பரோடா இல்லம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பரோடா இல்லம்
Baroda House
பொதுவான தகவல்கள்
கட்டுமான ஆரம்பம்1921
நிறைவுற்றது1936
உரிமையாளர்முன்பு: பரோடா மாநிலம்
தற்பொழுது: இந்தியன் இரயில்வே
நுட்ப விபரங்கள்
தளப்பரப்பு8 ஏக்கர்கள்
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்சர் எட்வின் லூடைன்சு


பரோடா இல்லம் (Baroda House) என்பது பரோடா மகாராசாவுக்குச் சொந்தமான தில்லியில் உள்ள முன்னாள் குடியிருப்பு ஆகும். இந்த இல்லம் பரித்கோட் இல்லத்திற்கு அடுத்துள்ள கத்தூரிபா மார்க்கில் அமைந்துள்ளது.

வரலாறு[தொகு]

புது தில்லியின் கட்டடக் கலைஞர் சர் எட்வின் லூடைன்சு இவ்வில்லத்தை வடிவமைத்தார். அவர் இவ்வீட்டை ஒரு தொடர்வண்டியின் மேல் வடிவமைத்தார். இக்கட்டடப் பணிகள் 15 ஆண்டுகள் தொடர்ந்து நடந்து 1936 ஆம் ஆண்டில் நிறைவுபெற்றது[1][2]. தற்பொழுது இவ்வில்லம் வடக்கு இரயில்வே பிரிவின் மண்டலத் தலைமையிடமாக பயன்படுத்தப்படுகிறது[3].

பரோடா இல்லத்தில் வடக்கு இரயிவேயின் சின்னம்

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பரோடா_இல்லம்&oldid=2624486" இருந்து மீள்விக்கப்பட்டது