பரிமார்சன் நேகி
| பரிமார்சன் நேகி Parimarjan Negi | |
|---|---|
| நாடு | இந்தியா |
| பிறப்பு | 9 பெப்ரவரி 1993 புது தில்லி, இந்தியா |
| பட்டம் | கிராண்டுமாசுட்டர் (2006) |
| பிடே தரவுகோள் | 2639 (திசம்பர் 2021) |
| உச்சத் தரவுகோள் | 2671 (அக்டோபர் 2013) |
| உச்சத் தரவரிசை | No. 73 (சூன் 2015) |
பரிமார்சன் நேகி (Parimarjan Negi) இந்தியாவைச் சேர்ந்த ஒரு சதுரங்க வீரராவார். 1993ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 09ஆம் தேதியன்று இவர் பிறந்தார். 13 ஆண்டுகள், 4 மாதங்கள் மற்றும் 20 நாட்களில் பரிமார்சன் நேகி கிராண்டுமாசுட்டர் பட்டத்தை அடைந்தார். அந்த நேரத்தில் வரலாற்றில் இரண்டாவது இளைய கிராண்டுமாசுட்டராக இவரைப் புகழ்பெறச் செய்தது. 2025ஆம் ஆண்டு சூன் மாத நிலவரப்படி, இவர் இந்த சாதனையை எட்டிய ஒன்பதாவது இளைய வீரர் என்ற சிறப்புக்கு உரியவராகத் திகழ்கிறார்.
நேகி ஓர் இந்திய மற்றும் ஆசிய வெற்றியாளர் ஆவார். 2014ஆம் ஆண்டு நார்வேயின் திராம்சோவில் நடந்த சதுரங்க ஒலிம்பியாடு போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணிக்காக அவர் முன்னணி பலகையில் விளையாடினார்.
2010 ஆம் ஆண்டு இந்திய அரசு இவருக்கு அருச்சுனா விருது வழங்கி சிறப்பித்தது.[1]
சதுரங்க வாழ்க்கை
[தொகு]பரிமார்சன் நேகி 2002 ஆம் ஆண்டு ஈரான் நாட்டின் தெகுரானில் நடந்த ஆசிய இளைஞர் சதுரங்க வெற்றியாளர் போட்டியில் 10 வயதுக்குட்பட்டவர்கள் பிரிவில் பட்டம் வென்றார்.[2][3] 2005/06 ஆம் ஆண்டில் ஏசுடிங்சு பன்னாட்டு சதுரங்கப் போட்டியில் தனது முதல் கிராண்டுமாசுட்டர் விதிமுறையை இவர் அடைந்தார்.[4] தில்லியில் நடந்த 4ஆவது பார்சுவநாத் பன்னாட்டு திறந்தநிலை சதுரங்கப் போட்டியில் தனது இரண்டாவது கிராண்டுமாசுட்டர் தரநிலையைப் பெற்றார்.[5] 2006ஆம் ஆண்டு சூலை மாதம் 1ஆம் தேதியன்று செல்யாபின்சுக் போட்டியில் உருசிய கிராண்டுமாசுட்டர் உருசுலான் செர்பகோவுடன் சமநிலை செய்ததன் மூலம் பரிமார்சன் நேகி தனது மூன்றாவது மற்றும் இறுதி கிராண்டுமாசுட்டர் தரநிலையைப் பெற்றார். உருசியாவின் சட்காவில் நடந்த பிராந்திய மீ இறுதி வெற்றியாளர் போட்டியில் ஒன்பது சுற்றுகளில் விளையாடி ஆறு புள்ளிகளுடன் முடித்தார். இதன் மூலம் நேகி இந்தியாவின் இளைய சதுரங்க கிராண்டுமாசுட்டர் ஆனார். பெண்டலா அரிகிருட்டிணாவின் சாதனையை முறியடித்தார். மேலும் உலகின் இரண்டாவது இளைய சதுரங்க கிராண்டுமாசுட்டராகவும் ஆனார்.[6]
2008ஆம் ஆண்டு சூன் மாதத்தில் நடந்த வலுவான பிலடெல்பியா பன்னாட்டு திறந்தநிலை சதுரங்கப் போட்டியை நேகி 7/9 என்ற புள்ளிகள் கணக்கில் வென்றார்.[7] 2008 ஆகத்து மாதத்தில் காசியான்டெப்பில் நடந்த உலக இளையோர் சதுரங்கப் போட்டியில் அபிச்சித் குப்தாவுக்குப் பிறகு இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.[8] 2009ஆம் ஆண்டு கோபனேகனில் நடந்த பாலிடிகென் கோப்பையை 8.5/10 என்ற கணக்கில் போரிசு அவ்ருக்குடனான ஆட்டத்தில் சமநிலைமுறிவு ஆட்டத்தில் வென்றார். கோலாலம்பூரில் நடந்த 6ஆவது டத்தோ ஆர்தர் டான் மலேசியா திறந்தநிலை போட்டியையும் இவர் வென்றார்.[9] and the 6th IGB Dato' Arthur Tan Malaysia Open in Kuala Lumpur.[10]
பரிமார்சன் நேகி 2010ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 22 ஆம் தேதியன்று புது தில்லியில் நடந்த 48ஆவது தேசிய பிரீமியர் சதுரங்க வெற்றியாளர் போட்டியை வென்றார்.[11]
2012 ஆம் ஆண்டு ஓசிமின் நகரில் நடைபெற்ற 11ஆவது ஆசிய சதுரங்க வெற்றியாளர் போட்டியை நேகி வென்றார். 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் நடந்த கேப்பெல்-லா-கிராண்டே திறந்தநிலை போட்டியில் முதலிடத்தை பகிர்ந்துகொண்டார்.[12] 2013 ஆம் ஆண்டில், இரண்டாவது முறையாக பாலிடிகன் கோப்பையையும் வென்றார்.[13]
2017 ஆம் ஆண்டு வாக்கில் இவர் சதுரங்க விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.[14]
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]பரிமார்சன் நேகி புது தில்லியில் உள்ள அமிட்டி பன்னாட்டுப் பள்ளியில் பயின்றார். பின்னர் 2018 ஆம் ஆண்டில் இசுடான்போர்ட் பல்கலைக்கழகத்தில் கணிதப் பிரிவில் பட்டம் பெற்றார். 2021 சூலை மாத நிலவரப்படி, இவர் மாசசூசெட்சு தொழில்நுட்ப நிறுவனத்தில் கணினி அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆய்வகத்தில் முனைவர் பட்டம் பெற்றிருந்தார்.
