பரெட்டோ விதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வில்பிரெடோ பரெட்டோ - 80/20 விதியை கண்டுபிடித்தவர்

பரெட்டோ விதி (Pareto principle) என்பது சரியையும், தவறையும் கண்டுபிடித்து எதிர்காலத்தை ஆராயவும், ஆராய்ந்தறிந்த உண்மைகளை பயன்படுத்திக் கொள்ளும் ஒரு முறையே. இந்த விதியை முதலில் இத்தாலிய பொருளாதார நிபுணர் வில்பிரெடோ பரெட்டோ (Vilfredo Pareto) என்பவர் தன் நாட்டின் பொருளாதாரத்தை ஆராய்ந்த போது கண்டுபிடித்தார். தன் நாட்டின் 80% சொத்துக்கள் 20% மக்களிடம் இருப்பதாக 1906 இல் கணக்கிட்டார். இதனால் இவ்விதிக்கு இவருடைய பெயரே சூட்டப்பட்டது. 1930-40களில் அமெரிக்க மேலாண்மை நிபுணர் முனைவர் ஜோசப் ஜூரன் (Joseph Juran) அதே விதி அனைத்து விடயங்களுக்கும் பொருந்தும் என்று கூறினார். மேலும் எல்லாவற்றிலும் பெரும்பாலான விளைவுகளை சிறுபாலான காரணங்களே ஏற்படுத்துகின்றன என்று கூறிய அந்த விதி பின்னர் பலராலும் பரெட்டோ விதி அல்லது 80/20 விதி என்றழைக்கப்பட்டது.

இதில் எண்பது அதிகத்தையும், இருபது குறைவையும் குறிக்கும் குறியீடுகளே தவிர, துல்லியமான சதவீதத்தைக் குறிப்பதன்று. எடுத்துக்காட்டாக, ஒரு வணிகர் தனக்கு பெரும்பாலான (80%) வியாபாரத்தை அளிப்பது குறைவான எண்ணிக்கையுடைய (20%) பெரிய வாடிக்கையாளர்களே என்பதை எளிதாகக் கூற முடியும். ஒரு மனிதன் தனக்கு அதிகமான (80%) மனநிறைவை தரும் செயல்கள் ஒரு சில (20%) தான் என்பதைக் காண முடியும். தனக்கு 80% வருவாயைத் தருவது 20% முக்கிய செயல்பாடுகளே என்பதைக் கணக்கிட முடியும். இப்படி எல்லா விடயங்களிலும் இந்த விதி பெரும்பாலும் பொருந்துகிறது[1].

மேற்கோள்கள்[தொகு]

  1. http://youthful.vikatan.com/youth/ganesanarticle09062009.asp

மேலும் படிக்க[தொகு]

  • Joseph Juran ; 1954 ; « Les Universaux en Management, Organisation et Contrôle » (Universals in Management, Planning and Controlling », The Management Control 1954.)
  • Joseph Juran ; 1960 ; « Pareto, Lorenz, Cournot, Bernouli, Juran and others », Industrial Quality-Control, vol 17, n°4, Oct.
  • Joseph Juran ; 1964 ; "Managerial Breakthrough : a new concept of the Manager’s Job"
"http://ta.wikipedia.org/w/index.php?title=பரெட்டோ_விதி&oldid=1353102" இருந்து மீள்விக்கப்பட்டது