உள்ளடக்கத்துக்குச் செல்

பரீதா சாகீத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2016 ஆம் ஆண்டு நடந்த வளர்ச்சியில் பெண்கள் உரிமைகளுக்கான மன்றத்தில் மாநாட்டில் சாகீதுரையாடுகிறார்.

பரீதா சாகீத் (Farida Shaheed) பாக்கித்தானைச் சேர்ந்த சமூகவியலாளரும் பெண்ணிய உரிமை ஆர்வலரும் ஆவார். 2012 ஆம் ஆண்டில், இவர் கலாச்சார உரிமைகள் துறையில் ஐக்கிய நாடுகள் அவைவின் சிறப்பு அறிக்கையாளராக நியமிக்கப்பட்டார். அதே நேரத்தில் 2022 முதல் கல்வித் துறையிலும் பணிபுரிந்தார்.[1] பாக்கித்தானில் உள்ள ஷிர்கத் கா என்ற மகளிர் வள மையத்தின் தலைவராக உள்ளார். மேலும் பாக்கித்தானிலும் உலகெங்கிலும் பாலினம் மற்றும் வர்க்க பகுப்பாய்வு குறித்த இவரது விரிவான பணிக்காக அறியப்படுகிறார்.[2][3]

பணிகள்

[தொகு]

கிராமப்புற வளர்ச்சி, தொழிலாளர், கலாச்சாரம், மதம் மற்றும் அரசு போன்ற பிரச்சினைகளில் பாலினம் மற்றும் பெண்ணிய கண்ணோட்டத்தைப் பயன்படுத்தி பரீதா 25 ஆண்டுகளுக்கும் மேலான ஆராய்ச்சி மற்றும் ஆர்வலர் அனுபவத்தைக் கொண்டுள்ளார்.[4] பெண்கள், வறியவர்கள், மத மற்றும் இன சிறுபான்மையினர் உள்ளிட்ட ஓரங்கட்டப்பட்ட சமூகங்களுக்கான கொள்கைகள் மற்றும் திட்டங்கள் மூலம் கலாச்சார உரிமைகளை மேம்படுத்துவதிலும் பாதுகாப்பதிலும் குறிப்பாக கவனம் செலுத்தியுள்ளார். பரீதா சாகீத், ஐக்கிய நாடுகள் அவை மற்றும் பாக்கித்தான் உட்பட சர்வதேச, பிராந்திய மற்றும் தேசிய பேச்சுவார்த்தைகளில் நிபுணராகவும் உள்ளார்.[5]

சாகீத் வாகித் பாக்கித்தானின் பெண்கள் உரிமைகள் வலையமைப்பான மகளிர் நடவடிக்கை மன்றத்தின் நிறுவன உறுப்பினராகவும், முஸ்லிம் சட்டங்களின் கீழ் வாழும் பெண்கள் என்ற நாடுகடந்த பெண்ணிய வலையமைப்பின் உறுப்பினராகவும் உள்ளார்.[6] கரீமா பென்னவுன் இந்தப் பொறுப்பிலிருந்த போது, 2009 முதல் 2015 வரை கலாச்சார உரிமைகள் துறையில் ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளராக பணியாற்றினார்.[7] ஆகஸ்ட் 2022 இல் சாகீத் கல்வி உரிமைக்கான சிறப்பு அறிக்கையாளராக நியமிக்கப்பட்டார்.[8]

விருதுகளும் அங்கீகாரமும்

[தொகு]

நவம்பர் 12,2014 அன்று, பாலினம், கலாச்சாரம், மதம் மற்றும் அரசு குறித்த தனது பணிக்காக பரீதா சாகீத்துக்கு, மெக்சிகோ நகரப் பண்பாட்டு மையத்தின் சர்வதேச விருது வழங்கப்பட்டது.[9][10] இவர் இதற்கு முன்பு பல விருதுகளைப் பெற்றிருந்தார். அவற்றில் இவர் இணைந்து எழுதிய "டூ ஸ்டெப்ஸ் ஃபார்வர்டு, ஒன் ஸ்டெப் பேக்" என்ற புத்தகத்திற்காகப் பெற்ற ‘பாக்கித்தான் பிரதமர் விருதும்’ அடங்கும்.[9]

தேர்ந்தெடுக்கப்பட்ட வெளியீடுகள்

[தொகு]

2010 ஆம் ஆண்டில்,மூன்றாம் உலக காலாண்டு இதழின் சிறப்புப் பதிப்பிற்காக வெளியிடப்பட்ட “போட்டியிடும் அடையாளங்கள்: பாலின அரசியல், பாக்கித்தானில் பாலின மதம்” என்ற கட்டுரையை எழுதினார்.[4] 1987 ஆம் ஆண்டில், இவர் கவார் மும்தாஜுடன் சேர்ந்து வுமன் ஆப் பாக்கித்தான்: டு ஸ்டெப் பார்வார்டு, ஒ ஸ்டெப் பேக்? என்ற தலைப்பில் ஒரு நூலை எழுதினார். இந்த நூல் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து 1980 களின் நடுப்பகுதி வரை தெற்காசியாவில் முஸ்லிம் பெண்கள் இயக்கங்களை காலவரிசைப்படுத்துதியது..

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "Ms. Farida Shaheed, Special Rapporteur in the field of cultural rights". Office of the High Commissioner for Human Rights (OHCHR) www.ohchr.org. Retrieved 27 November 2014.
  2. ↑ Shah, Bina (20 August 2014). "The Fate of Feminism in Pakistan". The New York Times www.nytimes.com. Retrieved 27 November 2014.
  3. ↑ "An Interview with Farida Shaheed". Association of Women's Rights in Development (AWID) www.awid.org. 12 February 2008. Archived from the original on 5 December 2014. Retrieved 27 November 2014.
  4. 1 2 "Farida Shaheed Former Collaborating Researcher". United Nations Research Institute for Social Development (UNRISD) www.unrisd.org. Retrieved 27 November 2014.
  5. ↑ "Ms. Farida Shaheed, Special Rapporteur in the field of cultural rights". Office of the High Commissioner for Human Rights (OHCHR) www.ohchr.org. Retrieved 27 November 2014."Ms. Farida Shaheed, Special Rapporteur in the field of cultural rights". Office of the High Commissioner for Human Rights (OHCHR) www.ohchr.org. Retrieved 27 November 2014.
  6. ↑ "Farida Shaheed". Women's Learning Partnership www.learningpartnership.org. Archived from the original on 26 January 2015. Retrieved 28 November 2014.
  7. ↑ "Alexandra Xanthaki". Office of the High Commissioner for Human Rights. Retrieved 2023-12-11.
  8. ↑ "Farida Shaheed". Office of the High Commissioner for Human Rights. Retrieved 2023-12-11.
  9. 1 2 "Recognition: Pakistani activist receives prestigious award". http://tribune.com.pk/story/789027/recognition-pakistani-activist-receives-prestigious-award/.
  10. ↑ "Announcement: Winners of the International Award UCLG - MEXICO City - Culture 21". The Global Network of Cities, Local and Regional Governments (UCLG) www.uclg.org. Retrieved 27 November 2014.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரீதா_சாகீத்&oldid=4389717" இலிருந்து மீள்விக்கப்பட்டது