பருப்பதம்
Appearance
உரைநூலால் அறியப்படும் நூல்களில் ஒன்று பருப்பதம். [1] பேராசிரியர் எழுதிய தொல்காப்பிய உரையில் இந்தப் பருப்பதம் என்னும் நூல் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொல்காப்பியம் உரைநூல் நான்கு வகைப்படும் எனப் பாகுபடுத்திக் காட்டுகிறது. உரைநூல்கள் நான்கு வகை. அவற்றுள் பாடல் இல்லாமல் பாடலில் சொல்லப்பட்ட கருத்தை மட்டும் உரைநடையாக எழுதப்பட்ட பண்டைய நூலுக்கு எடுத்துக்காட்டாக இரண்டு நூல்களைப் பேராசிரியர் தம் தொல்காபிய உரையில் குறிப்பிடுகிறார். அவை பாரதம் பருப்பதம் என்பன. இந்த நூலைப் பற்றி வேறு செய்தி தெரியவில்லை.
அடிக்குறிப்பு
[தொகு]- ↑ மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1975, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, ஒன்பதாம் நூற்றாண்டு, முதல் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. p. 313.
{{cite book}}
: Check date values in:|year=
(help)
[[பகுப்பு:9 ஆம் நூற்றாண்டுத் தமிழ் நூல்கள்]]