பருவூர்ப் பறந்தலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் எனப்படும் பழமலை ஊரைச் சூழ்ந்துள்ள ஊர்களில் ஒன்று பருவூர்.

இது சங்ககாலத்தில் நெல் விளையும் நிலமாகத் திகழ்ந்தது.

(இந்த ஊரில் சேர வேந்தன் பொறையனும் பாண்டியனும் ஒன்று சேர்ந்து சோழனைத் தாக்கினர்.)

சோழப் பெருவேந்தன் சார்பில் அஃதை என்ற பெண்ணின் தந்தை போரிட்டான்.

போரில் இருபெரு வேந்தரும் மாண்டனர். போர் நடந்த இடம் பருவூர்ப் பறந்தலை. இந்தப் போரில் இருபெரு வேந்தந்தர்களின் போர்யானைகளையும் அஃதை-தந்தை கைப்பற்றிக்கொண்டான்.

இந்தச் செய்தி ஊருக்கெல்லாம் தெரிந்தது போலத் தலைவன் பரத்தை ஒருத்தியோடு ஊரில் திரிந்தது ஊருக்கெல்லாம் தெரிந்துவிட்டது என்று தோழி தலைவனிடம் கூறித் தலைவனை அவன் வீட்டுக்குள் நுழையக்கூடாது என்று சொல்லித் தடுப்பதாகப் பாடல் அமைந்துள்ளது.

பாடலைப் பாடிய புலவர் மருதம் பாடிய இளங்கடுங்கோ. பாடல் அகநானூறு 96.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பருவூர்ப்_பறந்தலை&oldid=2565139" இருந்து மீள்விக்கப்பட்டது