நூல்கள்
[தொகு]- Parimarjan Negi (2014). 1.e4 vs The French, Caro-Kann and Philidor. Quality Chess. ISBN 978-1906552060.
- Parimarjan Negi (2015). 1.e4 vs The Sicilian I. Quality Chess. ISBN 978-1-906552-39-8.
- Parimarjan Negi (2015). 1.e4 vs The Sicilian II. Quality Chess. ISBN 978-1-907982-57-6.
- Parimarjan Negi (2016). 1.e4 vs The Sicilian III. Quality Chess. ISBN 978-1-78483-023-6.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Upama Sinha (22 October 2010). "Chess mate". தி இந்து. http://www.thehindu.com/sport/other-sports/chess-mate/article842918.ece.
- ↑ "India bags four golds". தி இந்து. 2002-04-04. Archived from the original on 2016-11-01. Retrieved 6 May 2016.
- ↑ Asian Youth Under 10-12-14-16 பரணிடப்பட்டது 1 திசம்பர் 2017 at the வந்தவழி இயந்திரம். FIDE.
- ↑ "Parimarjan Negi – the Hero of Hastings". ChessBase. 2006-01-09. Archived from the original on 17 March 2016. Retrieved 5 February 2016.
- ↑ Vishal Sareen (2006-02-01). "Twelve-year-old Negi gets his second GM norm". ChessBase. Retrieved 5 February 2016.
- ↑ Vijay Kumar (2006-07-05). "Parimarjan Negi, India's youngest ever grandmaster". ChessBase. Archived from the original on 2 June 2016. Retrieved 5 February 2016.
- ↑ "Sports Briefs: Negi wins title". The Telegraph. 2 July 2008 இம் மூலத்தில் இருந்து 19 September 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120919011613/http://www.telegraphindia.com/1080702/jsp/sports/story_9492719.jsp.
- ↑ "Meet Abhijeet Gupta – meet the Junior World Champion". ChessBase. 2008-08-21. Archived from the original on 3 February 2016. Retrieved 8 November 2015.
- ↑ "Parimarjan Negi wins Politiken Cup". தி இந்து. 27 July 2009. Archived from the original on 30 July 2009. Retrieved 2009-07-27.
- ↑ Mihajlova, Diana (2009-09-11). "Parimarjan in Paris – portrait of a young super-talent". ChessBase. Retrieved 1 November 2015.
- ↑ "Parimarjan Negi Wins India Premier Championship". Chessdom. 2010-12-22. Archived from the original on 22 January 2021. Retrieved 8 January 2016.
- ↑ "Parimarjan Negi". தி இந்து. Archived from the original on 2 February 2014. Retrieved 2012-05-15.
- ↑ Rao, Rakesh (4 August 2013). "Parimarjan Negi" இம் மூலத்தில் இருந்து 6 August 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130806072935/http://www.thehindu.com/sport/other-sports/parimarjan-negi-wins-regains-politiken-cup-in-style/article4988892.ece.
- ↑ Why did Parimarjan Negi quit chess? பரணிடப்பட்டது 15 சூலை 2021 at the வந்தவழி இயந்திரம், Chessbase India, 11/08/2017
வெளி இணைப்புகள்
[தொகு]- பரிமார்சன் நேகி rating card at பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு
- தி இந்து : Sport / Chess : Negi is world's youngest GM at the வந்தவழி இயந்திரம் (பரணிடப்பட்டது 2007-10-01)
- Chessdom - Parimarjan Negi wins Delhi State blitz பரணிடப்பட்டது 26 மார்ச் 2015 at the வந்தவழி இயந்திரம்
