பருமனறி பிப்பெட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Volumetric pipettes are long tubes with a bulb in the middle.
பருமனறி பகுப்பாய்வுகளில் பயன்படும் பல்வேறு அளவுகளிலான பிப்பெட்டுககள்

பருமனறி பிப்பெட்டு (Volumetric pipette) அல்லது  குமிழ் பிப்பெட்டு (Bulb pipette) என்பது ஒரு கரைசலின் பருமனளவு அல்லது கன அளவை நான்கு குறிப்பிடத்தக்க இலக்கங்கள் துல்லியமாக அளக்க உதவும் கருவியாகும்[1] இந்த குழாயிகள் ஒரு நீண்ட குறுகிய பகுதியுடன், பெரிய குமிழியைத் தனது மையப்பகுதியில் கொண்டதாகவும், ஒரே ஒரு அளவீட்டுப் பகுதியைக் குமிழுக்கு மேல்புறமாகக் கொண்டிருக்கும். இந்தப் பிப்பெட்டுகள் ஒரே ஒரு குறிப்பிட்ட அளவினை மட்டுமே அளவிடுவதற்காக தயாரிக்கப்பட்டவையாகும். ஒவ்வொரு குறிப்பிட்ட அளவிற்கும் தனித்தனியான பிப்பெட்டுகைளப் பயன்படுத்த வேண்டும். அத்தகைய குறிப்பிட்ட கன அளவுகள் 1, 2, 5, 10, 20, 25, 50 மற்றும் 100 மிலி அளவுகள் ஆகும். பருமனறி பிப்பெட்டுகள் பகுப்பாய்வு வேதியியலில் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன.  இவை ஆதாரக் கரைசல்களிலிருந்து ஆய்வகத்திற்குத் தேவையான செறிவில் கரைசல்களைத் தயாரிக்கும் போதும், தரம் பார்த்தலுக்கானக் கரைசல்களைத் தயாரிக்கும் போதும் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன.

அமெரிக்க மூலப்பொருள் மற்றும் பரிசோதனைக் குழுமத்தின் (அ.மூ.ப.கு) (ASTM) திட்ட அளவு E969 பருமனறி பிப்பெட்டுகளின் திட்ட பொறுதி அளவு (standard tolerance) பொறுதி அளவானது பிப்பெட்டின் கன அளவைப் பொறுத்தது: 0.5-மிலி பிப்பெட்டின் பொறுதி அளவு ±0.006 மிலி ஆக உள்ளது. அதே நேரத்தில் 50-மிலி பிப்பெட்டின் பொறுதி அளவானது ±0.05 மிலி ஆக உள்ளது.(இவை A வகைப்பாட்டு பிப்பெட்டுகள் ஆகும்; B வகைப்பாட்டு பிப்பெட்டுகளின் பொறுதி அளவானது தொடர்புடைய A வகைப்பாட்டு பிப்பெட்டுகளின் பொறுதி அளவைப் போன்று இரண்டு மடங்கு வரை இருக்கும்) பருமனறி பிப்பெட்டுகளின் ஒரு சிறப்பு வாய்ந்த உதாரணமாக நுண்திரவ பிப்பெட்டு (Microfluid pipette) உள்ளது. (10µலி அளவுக்குக்கூட அளந்து கொடுக்கக்கூடிய திறனுடையது) இந்த பிப்பெட்டு தானே-கட்டுப்படுத்தி கன அளவை குறித்து வைத்துக்கொள்ளக்கூடிய ஒரு சுழலக்கூடிய திரவ முனையை திறப்பு வாயின் அருகாகக் கொண்டுள்ளது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. {{cite web}} வார்ப்புருவை பயன்படுத்துகையில் archiveurl = , archivedate = என்பவற்றைக் கட்டாயம் குறிப்பிடவேண்டும்."Volumetric Pipettes". மூல முகவரியிலிருந்து 17 December 2017 அன்று பரணிடப்பட்டது.
  2. Ainla, A.; Jansson, E. T.; Stepanyants, N.; Orwar, O.; Jesorka, A. (2010). "A Microfluidic Pipette for Single-Cell Pharmacology". Analytical Chemistry 82 (11): 4529–4536. doi:10.1021/ac100480f. பப்மெட்:20443547. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பருமனறி_பிப்பெட்டு&oldid=2749382" இருந்து மீள்விக்கப்பட்டது