பருபள்ளி இராமகிருஷ்ணையா பந்துலு
| Gayaka Sarvabhauma Śri பருபள்ளி இராமகிருஷ்ணையா பந்துலு | |
|---|---|
| இயற்பெயர் | பருபள்ளி இராமகிருஷ்ணையா பந்துலு |
| பிறப்பிடம் | பருபள்ளி, குண்டூர் மாவட்டம், ஆந்திரா |
| இசை வடிவங்கள் | கருநாடக இசை |
| தொழில்(கள்) | வாய்பாட்டு கலைஞர் |
| இசைக்கருவி(கள்) | வாய்ப்பாட்டு |
| இசைத்துறையில் | 1883–1951 |
பருபள்ளி இராமகிருஷ்ணையா பந்துலு (Parupalli Ramakrishnayya Pantulu)(1883–1951) என்பவர் கருநாடக இசைப் பாடகர் ஆவார். எம். பாலமுரளிகிருஷ்ணா போன்ற மேதைகளையும், பல புகழ்பெற்ற இசைக்கலைஞர்களையும் உருவாக்கிய குருவாக இவர் நன்கு அறியப்பட்டவர்.[1][2]
ஸ்ரீ பந்துலு துறவி தியாகராஜரின் சீடர் பரம்பரையின் நேரடி வம்சாவளியைச் சேர்ந்தவர்.[3][4] குரு பரம்பராவின் வரிசையில், சுசர்லா தட்சிணமூர்த்தி சாசுதிரி, அகுமதுகுல மகர்நோன்புச்சாவடி வெங்கடசுப்பய்யர், துறவி தியாகராஜர் ஆகியோருக்குப் பிறகு, தியாகராஜரின் சீடர்களின் வரிசையில் இசைக்கலைஞர் நான்காவது இடத்தில் உள்ளார்.[4]
1882 திசம்பர் 15 அன்று மங்கம்மா, சேசாச்சலம் இணையரின் மகனாக ஆந்திரப் பிரதேசம் ஸ்ரீகாகுளம் நகரில் பிறந்தார். முறையான கல்வி மற்றும் உபநாயனம் (முறைசாரா வயது வரும் விழா) ஆகியவற்றுக்குப் பிறகு, ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள சல்லப்பள்ளி சமசுதானத்தில் கிராம சட்ட அமலாக்க அதிகாரியான தனேதார் என்ற பணியை மேற்கொண்டார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Ramnarayan, Gowri (2 July 2010). "The maestro's many moods". The Hindu. https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/The-maestros-many-moods/article16181405.ece. பார்த்த நாள்: 8 June 2019.
- ↑ "Neti and Balamurali learned Carnatic music from Parupalli Ramakrishnayya Panthulu"
- ↑ "Music for rains". The Hindu. 26 July 2012. http://www.thehindu.com/features/friday-review/music/music-for-rains/article3686423.ece. பார்த்த நாள்: 24 July 2015.
- ↑ 4.0 4.1 "Ancient History of Andhras". 26 July 2012. Retrieved 24 July 2015.