உள்ளடக்கத்துக்குச் செல்

பருத்த அலகுப் பூஞ்சிட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பருத்த அலகுப் பூஞ்சிட்டு
D. a. modestum from Kaeng Krachan, Phetchaburi, Thailand
Calls of D. a. agile
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
டைகேயிடே
பேரினம்:
டைகேயம்
இனம்:
D. agile
இருசொற் பெயரீடு
Dicaeum agile
(Tickell, 1833)
வேறு பெயர்கள்

Piprisoma squalidum

பருத்த அலகுப் பூஞ்சிட்டு ( Thick-billed flowerpecker ) என்பது பூங்கொத்திக் குழுவில் உள்ள ஒரு சிறிய பறவை இனமாகும். இது ஒரு சுறுசுப்பான பறவையாகும். இது முதன்மையாக பழங்களை உண்கின்றது. முக்கியமாக காடுகளில் மரங்களின் உச்சியில் காணப்படும். இது இந்தியாவிலிருந்து கிழக்கு இந்தோனேசியா மற்றும் திமோர் வரையிலான வெப்பமண்டல தெற்காசியா முழுவதும் பரவலாக காணப்படுகிறது. இதில் பல துணையினங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில சில சமயங்களில் தனி இனங்களாகக் கருதப்படுகின்றன.

விளக்கம்

[தொகு]

இந்த வகைப் பூஞ்சிட்டு சுமார் 10 செமீ நீளம் இருக்கும். மேலும் கருத்த தடித்த அலகும், குட்டையான வாலும் கொண்டது. இதன் மேற்பகுதி அடர் சாம்பல் பழுப்பு நிறமாகவும், மங்கிய சாம்பல் நிறமாகவும், அடிப்பகுதி வெளிர் கருஞ்சாம்பல் நிறம் தோய்ந்த வெண்மையாகத் தெளிவற்ற சிறு பழுப்புக் கோடுகளுடன் காணப்படும். பிட்டம் சற்று அதிக ஆலிவ் நிறத்திலும், அலகு கருமையாகவும், சற்றே தடித்து, கனமாகவும், விழிப்படலம் சிவப்பு நிறமாகவும் இருக்கும். களத்தில் பாலினங்களை பிரித்தறிய முடியாது.

நடத்தையும் சூழலியலும்

[தொகு]

மற்ற பூஞ்சிட்டுகளைப் போலவே இவை முதன்மையாக சிறு பழங்கள், தேன் ஆகியவற்றை உண்கின்றன, ஆனால் சில நேரங்களில் பூச்சிகளையும் உண்கின்றன. இதில் பல துணையினங்கள் அடர்ந்த தாழ்நிலக் காடுகளில் காணப்படுகின்றன, அவை பொதுவாக பயிரிடப்பட்ட பகுதிகளில் அல்லது திறந்த காடுகளில் காணப்படுகின்றன. [2]

திக்கெல்லின் பூசிட்டைப் போல, அப்படியே பழங்களை உண்பதில்லை. பழங்களை அப்படியே அலகால் நசுக்கிப் பழங்களின் சதைப்பற்றை மட்டுமே உண்ணும். பழங்களின் விதைகளைக் கிளைகளில் துடைத்துவிடும். இது திக்கெல்லின் பூஞ்சிட்டைப் போல எச்சத்தால் புல்லுருவிகளை பிற மரங்களுக்குப் பரப்புவதில்லை. இலங்கையில், இவை வெளிர்-கொத்திப் பூங்கொத்தியை விட மேலே அதிக உயரத்தில் உணவு தேடுகின்றன.

இவை காய்ந்த இலைகளில் சிலந்தி வலை நூல் [3] அல்லது நுண்ணிய தாவர இழைகளைக் கொண்டு தொங்கு நீள் வடிவக் கூட்டினை அமைக்கின்றன. கூடானது உருமறைப்பு தன்மையோடு காணப்படும். மேலும் இது மெல்லிய கிடைமட்ட கிளையில் இருந்து 3 முதல் 15 மீட்டர் உயரத்தில் அமைக்கபடும். தென்னிந்தியாவில் இனப்பெருக்க காலம் திசம்பர் முதல் மார்ச் வரை ஆகும். [4] ஆண் பெண் என இருபறவைகளும் கூடு கட்டுவதில் ஈடுபடுகின்றன. பொதுவாக மூன்று அல்லது நான்கு முட்டைகளை இடுகின்றன [5] அடைகாக்கும் காலம் சுமார் 13 நாட்கள் ஆகும். [6]

காட்சியகம்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. BirdLife International (2017). "Dicaeum agile". IUCN Red List of Threatened Species 2017: e.T105991992A111181409. doi:10.2305/IUCN.UK.2017-1.RLTS.T105991992A111181409.en. https://www.iucnredlist.org/species/105991992/111181409. பார்த்த நாள்: 11 November 2021. 
  2. Salomonsen, Finn (1960). "Notes on Flowerpeckers (Aves, Dicaeidae) 2. The Primitive Species of the Genus Dicaeum". American Museum Novitates (1991). 
  3. Betham, RM (1897). "Nidification of the Thick-billed Flowerpecker Piprisoma agile". J. Bombay Nat. Hist. Soc. 11 (1): 159–160. https://biodiversitylibrary.org/page/30156862. 
  4. Santharam, V (1996). "Nests of Thickbilled Flowerpecker". J. Bombay Nat. Hist. Soc. 93 (2): 296. https://biodiversitylibrary.org/page/48603554. 
  5. {{cite book}}: Empty citation (help)
  6. Vishwas Katdare; Vishwas Joshi; Sachin Palkar (2004). "Incubation period of Thick-billed Flowerpecker Dicaeum agile". Newsletter for Ornithologists 1 (5): 75. 

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Dicaeum agile
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன: