பர்காசைட்டு
| பர்காசைட்டு Pargasite | |
|---|---|
வெள்ளை பளிங்கின் மீது பர்காசைட்டு ஒற்றைப் படிகம், 1.5 செ.மீ நீளம், பாக்கித்தானில் கிடைத்தது | |
| பொதுவானாவை | |
| வகை | இனோசிலிக்கேட்டு |
| வேதி வாய்பாடு | NaCa2(Mg4Al)(Si6Al2)O22(OH)2 |
| இனங்காணல் | |
| நிறம் | நீலப்பச்சை, சாம்பல் கருப்பு, இளம் பழுப்பு |
| படிக இயல்பு | தடித்த பட்டகம் முதல் தட்டை |
| படிக அமைப்பு | ஒற்றைச்சாய்வு |
| இரட்டைப் படிகமுறல் | எளிய தகடு |
| பிளப்பு | {110} தெளிவு |
| முறிவு | எளிதில் பிளவுபடும் |
| மோவின் அளவுகோல் வலிமை | 5–6 |
| மிளிர்வு | பளபளக்கும் |
| ஒளிஊடுருவும் தன்மை | ஒளி கசியும், மெல்லிய விளிம்புகளில் பிரதிபலிக்கும். |
| ஒப்படர்த்தி | 3.04–3.17 |
| ஒளியியல் பண்புகள் | ஈரச்சு (−) |
| ஒளிவிலகல் எண் | nα = 1.630 nβ = 1.640 nγ = 1.650 |
| இரட்டை ஒளிவிலகல் | δ = 0.020 . |
| மேற்கோள்கள் | [1][2][3][4][5] |
பர்காசைட்டு (Pargasite) என்பது NaCa2(Mg4Al)(Si6Al2)O22(OH)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். பர்காசிட்டிக் ஆர்ன்பிளெண்டே என்ற பெயராலும் இக்கனிமம் அறியப்படுகிறது. ஆம்பிபோல் குழுவில் ஓர் இனோசிலிக்கேட்டு அணைவாக இது வகைப்படுத்தப்படுகிறது.
முதன்முதலில் 1814 ஆம் ஆண்டு பின்லாந்தின் பர்காசு நகரத்தில் கண்டுபிடிக்கப்பட்டு விவரிக்கப்பட்டது. மேலும் கிடைத்த அந்தப் பகுதியின் நினைவாகப் பெயரிடப்பட்டது.[5]
பன்னாட்டு கனிமவியல் சங்கம் பர்காசைட்டு கனிமத்தை Prg[6] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
புவியின் மையப் பகுதிக்கு மேலே உள்ள பாறைகளால் ஆன பகுதியான மேல்மட்ட மூடகத்தில் உள்ள முக்கிய நீர் சேமிப்பு தளம் பர்காசைட்டு ஆகும். இருப்பினும், 90 கிமீ (56 மைல்) தொலைவுக்கும் அதிகமான ஆழத்தில் இது நிலையற்றதாகிவிடும். நீர் சேமிப்பு திறனிலும் மேல் மூடகத்தின் எல்ரோசோலைட்டு எரிமலையின் திட வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க விளைவுகளை இது ஏற்படுத்துகிறது.[7]
பர்காசைட்டு ஓர் இரத்தினக் கல்லாகப் பயன்படுத்தப்படுகிறது.[8][9]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Mineralienatlas
- ↑ "Pargasite" (PDF). Handbook of Mineralogy (pdf). Mineralogical Society of America. Retrieved 2012-12-17.
- ↑ "IMA Master List". Archived from the original on 2015-01-05. Retrieved 2014-05-12.
- ↑ "Pargasite". mindat.org. Retrieved 2012-12-17.
- 1 2 "Pargasite Mineral Data". webmineral.com. Retrieved 2012-12-17. (Java plugin required)
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.
- ↑ Green, D H; Hibberson, W O; Kovacs, Istvan; Rosenthal, A (23 September 2010). "Water and its influence on the lithosphere–asthenosphere boundary". Nature 467 (7314): 448–451. doi:10.1038/nature09369. பப்மெட்:20865000. Bibcode: 2010Natur.467..448G. https://archive.org/details/sim_nature-uk_2010-09-23_467_7314/page/448. (subscription required)
- ↑ Dedeyne, Roger; Quintens, Evo (2007). Tables of gemstone identification (1st ed.). Gent, Belgium: Glirico. p. 169. ISBN 9789078768012. Retrieved 5 November 2020.
- ↑ "Amethyst Crystals and Meaning Healing Properties". nacrystal.com (in அமெரிக்க ஆங்கிலம்). 2022-07-11. Retrieved 2023-02-10.