பரு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பரு
pimple
ஒத்தசொற்கள்Zit, spot
சரும நிலையை எட்டிய பரு (நடுவில்)
சிறப்புதோல் மருத்துவம்

பரு (pimple) என்பது தோலிற்கு கீழே காணப்படும் எண்ணெய்ச் சுரப்பிகளில், சீபம் (Sebum) எனும் எண்ணெய் அதிகப்படியாக சுரப்பதாலும், இறந்த செல்கள் தோலின் துளைகளில் சிக்கிக் கொள்வதாலும் ஏற்படும் கொப்புளம் போன்ற சீழ்கட்டி ஆகும்.[1] பருக்களுக்கு முகப்பரு மருந்துகள், நுண்ணுயிர் எதிர்ப்பிகள், மருத்துவரால் பரிந்துரைக்கப்படும் மருந்துகளினால் சிகிச்சை அளிக்கலாம்.

காரணங்கள்[தொகு]

  • தோலின் கீழ் காணப்படும் எண்ணெய் சுரப்பிகளில் (செபாசஸ் சுரப்பிகள்) சீபம் எனப்படும் எண்ணெய் அதிகப்படியாக சுரப்பதனால் இறந்த சரும செல்கள், மாசுக்கள் என்பன எண்ணெய் சுரப்பிகளில் அடைத்துக் கொள்ளும். பருவ வயதில் தோல் தடிமனாவதால் இவை பொதுவாக தோன்றக் கூடும். [2]தொடர்ந்து எண்ணெய் சுரப்பிகள் சீபத்தை சுரப்பதால் தோலுக்கு அடியில் இருக்கும் சீபம் வெளிவர முடியாமல் தோலுக்குள் தங்கி விடும். ஸ்டெபிலோகோகஸ் ஆரியஸ், குடிபாக்டிரியம் ஆக்னஸ் போன்ற பாக்டிரிய இனங்கள் அடைப்புகளில் வளரத் தொடங்கும். இவை வீக்கத்தையும், தொற்றையும் உண்டாக்கும்.
  • பருக்கள் ஏற்படுவதற்கு மரபு வழி, மன அழுத்தம், ஓமோன்களில் ஏற்படும் மாற்றம், முடிக்கும் தோலுக்குமான பராமரிப்பு பொருட்களாலும், மருந்துகளாலும் உண்டாகும் பக்க விளைவுகள், கண்டறியப்படாத மருத்துவ நிலைகள் என்பனவும் காரணங்களாக இருக்கலாம். "எண்ணெய் இல்லாதவை" அல்லது "துளைகளை அடைக்காது" என்று குறிப்பிடப்படாத தோல் பராமரிப்பு பொருட்கள் எரிச்சலையோ முகப் பருவையோ ஏற்படுத்த அதிக வாய்ப்புள்ளது.[3]
  • பொடுகுப் பிரச்னையால் பரு வந்திருக்கிறதா என்று பார்த்து முதலில் தலையில் பொடுகை சரிப்படுத்திக் கொண்டால்தான் முகத்தின் பருக்கள் குறையும்!
  • பொடுகு இருப்பதாகத் தெரிந்தால் தலை வைத்துப் படுக்கும் தலையணை மூலம் கூட பரு வரலாம். அல்லது வீட்டில் மற்றவருக்கும் வரலாம். எனவே படுக்கும்போது தலையணை மேல் ஒரு டவல் போட்டு தினம் அதை எடுத்து கழுவினாலே பருவை வரவிடாமல் தடுக்கலாம்.
முகம், மார்பு பகுதிகளில் காணப்படும் பருக்கள்
மூக்கில் தோன்றியுள்ள கறுப்பு குருணைகள்
மூக்கு பகுதியில் தோன்றியுள்ள கறுப்பு குருணைகள்

சிகிச்சைகள்[தொகு]

சில கடுமையான பருக்கள் குறிப்பிடத்தக்க வீக்கத்திற்கு வழிவகுக்கும். இவை முகத்தில் மட்டுமல்லாமல் முதுகிலும், மார்பிலும் தோன்றக்கூடும். 

பருக்களுக்கு சிகிச்சையளிக்க பொதுவாக பாக்டிரியா எதிர்ப்பு மருந்துகளான பென்சாயில் பெரோக்சைட், சாலிசிலிக் அமிலம், அடாபலீன், ட்ரைக்ளசோன் என்பன பயன்படுத்தப்படுகின்றன. இவை முகப் பருவிற்கு சிகிச்சை அளிக்க பயன்படும் பல கீரீம்களிலும் ஜெல்களிலும் காணப்படுகின்றன. இந்த மேற்பூச்சு மருந்துகள் சருமத்தை தூண்டி பாக்டிரியாக்களை விரைவில் அகற்ற உதவுகின்றன. இவற்றின் பயன்பாட்டிற்கு முன் முகத்தை வெதுவெதுப்பான நீரிலோ, மேற்பூச்சு சுத்தப்படுத்தியாலோ கழுவி பின்னர் உலர வைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட தோல் பகுதியை சுத்தமாக வைத்திருப்பதும், மேற்பூச்சு மருந்துகளின் வழக்கமான பயன்பாடும் பருக்களை முற்றிலும் தடுக்க முடியாவிட்டாலும் கட்டுக்குள் வைக்கப் போதுமானது. மேற்பூச்சு மருந்துகளில் ஆபத்து குறைந்தது பென்சோல் பெராக்சைட் ஆகும். இது பயன்பாட்டின் போது இலேசான ஒவ்வாமை, தோல் எரிச்சலை ஏற்படுத்தக் கூடியது. [4]அண்மையில் நிகோடினமைடு (வைட்டமின் பி 3 ), கிளிண்டமைசின் போன்ற நுண்ணுயிர் எதிர்ப்பிகளைக் காட்டிலும் பருக்கள் சிகிச்சையில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.[5] பருக்களை கட்டுப்படுத்த பற்பசையை பயன்படுத்துவதும் உண்டு. பற்பசையில் காணப்படும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் பருக்களை குறைப்பதில் தொடர்புடையன.[6] கடுமையான பருக்களுக்கு மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் மருந்துகள் காணப்படுகின்றன.

