பரித் அப்பாசோவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பரித் அப்பாசோவ்
Farid Abbasov
நாடு அசர்பைஜான்
பிறப்புசனவரி 31, 1979 (1979-01-31) (அகவை 45)
பட்டம்கிராண்டு மாசுட்டர்
பிடே தரவுகோள்2527 (திசம்பர் 2021)
உச்சத் தரவுகோள்2578 (அக்டோபர் 2008)

பரித் அப்பாசோவ் (Farid Abbasov) அசர்பைசான் நாட்டைச் சேர்ந்த சதுரங்க கிராண்டு மாசுட்டர் ஆவார். இவர் 1979 ஆம் ஆண்டு சனவரி 31 ஆம் நாள் பிறந்தார் [1]. பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு இவருக்கு வழங்கியுள்ள பிடே தரமதிப்பு புள்ளிகள் 2558 ஆகும். உலக சதுரங்கத் தரவரிசையில் இவர் 378 ஆவது இட்த்தையும் இவரது நாட்டில் 8 ஆவது இடத்தையும் பிடித்துள்ளார். ஐரோப்பிய இளையோர் சதுரங்க சாம்பியன் பட்டப் போட்டியில் 1997 ஆம் ஆண்டு பரித் இரண்டாவது இட்த்தைப் பிடித்தார். 2001 ஆம் ஆண்டு இவருக்கு அனைத்துலக மாசுட்டர் பட்டம் வழங்கப்பட்டது.

சாதனைகள்[தொகு]

  1. 2004 ஆம் ஆண்டு உக்ரைன் நாட்டின் அலுசுட்டா நகரப் போட்டியில் முதலிடம்.,
  2. இதே ஆண்டில் உருசியாவின் கிரேய்வசுக் நகரப் போட்டியில் முதலிடம்,
  3. 2006 ஆம் ஆண்டு உருசியாவின் டுலா நகரப் போட்டியில் இரண்டாமிடம்,
  4. இதே ஆண்டு துருக்கியின் கோன்யா நகரப் போட்டியில் முதலிடம்,
  5. 2007 ஆம் ஆண்டு பிரான்சின் தன்னாட்சிப் பகுதியான சௌட்ரான் நகரப் போட்டியில் முதலிடம்,
  6. இதே ஆண்டு துருக்கி நாட்டின் கேனாக்கேல் நகரப் போட்டியில் முதலிடம்,
  7. 2008 ஆம் ஆண்டு பிரான்சின் தன்னாட்சிப் பகுதியான லா பெரெ போட்டியில் முதலிடம்,
  8. இதே ஆண்டு பிரான்சின் தன்னாட்சிப் பகுதியான நிமெசு போட்டியில் முதலிடம்,
  9. இதே ஆண்டு அசர்பைசான் நாட்டின் பக்கூ நகரப் போட்டியில் இரண்டாமிடம்,
  10. 2010 ஆம் ஆண்டு ஈரானில் நடைபெற்ற கேசுப்பியன் கோப்பை போட்டியில் முதலிடம்

2007 ஆம் ஆண்டு சுவீடனின் லகோல்ம் நகரில் நடைபெற்ற போட்டியில் இவர் தங்கப் பதக்கம் வென்றார். இங்கு எதிர்பாராவிதமாக இவர் தங்கியிருந்த விடுதியின் அறைக்கதவு உடைக்கப்பட்டு மடிக்கணினி, விமானப் பயணச்சீட்டு மற்றும் பிற ஆவணங்கள் அனைத்தும் திருடப்பட்டன. கடந்த ஒன்பது ஆண்டுகளாக பரித் அசர்பைசானின் இளையோர் சதுரங்க அணியின் பயிற்சியாளராக இருந்து வருகிறார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பரித்_அப்பாசோவ்&oldid=3857261" இலிருந்து மீள்விக்கப்பட்டது