாடல்களை எழுதி விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்ற ஜிந்தகி நா மிலேகி டோபரா (2011) என்ற திரைப்படத்தையும் தயாரித்தார். இது இவருக்கு சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருதைப் பெற்ருத் தந்தடு. அதே ஆண்டில், டான் 2 (2011) என்ற தலைப்பில் டானி படத்தின் தொடர்ச்சியை இயக்கினார். இது இன்றுவரை இவரது அதிக வசூல் செய்த படமாக உள்ளது.

அதன்பிறகு பாக் மில்கா பாக் என்ற சுயசரிதைத் திரைப்படத்தில் மில்கா சிங்காக நடித்தார். இப்படம் இவருக்கு சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றுத் தந்தது. பின்னர், நகைச்சுவைத் திரைப்படமான தில் தடக்னே தோ (2015), அதிரடிப் படமான வாசிர் (2016) ஆகியவற்றில் நடித்ததற்காக பாராட்டுகளைப் பெற்றார். லக்னோ சென்ட்ரல் (2017), தி ஸ்கை இஸ் பிங்க் (2019) மற்றும் டூஃபான் (2021) ஆகியப் படங்களிலும் நடித்தார்.

சொந்த வாழ்க்கை[தொகு]

பர்கான் அக்தர், திரைக்கதை எழுத்தாளர்களான ஜாவேத் அக்தர் மற்றும் ஹனி இரானி ஆகியோருக்கு இரண்டாவது குழந்தையாக மும்பையில் பிறந்தார். எழுத்தாளர்- இயக்குனர் சோயா அக்தர் இவரது மூத்த சகோதரி ஆவார். இவரது இளம் வயதிலேயே பெற்றோர் விவாகரத்து செய்து கொண்டு பிரிந்தனர். இவரது தந்தை 1984 இல் நடிகை சபனா ஆசுமியை மணந்தார் [7] இவரது தாயார் குழந்தைகளை வளர்த்தார். அக்தர் மும்பையில் உள்ள மானக்ஜி கூப்பர் பள்ளியில் படித்தார். பின்னர் மும்பையில் உள்ள எச்ஆர் கல்லூரியில் சட்டப் பட்டம் பெற்றார். [8] அக்தரின் தந்தை, பிறப்பாலும் கலாச்சாரத்தாலும் ஒரு முஸ்லிம் என்றாலும் தான் ஒரு சோசலிசவாதி என்றும் நாத்திகர் என்று விவரித்தார். அக்தரின் தாய், இரானி சரதுசக் குடும்பத்தில் பிறந்தவர். மதத்தின் மீது அக்கறையற்றவர். மேலும் தனது குழந்தைகளை எந்த மதமும் இல்லாமல் வளர விடுவதில் திருப்தி அடைந்தார். தான் ஒரு நாத்திகன் என்று அக்தர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். [9]

அக்தரின் குடும்பம் இன்றைய உத்தரபிரதேசத்தின் அவத் பகுதியில் உள்ள கைராபாத்தைச் சேர்ந்தது. மேலும் இவர் உருது கவிஞர்களின் நீண்ட பரம்பரையில் இருந்து வந்தவர். இவர் உருது கவிஞர் ஜான் நிசார் அக்தரின் பேரனும் உருது கவிஞர் முஸ்தர் கைராபாடியின் கொள்ளுப் பேரனும் ஆவார். [10] குழந்தை நடிகை டெய்சி இரானி, நடன இயக்குனர் பராக் கான், சஜித் கான் ஆகியோர் இவரது தாய் வழி உறவினராவார்கள்.

மண வாழ்க்கை[தொகு]

அக்தர் 2000 ஆம் ஆண்டு பாலிவுட் சிகையலங்கார நிபுணரான அதுனா பபானி என்பவரை திருமணம் செய்து கொண்டார், அவருடன் 3 வருடங்கள் திருமண உறவில் இருந்தார். தம்பதியருக்கு சக்யா மற்றும் அகிரா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். 21 ஜனவரி 2016 அன்று, திருமணமான 16 ஆண்டுகளுக்குப் பிறகு இவர்கள் பிரிந்ததாக அறிவித்தனர். அவர்களின் விவாகரத்து 24 ஏப்ரல் 2017 அன்று முடிவடைந்தது. பின்னர் அக்தர் 2018 இல் தொலைக்காட்சித் தொகுப்பாளரான சிவானி தண்டேகர் என்பவருடன் 19 பிப்ரவரி 2022 அன்று, லோணாவ்ளா பண்ணை வீட்டில் மதச்சார்பற்ற முறையில் திருமணம் செய்து கொண்டார்.

சான்றுகள்[தொகு]

 1. "Wazir shadow creeps up on Farhan marriage". www.telegraphindia.com. Archived from the original on 1 April 2017.
 2. "Farhan Akhtar turns 34". Rediff. 9 January 2008. பார்க்கப்பட்ட நாள் 1 March 2011.
 3. "Excel Entertainment". பார்க்கப்பட்ட நாள் 2020-09-16.
 4. "Dil Chahta Hai (2001) Cast - Actor, Actress, Director, Producer, Music Director". பார்க்கப்பட்ட நாள் 2020-09-16.
 5. "National Awards Winners 2001: Complete list of winners of National Awards 2001". பார்க்கப்பட்ட நாள் 2020-09-17.
 6. ஃபர்ஹான் அக்தர் - புதிய பாத்திரங்களில் நடிக்கிறார்[தொடர்பிழந்த இணைப்பு] entertainment.oneindia.in, 27 செப்டம்பர் 2007.
 7. "Farhan Akhtar: For the love of friendship". 24 July 2011. http://tribune.com.pk/story/216515/farhan-akhtar-for-the-love-of-friendship/. 
 8. "Just How Educated Are These Bollywood Actors?". Rediff. 12 January 2012. பார்க்கப்பட்ட நாள் 20 May 2012.
 9. "Celebs who are atheist". பார்க்கப்பட்ட நாள் 16 September 2016.
 10. Jan Nisar Akhtar Biography பரணிடப்பட்டது 2 மார்ச்சு 2018 at the வந்தவழி இயந்திரம் The Encyclopaedia of Indian Literature (Volume Two) (D -J).

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பர்கான்_அக்தர்&oldid=3810808" இலிருந்து மீள்விக்கப்பட்டது