பருக்கள் தோன்றும் போது பருக்களில் இருந்து வெள்ளை நிறக் குருணைகளை (white heads) கிள்ளி வெளியேற்றும் போது உருவாகும் காயத்தில் பக்டிரியாக்களின் தொற்று வடுக்கள் ஏற்படலாம் என்றும் இதனால் வடுக்கள் தோன்றக்கூடும் என்றும் மருத்துவர்களும் அழகியல் வல்லுனர்களும் கருதுகின்றனர். [7][8][9]

பருக்களின் மேல் பூசப்படுகிற களிம்புகளும் ஆன்டிபயாடிக் மாத்திரைகளும் ஆரம்பநிலைப் பருக்களைக் குணப்படுத்திவிடும். பருக்கள் மீண்டும் வராமல் தடுக்க, மருத்துவர் சொல்லும் கால அளவுக்குத் தொடர்ச்சியாகச் சிகிச்சை பெற வேண்டியது முக்கியம். சீழ்க்கட்டி/உறைகட்டி நிலையில் பருக்கள் இருந்தால், கரும்புள்ளி அல்லது குழிப்பள்ளம் விழுந்து தழும்பாகி முகத்தின் அழகைக் கெடுத்துவிடும். பருக்களைப் பொறுத்தவரை இளம் வயதினரை ரொம்பவே கவலைப்பட வைப்பது, இந்தத் தழும்புகள்தாம்.

இவற்றை நிரந்தரமாகப் போக்க கெமிக்கல் பீல் (Chemical Peel), டெர்மாப்ரேசன் (Dermabrasion), கொலாஜன் சிகிச்சை, லேசர் சிகிச்சை, சிலிக்கான் சிகிச்சை என்று நிறைய வழிமுறைகள் உள்ளன. சருமநல மருத்துவரின் ஆலோசனைப்படி தழும்புகளை நீக்கி, முகப்பொலிவை மீட்டுவிடலாம்.[10][11]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Pimple". Archived from the original on 2009-06-28.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  2. Anderson, Laurence. 2006. Looking Good, the Australian guide to skin care, cosmetic medicine and cosmetic surgery. AMPCo. Sydney. ISBN 0-85557-044-X.
  3. "Adult acne".
  4. "Understanding Benzoyl Peroxide". web.archive.org. 2012-02-23. Archived from the original on 2012-02-23. பார்க்கப்பட்ட நாள் 2019-10-15.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  5. Siegle RJ, Fekety R, Sarbone PD, Finch RN, Deery HG, Voorhees JJ (August 1986). "Effects of topical clindamycin on intestinal microflora in patients with acne". Journal of the American Academy of Dermatology. 15 (2 Pt 1): 180–5. doi:10.1016/S0190-9622(86)70153-9. PMID 2943760.
  6. Dharmik, Preeti; Gomashe, Ashok (June 2014). Anti-Acne Activity of Toothpaste An Emerging Pimple Treatment. 1. International Journal of Chemical and Pharmaceutical Analysis. pp. 149–53. doi:10.21276/ijcpa.
  7. Levitt, Shelley. "What to Know Before You Pop a Pimple". WebMD (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-15.
  8. Weiss, Suzannah (2018-12-07). "The 10 Most Satisfying Pimple Popping Videos Of 2018". Men's Health (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-15.
  9. "Should I Pop My Pimple? (for Teens) - KidsHealth". kidshealth.org. பார்க்கப்பட்ட நாள் 2019-10-15.
  10. Tamil, Hindu (2019-11-07). "நலம், நலமறிய ஆவல் 27: பரு 'முகம்' காட்டாதிருக்க..." Hindu Tamil Thisai (in Tamil). பார்க்கப்பட்ட நாள் 2019-11-07.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  11. "Suc Khoe Chuan Muc". SkinKraft (in ஆங்கிலம்). 2019-11-07. பார்க்கப்பட்ட நாள் 2021-18-08. {{cite web}}: |first= missing |last= (help); Check date values in: |access-date= (help)
வகைப்பாடு
வெளி இணைப்புகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரு&oldid=3895266" இலிருந்து மீள்விக்கப்பட்டது