பருத்தி பயிரில் வீரிய ஒட்டு இரக விதை உற்பத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பயிரிகளில் வீரிய ஒட்டு இரக விதை உற்பத்தி செய்யும்போது ஒவ்வொரு முறையும் ஆண் இரகத்தையும், பெண் இரகத்தையும் தனித்தனியாக சாகுபடி செய்து புதிதாக அயல் மகரந்தசேர்க்கையை செய்து விதைகளை உற்பத்தி செய்ய வேண்டும். பருத்தி பயிரில் டி.சி.எச்.பி.218 என்ற வீரிய ஒட்டு இரக விதை உற்பத்தி செய்ய கீழ்கண்ட இரகங்கள் மற்றும் சாகுபடி முறைகள் கடைப்பிடிக்கப்பட்டது.

       ஆண் இரகம்       பெண் இரகம்

பெயர் டி.சி.பி.209 டி.சி.எச்.1218 விதையளவு 0.5 கிலோ/எக்டர் 21 கிலோ/எக்டர் நில அளவு 0.5 ஏக்கர் 2 ஏக்கர் [ 1:4 ] இடைவெளி 90*60 செ.மீ 120*60 செ.மீ

முன்பட்டத்தில் பருத்தி சாகுபடி செய்யாத நிலத்தை தேர்வு செய்ய வேண்டும். குறைந்தது 30மீ பயிர் விலகு தூரம் மற்ற பயிர்களுடனும், ஆண், பெண் இரகங்களுக்கிடையே 5மீ இடைவெளியும் இருக்க வேண்டும். உரமாக 80:50:50 கிலோ/எக்டர் தழை, மணி, சாம்பல் சத்து தேவை. இதில் 50:50:50 கிலோவை அடியுரமாகவும், மீதியுள்ள தழைச்சத்தை இரண்டாக பிரித்து 60,90 வது நாட்களில் மேலுரமாகவும் இடவேண்டும். இலைவழி உரமாக 2 சத டைஅம்மோனியம் பாஸ்பேட் உரத்தை விதைத்த 70,80,90 மற்றும் 100வது நாட்களில் தெளித்து விதைப்பிடிப்பை அதிகரிக்கச் செய்யலாம். ஆண் இரக செடிகளுக்கு 75 மற்றும் 90 வது நாட்களில் 100 பி.பி.எம். போரிக் அமிலம் தெளித்து மகரந்தத்தூளின் உற்பத்தி மற்றும் வாழ்நாளை அதிகரிக்கலாம். வளர்ச்சியின் போது வேறுபட்ட உயரம், இலைகள்,பூக்கள் கொண்ட செடிகளை நீக்கிவிட வேண்டும். இதற்கு "கலவன் நீக்குதல்" என்று பெயர்.

# மகரந்தச்சேர்க்கை செய்யும் முறை[தொகு]

        பயிர்களில் பெண் இரகத்தில் பூக்கள் பூப்பதற்கு ஒரு நாள் முன்பு பூ மொட்டுக்களில் உள்ள அல்லி வட்டம், புல்லி வட்டம் மற்றும் சூல்முடிக்கும் சேதம் ஏற்படாதவாறு மாலைவேளைகளில் நீக்க வேண்டும். பின்னர் சிவப்பு நிற காகிதப்பை கொண்டு மூடி விட வேண்டும்.

அடுத்த நாள் காலை 9 மணிமுதல் 12 மணிக்குள் ஆண் இரகச் செடிகளின் பூக்களிலிருந்து மகரந்தத்தூளை சேகரித்து மகரந்தம் நீக்கப்பட்ட பெண் பூக்களின் சூல் முடியின் மீது தடவி பிறகு அதனை வெள்ளை நிற காகிதப்பை கொண்டு மூடிவிட வேண்டும். இவ்வாறு அயல் மகரந்தச்சேர்க்கை செய்யப்பட்ட பெண் இரகத்தின் தாவரத்திலிருந்து கிடைக்கும் விதைகளே " வீரிய ஒட்டு இரக விதைகள் " ஆகும்.

ஆதாரம் : தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம்

     வேளாண் செயல்முறைகள் பக்க எண் : 162 - 163