பரோ விமான நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பரோ விமான நிலையம் (ஐஏடிஏ: PBHஐசிஏஓ: VQPR), பூட்டானில் அமைந்துள்ள ஒரே பன்னாட்டு விமான நிலையம் ஆகும். இது பரோ சூ ஆற்றங்கரையை ஒட்டிய பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. இந்நிலையம் மலைகளால் சூழப்பட்டுள்ளதாலும், சிறிய ஓடுபாதையைக் கொண்டுள்ளதாலும், இங்கு விமானங்களை தரையிறக்குவதும் பறப்பதும் கடினமானதாகும். இதனால் வெகு சில வானூர்தி ஓட்டுநர்களுக்கு மட்டும் இங்கு வானூர்தியை இயக்க அனுமதி அளிக்கப்பட்டது.

இத்தகைய சூழ்நிலையால் பகல் நேரத்தில் மட்டும் இங்கு வானூர்திகளை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது[1]. தட்பவெட்ப நிலை கண்காணிக்கப்பட்டே விமானங்கள் தரையிறக்க அனுமதிக்கப்படும்.

பரோ நகரத்தில் இருந்து சாலை வழியாக ஆறு கி.மீ பயணித்து இந்நிலையத்தை அடையலாம். திம்புவில் இருந்து 54 கி.மீ பயணித்தும் வந்து சேரலாம்.

நிலையத்தின் உள்ளறை
விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள டுரூக்யேர் ஏர்பஸ் ஏ319

வானூர்திகளும் சேரும் நிலையங்களும்[தொகு]

பயணியர் விமானங்கள்[தொகு]

விமான நிறுவனங்கள் சேரிடங்கள் 
பூட்டான் ஏர்லைன்ஸ் பாங்காக், தில்லி, காட்மண்டூ, கல்கத்தா
ட்ரூக் ஏர் பாக்டோக்ரா பாங்காக், தில்லி, தாக்கா, காட்மண்டூ, கெலெபூ, கல்கத்தா, குவாஹாட்டி, ஜகர், மும்பை, சிங்கப்பூர், அகமதாபாத், துபாய்.

சான்றுகள்[தொகு]

  1. "Paro Bhutan". Air Transport Intelligence. Reed Business Information (2011). மூல முகவரியிலிருந்து 7 ஆகஸ்ட் 2011 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 12 February 2011.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பரோ_விமான_நிலையம்&oldid=3219918" இருந்து மீள்விக்கப்பட்டது