பரேலி சந்திப்பு தொடருந்து நிலையம்
பரேலி சந்திப்பு | |||||||
|---|---|---|---|---|---|---|---|
பரேலி சந்திப்பின் பிரதான நுழைவாயில் | |||||||
| பொது தகவல்கள் | |||||||
| அமைவிடம் | பயணிகள் வழித்தடம், பரேலி, உத்தர பிரதேசம், | ||||||
| ஆள்கூறுகள் | 28°20′13″N 79°24′39″E / 28.3369682°N 79.410857°E | ||||||
| ஏற்றம் | 174 மீட்டர்கள் (571 அடி) | ||||||
| உரிமம் | இந்திய இரயில்வே | ||||||
| இயக்குபவர் | வடக்கு ரயில்வே, வடகிழக்கு ரயில்வே | ||||||
| தடங்கள் |
| ||||||
| நடைமேடை | 4 + 2 (மேலும் 4 முன்மொழியப்பட்டது) | ||||||
| இருப்புப் பாதைகள் | 15 | ||||||
| இணைப்புக்கள் | மத்திய பேருந்து நிலையம், மகிழுந்து நிலையம், தானி நிலையம் | ||||||
| கட்டமைப்பு | |||||||
| கட்டமைப்பு வகை | தரத்தில் உள்ளது | ||||||
| தரிப்பிடம் | ஆம் | ||||||
| துவிச்சக்கர வண்டி வசதிகள் | ஆம் | ||||||
| மாற்றுத்திறனாளி அணுகல் | |||||||
| மற்ற தகவல்கள் | |||||||
| நிலை | இயங்குகிறது | ||||||
| நிலையக் குறியீடு | BE | ||||||
| மண்டலம்(கள்) | வடக்கு ரயில்வே மண்டலம், வடகிழக்கு ரயில்வே மண்டலம் | ||||||
| கோட்டம்(கள்) | மொராதாபாத்து, இசாத்நகா் | ||||||
| வரலாறு | |||||||
| திறக்கப்பட்டது | 1872 | ||||||
| மின்சாரமயம் | ஆம் | ||||||
| பயணிகள் | |||||||
| பயணிகள் 2024 | 66,27,598 | ||||||
| |||||||
பரேலி சந்திப்பு தொடருந்து நிலையம் (Bareilly Junction railway station) (நிலையக் குறியீடு:- BE, BRY) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் உள்ள பரேலி நகரத்திற்கு சேவை செய்யும் ஒரு தொடருந்து நிலையமாகும். இது ஒரு முக்கியமான நிலையமாகவும், வடகிழக்கு ரயில்வே மண்டலத்தின் இசாத்நகர் ரயில்வே கோட்டம் மற்றும் வடக்கு ரயில்வே மண்டலத்தின் மொராதாபாத் ரயில்வே கோட்டம் ஆகியவற்றின் தலைமையகமாகவும் உள்ளது.[1][2][3] இது இலக்னோ–மொராதாபாத் வழித்தடத்தில் அமைந்துள்ளது. மேலும், இலக்னோ-சீதாபூர்-லக்கிம்பூர்-பிலிபிட்-பரேலி-காஸ்கஞ்ச் வழித்தடம், அவ்வழியாகச் செல்லும் பெரும்பாலான தொடருந்துகளுக்கு ஒரு நிறுத்தமாக விளங்குகிறது. பரேலி சந்திப்பு முன்பு அகல மற்றும் மீட்டர் கேஜ் ஆகிய இரண்டிற்கும் சேவை செய்தது. பரேலி சந்திப்பு அகல கேஜ் மற்றும் மீட்டர் கேஜ் ஆகிய இரண்டின் மூலமும் இலக்னோவுடன் இணைக்கப்பட்டிருந்தது. அகல கேஜ், தில்கார், ஷாஜஹான்பூர், ஹர்தோய் வழியாக இலக்னோவுடன் இணைக்கப்பட்டது. மறுபுறம், மீட்டர் கேஜ், பிலிபிட்-மைலானி-லக்கிம்பூர்-சீதாபூர் வழியாக லக்னோவுடன் இணைக்கப்பட்டது, ஆனால் இப்போது மீட்டர் கேஜ் அகல கேஜாக மாற்றப்பட்டுள்ளது..[4][5][6]
வரலாறு
[தொகு]பிரித்தானிய இந்திய அரசாங்கம் 31 மார்ச்சு 1872 அன்று இந்திய கிளை ரயில்வேயை வாங்கிய பிறகு, இலக்னோ-கான்பூர் பிரதான வழித்தடத்தை அவத் மற்றும் ரோகில்கண்ட் ரயில்வே என மறுபெயரிட்டது.தொடருந்து சேவைகள் இலக்னோவின் மேற்கு நோக்கி விரிவடையத் தொடங்கின.இலக்னோவிலிருந்து சந்திலா வரையிலும், பின்னர் இங்கிருந்து ஹர்தோய் வரையிலும் ஒரு தொடருந்து பாதை அமைக்கும் பணி 1872இல் நிறைவடைந்தது.[7] இந்தப் பாதை 1 நவம்பர் 1873 அன்று பரேலி வரை மேலும் நீட்டிக்கப்பட்டது.[7] இதற்கு முன்னர், மொராதாபாத்தை சந்தௌசியுடன் இணைக்கும் மற்றொரு தொடருந்து பாதை 1872இல் ஏற்கனவே கட்டப்பட்டிருந்தது. இதுவும் பரேலி வரை நீட்டிக்கப்பட்டது, இதன் கட்டுமானம் 22 திசம்பர் 1873 அன்று நிறைவடைந்தது.[7]
இணைப்பு
[தொகு]பரேலி தொடருந்து நிலையம் இலக்னோ, தில்லி, ஜம்மு, அமிருதசரசு, அம்பாலா, ஜலந்தர், பதான்கோட், லூதியானா, கோரக்பூர், வாரணாசி, தன்பாத், மௌ, காஜிபூர், ஹவுரா, குவஹாத்தி, பாட்னா, ஆக்ரா, அலிகார், மொராதாபாத், பதாவுன், தேராதூன், அகமதாபாது, கதாத்கோ, மும்பை, கடாத்கோ போன்ற நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.
புகைப்படத்தொகுப்பு
[தொகு]- பரேலி சந்திப்பின் முன்புறத் தோற்றம்
- பரேலி சந்திப்பு
- பரேலி சந்திப்பு நடைமேடை
- இரவில் பரேலி சந்திப்பு மகிழுந்து நிலையம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Northeastern Railway
- ↑ Rao, M.A. (1988). Indian Railways. New Delhi: National Book Trust. p. 37. ISBN 8123725892.
- ↑ "Chapter 1 – Evolution of Indian Railways-Historical Background". Ministry of Railways website. Archived from the original on 1 June 2009.
- ↑ "Bareilly Jn Trains, Bareilly Jn Railway Timetable". www.ndiantrains.org. Archived from the original on 14 May 2012.
- ↑ "Meerut City-Lucknow Rajya Rani Express". indiarailinfo. 7 February 2010. http://indiarailinfo.com/train/17092/337/336/0/13370400.
- ↑ "Mumbai LTT Bareilly Express". indiarailinfo. http://indiarailinfo.com/train/158/466/337.
- 1 2 3 "The Oudh and Rohilkhand Railway" (PDF). Management E-books6. Retrieved 30 May 2013. [தொடர்பிழந்த இணைப்பு]

