பருவமாலை
Appearance
பருவமாலை என்பது சிற்றிலக்கிய வகைகளில் ஒன்றாகப் பாகுபடுத்திக் காட்டப்பட்டுள்ள நூல் வகை. [1]
உலா நூல்களில் ஏழு பருவத்துப் பெண்கள் உலா வரும் தலைவனைக் கண்டு காமுறுவதாகப் பாடப்பட்டிருக்கும். இந்தப் பருவமாலை நூலில் ஏழு பருவத்துப் பெண்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்னும் கல்வி புகட்டப்பட்டிருக்கும்.
பெண் பருவம் ஏழுக்கும் ஆண்டு ஏழ் துறைக் கல்வி ஏற்றமுறல் வாழ் பருவ மாலை ஆமால் என்பது நூற்பா. [2]
மேற்கோள்
[தொகு]- ↑ பிரபந்தத் திரட்டு, தமிழ் இலக்கண நூல்கள், ச. வே. சுப்பிரமணியன் தொகுப்பு, மெய்யப்பன் பதிப்பகம் வெளியீடு, 2007, பக்கம் 486
- ↑ நூற்பா 11